இனி கடல் உணவுகளை வாங்க பிரச்சனை இருக்காது.! தமிழக அரசின் மீன்கள் செயலி அறிமுகம்.!

|

கொரோனா பாதிப்பு இந்தியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலைபடி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. மற்ற சில நாடுகளோடு ஒப்பிடுகையில் இது குறைவு என்றாலும் இந்தியாவில் பிற நாட்டவர்கள் பாராட்டு வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்

அதேபோல் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது 20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்
என்பதும் 3 சதவீதம் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 மீன்கள்

மேலும் இந்த முழு அடைப்பின் போது சென்னையில் உள்ள கடல் உணவு பிரியர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசுமீன்கடை-களைச் சுற்றியுள்ள வீடுகளுக்கு உணவுகளை வழங்குவதற்கு மீன்கள் (Meengal) என்ற செயலியைஅறிமுகம் செய்துள்ளது.

சானிட்டைஸர்ல ஒரு டுவிஸ்ட் இருக்கு: வைரல் வீடியோ., CM Palaniswamy கொடுத்த ரியாக்‌ஷன்!சானிட்டைஸர்ல ஒரு டுவிஸ்ட் இருக்கு: வைரல் வீடியோ., CM Palaniswamy கொடுத்த ரியாக்‌ஷன்!

சென்னையில் இருக்கும் அண்ணா நகர்

அதாவது சென்னையில் இருக்கும் அண்ணா நகர், சாந்தோம், தேனம்பேட்டை உள்ளிட்ட சில இடங்களில் அரசாங்கத்தால் நடத்தப்படும் மீன் கடைகள் உள்ள நிலையில், இந்த பகுதிகளில் தற்போது இந்த app-பயன்பாடு மக்களுக்கு கடல் உணவு வகைகளை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 என்ற வலைதளத்தின்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் www.meengal.com என்றவலைதளத்தின் மொபைல் ஆப் பயன்பாட்டை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசு முன்னர் குறைந்த
அளவிலான கடல் உணவுகளுக்கு வீட்டு விநியோக சேகைளை அளிக்க வலைத்தளம் மற்றும் அதனுடன் தொடர்புடையலேண்ட்லைன் எண் 044-24956896-னை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மீன்வள மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின்

குறிப்பாக தமிழ்நாடு மீன்வள மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் (TNFDC) முன்முயற்சியான இந்த சேவையானது,புதிய
நடவடிக்கையை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக வீட்டு விநியோகத்திற்கான கூடுதல் இடங்களை உள்ளடக்கியுள்ளது. தற்சமயம் 5கி.மீ சுற்றளவில் அண்ணா நகர், சாந்தோம், தேனம்பேட்டை, விருகம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான மீன் கடைகளைச் சுற்றி வாழும் மக்கள் முழு அடைப்பு காலத்தின் போதும் காலை 9.30மணி முதல் 12.30 மணி வரை தங்கள் ஆர்டர்களை பெறமுடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

கேட்டுகொண்டார்

மேலும் இந்த மொபைல் செயலி மூலம் கடல் உணவை ஆர்டர் செய்வதன் மூலம் அவர்களின் இயக்கத்தைகட்டுப்படுத்துமாறு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களை கேட்டுகொண்டார், பின்பு இந்த செயலி
கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை

வலைதளம் அல்லது செயலி மூலம் மக்கள் நெத்திலி, மத்தி (எண்ணெய் மத்தி), காரை போடி மற்றும் வவ்வல்உள்ளிட்ட பிற வகைகளின் மீன்களை பெறலாம். பின்பு இனப்பெருக்க காலத்தில் (ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை) மீன்பிடித் தடை பூட்டப்பட்டதோடு, தமிழ்நாட்டின் மீன்பிடி சமூகத்திற்கு இரட்டை அடியாக வந்தது, இது வாழ்வாதாரத்தைகடுமையாக பாதித்தது.

பாரம்பரிய மீனவர்களுக்கு கடலுக்குள் செல்லவும்

ஆனால் ஏப்ரல் 14-ம் தேதி மாநில அரசு பாரம்பரிய மீனவர்களுக்கு கடலுக்குள் செல்லவும், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து தங்கள் பிடிப்பை விற்கவும் அனுமதிக்கும் ஒரு அரசாங்கஉத்தரவை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

Best Mobiles in India

English summary
Tamilnadu Government Launched New Meengal Mobile App For Seafood Delivery: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X