Just In
- 18 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 20 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 20 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 21 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
Telegram செயலியை பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு: வாவ் சொல்லவைக்கும் புதிய அப்டேட்கள் கிடைத்தது.!
வாட்ஸ்அப் செயலியை போன்று டெலிகிராம் செயலியையும் உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்குப் போட்டியாக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது இந்த டெலிகிராம். இந்நிலையில் டெலிகிராம் செயலிக்கு 2022-ம் ஆண்டின் கடைசி அப்டேட் கிடைத்துள்ளது.

ஐஓஎஸ் (ஐபோன்)
அதாவது சமீபத்தில் தான் டெலிகிராம் செயலிக்கு புதிய அப்டேட் கிடைத்தது. அதுவும் இந்த புதிய அப்டேட் ஆனது ஐஓஎஸ் (ஐபோன்) தளத்திற்காக மேம்படுத்தப்பட்டுள்ளன. உங்களது கான்டக்ஸ்ட்ஸில் இருப்பவர்களின் ப்ரொபைல் படங்களை மாற்றுவதற்கான வசதி, டிராயிங் வரையும் கருவி உள்ளிட்ட சில அசத்தலான அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இப்போது வழங்கப்பட்ட புதிய அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டிராயிங் டூல்ஸ்
தற்போது டெலிகிராம் செயலியில் புதிதாக டிராயிங் டூல்ஸ் வந்துள்ளன. இதைக் கொண்டு புகைப்படங்களை மங்கலாக்கும் வசதி, இமெஜ்களில் எழுத்துக்களைச் சேர்க்கும் வசதி, ஈமோஜிகளை சேர்க்கும் வசதி எனப் பல வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த புதிய டிராயிங் டூல்ஸ் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

ஃப்ரொபைல் இமேஜ் வசதி
போனில் உங்களது கான்டகஸில் உள்ளவர்களுக்கு பிரத்தியேகமாக நீங்களே ஒரு ப்ரொபைல் பிக்சர்களை வைக்க முடியும். ஆனால் இந்த ப்ரொபைல் பிக்சர் ஆனது உங்களுக்கு மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீங்களும் ஒரு பொதுவான ஃப்ரொபைல் இமேஜ் படத்தை அமைக்கலாம். இது மற்ற அனைவருக்கும் தெரியும்.

Hidden மீடியா
டெலிகிராம் செயலியில் நீங்கள் இப்போது Hidden மீடியாவை அனுப்ப முடியும். குறிப்பாக நீங்கள் மின்னும் லேயருடன் படம் அல்லது வீடியோவை பகிர வேண்டும். எதிர்முனையில் இருப்பவர்கள் நீங்கள் அனுப்பியுள்ள மீடியாவைத் திறந்தவுடன் அவை தானானவே மறைந்துவிடும்.
குறிப்பாக Hidden மீடியாவை அனுப்ப, யவவயஉhஅநவெ மெனுவிற்குச் செல்லவேண்டும், அங்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மீடியாவைத் தேர்வு செய்த பின்னர், டெலிகிராம் அரட்டையில் உங்கள் புகைப்படத்தில் Hide With Spoiler என்பதைக் கிளிக் செய்யவும். அவ்வளவு தான்.

ஜீரோ ஸ்டோரேஜ் வசதி
போனில் குறைந்த மெமரியுடன் டெலிகிராம் செயலியை பயன்படுத்தும் பயனர்களுக்கு ஜீரோ ஸ்டோரேஜ் வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதாவது இந்த வசதி அனைத்து படங்களையும், வீடியோக்களையும் டெலிகிராம் கிளவுட்டில் சேமிக்கும். பின்பு தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்யலாம்.
குறிப்பாக இது பயனர்கள் கேச் அளவை (போனில் டெலிகிராம் எவ்வளவு சேமிப்பகத்தை பயன்படுத்தலாம்) மற்றும் கேச் மீடியாவை ( ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம்) எப்போது டெலிட் செய்ய வேண்டும் என்பதைத் தேர்வு செய்யலாம், இது தானாகவே போனில் உள்ள மெமரியை நிரம்பாமல் பார்த்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் நிறுவனம்
அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனமும் சமீபத்தில் ஒரு அட்டகாசமான அமசத்தை அறிமுகம் செய்தது. அதாவது சிலர் வாட்ஸ்அப் செயலியில் தெரியாமல் அனுப்பிய மெசேஜ் அல்லது புகைப்படங்களை நீக்குவதற்கு Delete for Everyone கொடுப்பதற்கு பதிலாக தவறுதலாக Delete for Me என்பதைக் கொடுத்துவிட்டு அவதிப்படுவார்கள். தற்போது இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் குரூப் அல்லது தனிப்பட்ட நபருக்குத் தவறுதலாக மெசேஜ் அல்லது புகைப்படங்களை அனுப்பும் பட்சத்தில் அதனை Delete for Everyone என்பதை கொடுத்து யாரும் பார்க்காதவாறு செய்துவிடலாம். ஆனால் சில நேரங்களில் Delete for எவேர்யோனே என்பதை கொடுப்பதற்குப் பதிலாக Delete for Me கொடுத்துவிட்டு அவதிப்பட்ட நிலைமை வந்திருக்கும்.

பயனுள்ள வகையில் இருக்கும்..
குறிப்பாக Delete for Me கொடுத்து அழிக்கப்பட்ட மெசேஜ் அனுப்பிய நபருக்கு மட்டும் தெரியாமல் இருக்கும் ஆனால் குரூப்பில் இருக்கும் மற்றவர்கள் அந்த மெசேஜை எளிமையாக பார்க்க முடியும். பின்பு அனுப்பியவர் அந்த மெசேஜை எதும் செய்ய முடியாத நிலை இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு ஒரு புதிய அம்சத்தைக் கொண்டுவந்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.
அதாவது Delete for Me கொடுத்து அழிக்கப்பட்ட ஒரு மெசேஜை Undo கொடுத்து திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். அதனை ரெக்கவர் செய்தபின்பு Delete for Everyone கொடுக்க விரும்பினால் கொடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். அதேபோல் Delete for Me கொடுத்து அழிக்கப்பட்ட மெசேஜ் மீது Undo ஆப்ஷன் 5 நொடிகள் திரையில் தோன்றும். அந்த 5 நொடிகளில் Undo கொடுத்து விட்டால்போதும், Delete for Me கொடுத்து அழிக்கப்பட்ட மெசேஜ் திரும்பவும் தோன்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470