விரைவில் களமிறங்கும் டெலிகிராம் வீடியோ கால் வசதி!

|

கொரோனா வைரஸ் உலகில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்றுதான் கூறவேண்டும், இந்நிலையில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி கொடுத்துள்ளது. அவ்வாறு வேலை செய்யும் மக்கள் வீடியோ கான்பரன்சிங் வசதிக்காக ஜூம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை பயன்படுத்துகின்றனர்.

விரைவில் களமிறங்கும் டெலிகிராம் வீடியோ கால் வசதி!

மேலும் ஜூம் செயலிக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனமும் கடந்த வாரம் மெசஞ்சர் ரூம்களை அறிவித்தது, இந்த பட்டியலில் டெலிகிராம் நிறுவனமும் இணைந்துள்ளது. தற்போது வரையிலாக வீடியோ கால் அம்சத்தை டெலிகிராம் ஆதரிக்கவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் பயனர்களுக்கு பாதுகாப்பான க்ரூப் வீடியோ கால் அம்சத்தை கொண்டு வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவந்த தகவலின் அடிப்படையில் 2020-ம் ஆண்டில் வீடியோ அழைப்புகள் என்பது 2013-ம் ஆண்டில் மெசேஜ் அனுப்புவது போன்றவை என்று கூறியுள்ளது. இருப்பினும் க்ரூப் கால் அம்சத்தின் குறிப்பிட்ட வெளியீட்டு தேதியை டெலிகிராம் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

விரைவில் களமிறங்கும் டெலிகிராம் வீடியோ கால் வசதி!

குறிப்பாக ஒரு வருடத்திற்கு முன்பு டெலிகிராம் 300மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களை தன்வசம் கொண்டு இருந்தது, தற்போது 400மில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் மன்த்லி யூஸர்களை கொண்டுள்ளது. ஆக ஒரு புதிய அம்சத்தினை கொண்டு வருவதற்கு இதுதான் சரியான நேரம் என்பதை டெலிகிராம் நன்கு அறியும்.

இப்போது வெளிவந்த தகவலின் அடிப்படையில் உலகெங்கிலும் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் கொரோனா லாக்டவுன் விளைவாக பள்ளிகளிலிருந்து விலகி இருப்பதாகவும், இந்த தருணத்தில் கல்வி சார்ந்த கருவிகள் தேவை என்றும் டெலிகிராம் கூறுகிறது.

மேலும் மாணவர்களுக்கு உதவ, அனைத்து பாடங்களுக்கும் நிலைகளுக்குமண தரவுத்தளத்தை உருவாக்க ஆன்லைன் எஜிக்கேஷன் டெஸ்ட் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு 4,00,000 யூரோ (இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.3,30,13,200) விநியோகிப்பதாகவும் டெலிகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் களமிறங்கும் டெலிகிராம் வீடியோ கால் வசதி!

இந்த கொரோனா தொற்றுநோய் தொடர்பான உண்மையான செய்திகளையும் அப்டேட்களையும் பகிர்ந்து கொள்ள டெலிகிராம் நிறுவனம் 17வெவ்வேறு நாடுகளின் சுகாதர அமைச்சகங்கள் மற்றும் அரசாங்கங்களுடன் ஒத்துழைத்துள்ளது உதரணமாக இந்தியாவின் மைகோவ் கொரோனா நியூஸ்டெஸ்க்கை குறிப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Telegram to Introduce Group Video Calling Feature Soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X