Telegram செயலியில் வந்தது புத்தம் புதிய அம்சங்கள்.! உற்சாகத்தில் பயனர்கள்.!
வாட்ஸ்அப் செயலியைப் போன்றே டெலிகிராம் செயலி கூட அவ்வப்போது புதிய புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் உலகம் முழுவதும் டெலிகிராம் செயலியை விட வாட்ஸ்அப் செயலியை தான் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். இருந்தபோதிலும் வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்க்க டெலிகிராம் புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது.
தற்போது கூட டெலிகிராம் செயலியில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது பயனர்களுக்கு டெலிகிராம் செயலியை பயன்படுத்து மிகவும் சுலபம் என்றாலும், இதன் செயலில் அதிகப்படியாக பேட்டரி உறிஞ்சுகிறது. தற்போது இதனை சரி செய்யும் வகையில் பல்வேறு புதிய அப்டேட்களை கொண்டுவந்துள்ளது டெலிகிராம் நிறுவனம்.

பவர் சேவிங் மோட்
மேலே குறிப்பிட்டது போல் பேட்டரி பிரச்சனையைச் சரி செய்ய பவர் சேவிங் மோட் அம்சத்தை கொண்டுவந்துள்ளது டெலிகிராம். ஆனாலும் ஏற்கனவே Reduce motion Setting மூலமாக Animations நிறுத்தப்பட்டாலும் பேட்டரி நீட்டிக்க இப்போது Power Saving Mode அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த பவர் சேவிங் மோட் (Power Saving Mode) ஆனது பேட்டரி ஒரு குறிப்பிட்ட அளவு குறைந்ததும் தானாகவே ON-ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. பின்பு இதை நாம் பயன்படுத்த settings பகுதிக்குச் சென்று Power Saving Mode On செய்தால் போதும். குறிப்பாக இந்த அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

Granular Play Speed வசதி
டெலிகிராம் செயலியில் நாம் பார்க்கும் வீடியோ மற்றும் Podcast, ஆடியோ போன்றவற்றின் வேகத்தை குறைக்கவும் அதிகரிக்கவும் முடியும். அதற்கு
தான் Granular Play Speed அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது பயனர்கள் 0.2x வேகத்தில் தொடங்கி 2.5x வேகம் வரை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Time அம்சம்
டெலிகிராம் செயலியில் உள்ள ஒரு குழுவில் நாம் ஒரு மெசேஜ் பார்த்தால் அந்த மெசேஜ் எந்த நேரத்திற்கு பார்க்கப்பட்டது என்பது போன்ற விவரங்களை
காணமுடியும். இதுதவிர டெலிகிராம் செயலியில புதிதாக பல Animation மற்றும் Emoji, Auto-send Invite Links அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் ஐஒஎஸ் பயனர்கள் One Tap மூலம் அனைத்து Chat இணைப்புகளையும் Mark All செய்யலாம். குறிப்பாக இந்த புதிய அப்டேட்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.
வாட்ஸ்அப் புதிய அம்சம்
அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனமும் ஒரு அட்டகாசமான அம்சத்தை விரைவில் கொண்டுவர உள்ளது. அதாவது வாட்ஸ்அப் தளத்தில் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தாத குழுக்களை ( வாட்ஸ்அப் குரூப்) எளிமையாக நீக்க ஒரு புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த அம்சம் மூலம் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் மெமரியை சேமிக்கலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.
குறிப்பாக வாட்ஸ்அப் செயலி ஆனது டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ளப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதேபோல் இந்த தளத்தில் பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் பல்வேறு குழுக்களை உருவாக்கி தகவல்களைப் பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் Expiring குரூப்ஸ் என்ற அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தகவலை Wabetainfo தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் மூலம் தான் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தாத வாட்ஸ்அப் குழுக்களை அடையாளம் கண்டு நீக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிறந்தநாள், திருமணம், ட்ரீட் போன்றவற்றை நண்பர்கள், உறவினர்களுக்கு மத்தியில் நினைவுபடுத்தும் விதமாக வாட்ஸ்அப் செயலியில் நாம் குழுக்கள் உருவாக்குவது உண்டு. அதன் தேவை முடிந்து பின்னர் அந்த குரூப் அப்படியே பயன்படுத்தப்படாமல் ஆக்டிவாக இருக்கும். ஆனால் அதில் எந்தவொரு மெசேஜும் இருக்காது. ஆனால் போனின் ஆப் ஸ்பேஸ் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும். அதை நீக்க தான் இந்த புதிய அம்சம் உதவும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் எந்த தேதியில் அந்த குழுவை தாங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கலாம் என்பதை முன்கூட்டியே திட்டமிட முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதனை நாள், வாரம், மாத கணக்கில் நிர்ணயிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குழு காலாவதியாகும் தேதி வந்ததும் பயனர்களுக்கு நோட்டிபிகேஷன் வரும். குறிப்பாக இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








