நம்புங்கள் டூயல் கேம் இருக்கு ஆனால் விலை வெறும் ரூ.3999/- மட்டுமே.!

|

இந்திய மொபைல் சந்தையில் இன்று ஸ்வைப் நிறுவனம் ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஸ்வைப் எலைட் டூயல் என்ற இந்த புதிய மாடலின் விலை ரூ.3999 மட்டுமே. பின்பக்கம் டூயல் கேமிரா உள்ள போன்களில் இந்த மாடல்தான் விலை குறைந்த மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போன் மெடிகோர் வன்பொருள் கொண்டு இயங்குகிறது. இது இந்த மாடலுக்கு ஒரு பலவீனமாக இருந்தாலும், இந்த விலைக்கு நீங்கள் இதை விட அதிகம் எதிர்பார்க்க கூடாது. மேலும் இந்த எலைட் டூயல் மாடல் 4ஜி VoLTE சப்போர்ட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

மூன்று வண்ணங்களில்

மூன்று வண்ணங்களில்

இதனால் இந்த மாடலில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டை பயன்படுத்தலாம். இந்த மாடலை நீங்கள் ஆன்லைன் மூலம் இகாமர்ஸ் இணையதளங்களில் கோல்ட், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் பெற்று கொள்ளலாம்.

கேஷ்பேக்

கேஷ்பேக்

மேலும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஸ்வைப் நிறுவனம் இணைந்துள்ளதால் சலுகை விலையாக ரூ.2200 விலைக்கு கேஷ்பேக் சலுகையை பெற்று கொள்ளலாம்.

மைக்ரோ எஸ்டி

மைக்ரோ எஸ்டி

இந்த மாடலின் அம்சங்கள் குறித்து பார்ப்போம். இந்த மாடல் 5 இன்ச் FWVGA டிஸ்ப்ளேவை கொண்டது. மேலும் இந்த மாடலின் ஸ்க்ரீன் பாதுகாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடலில் 1.3GHz குவாட்கோர் மெடியா டெக் சிப்செட், 1GB ரேம் மற்றும் 8GB ஸ்டோரோஜை கொண்டது. மேலும் 32GB வரை ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் நீட்டித்து கொள்ளலாம்

கேமிரா

கேமிரா

மேலும் இந்த ஸ்வைப் டூயல் மாடலில் டூயல் பின்பக்க கேமிரா உள்ளது. பிரைமரி கேமிரா 8MP அளவிலும், செகண்டரி கேமிரா 2MP அளவிலும் உள்ளது. பிரைமரி கேமிரா மூலம் RGB ஷாட்கள் படம் பிடிக்கலாம். இந்த மாடலின் முன்பக்க கேமிரா 5MP அளவில் உள்ளது. முன்பக்க மற்றும் பின்பக்க கேமிராக்களில் LED பிளாஷ் வசதி உள்ளது என்பது கூடுதல் சிறப்பு

யூஎஸ்பி போர்ட்

யூஎஸ்பி போர்ட்

மேலும் இந்த மாடலில் டூயல் சிம், வைபை 802.11 b/g/n, புளூடூத் 4.0, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி போர்ட் ஆகியவை உண்டு. மேலும் 3.5mm ஹெட்போனும் உண்டு.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
ஜியோ கணக்கில்

ஜியோ கணக்கில்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் சலுகையை பயன்படுத்தி கொண்டால் இந்த போனின் விலை ரூ.1799 என்பது மட்டுமே. சலுகை தொகையான ரூ.2200, வாடிக்கையாளரின் ஜியோ கணக்கில் வரவு வைக்கப்பட்டு அதற்கு 50 வவுச்சர்கள் அளிக்கப்படும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Swipe Elite Dual With 4G VoLTE Support and Dual Rear Cameras Launched at Rs 3,999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X