வாட்ஸ்அப்-ஐ பின்னுக்கு தள்ளி டெலிகிராம் முதலிடம்.. ஜனவரியில் இந்தியாவில் மட்டும் இவ்வளவு டவுன்லோடா?

|

சென்சார் டவர் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, டெலிகிராம் மொபைல் ஆப்ஸ் 2021 ஜனவரியில் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேமிங் அல்லாத பயன்பாடாக முன்னேறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பதிவிறக்கங்களின் எண்ணிக்கையில் 24 சதவீதம் இந்தியாவிலிருந்து நடைபெற்றுள்ளது என்று அறிக்கை விபரம் குறிப்பிடுகிறது.

63 மில்லியன் முறைக்கும் மேல் பதிவிறக்கம்

63 மில்லியன் முறைக்கும் மேல் பதிவிறக்கம்

டெலிகிராம் மெசேஜிங் பயன்பாடு கடந்த மாதம் சுமார் 63 மில்லியன் முறைக்கும் மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி மாதத்தில் இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 15 மில்லியன் புதிய டெலிகிராம் பயனர்கள் டெலிகிராம் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தத் துவங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2020 இல் அதன் பதிவிறக்கங்களை விட இந்த ஆண்டு 3.8 மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் தான் காரணம்

வாட்ஸ்அப் தான் காரணம்

இந்த திடீர் பதிவிறக்கங்களின் அதிகரிப்பு வாட்ஸ்அப்பின் தனியுரிமைக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வாட்ஸ்அப் புதிய கொள்கை சர்ச்சை காரணமாகப் பல பயனர்கள் வாட்ஸ்அப்பை நிராகரித்து டெலிகிராமை பயன்படுத்தத் தூண்டியது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட பட்டியலில் டிக்டாக் இரண்டாவது இடத்திலும், சிக்னல் மற்றும் பேஸ்புக் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.

இந்தியாவிலிருந்து இவ்வளவு டவுன்லோடா?

இந்தியாவிலிருந்து இவ்வளவு டவுன்லோடா?

இந்த ரேங்கிங் மாற்றத்தால் இதற்கு முன்னர் மூன்றாவது இடத்தில் இருந்த ​​வாட்ஸ்அப் பயன்பாடு அதன் முந்தைய மூன்றாவது இடத்திலிருந்து ஜனவரி மாதம் ஐந்தாவது இடத்திற்குச் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெலிகிராமை இந்தியாவிலிருந்து 24 சதவிகிதமும், இந்தோனேசியாவிலிருந்து மொத்த பதிவிறக்கங்களின் எண்ணிக்கை 10 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் 62 மில்லியன் பதிவிறக்கம்

டிக்டாக் 62 மில்லியன் பதிவிறக்கம்

டிக்டாக் 62 மில்லியன் பதிவிறக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, இது 17 சதவிகித பதிவிறக்கங்களைச் சீனாவுடன் கொண்டுள்ளது, அமெரிக்கா 10 சதவிகிதமாக உள்ளது. பல சீன பயன்பாடுகளைத் தடுக்க கடந்த ஆண்டு அரசாங்கம் எடுத்த முடிவுக்குப் பின்னர் இந்தியாவில் இன்னும் டிக்டாக்கிற்கு தடை நீடிக்கிறது. டெலிகிராம் பயன்பாட்டை இன்னும் நீங்கள் பயன்படுத்திப் பார்க்கவில்லை என்றால் உடனே இன்ஸ்டால் செய்து ட்ரை செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
Telegram the Most Downloaded App Globally in January Says Sensor Towers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X