Home
Apps

நல்ல வீட்டு சாப்பாடு சமைச்சா இல்லத்தரசிகளுக்கு வேலை வாய்ப்பு.! புதிய ஸ்விகி டெய்லி அறிமுகம்.!

வீட்டு சாப்பாடு இல்லாமல் வெளி ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு, குறைந்த செலவில் ருசியான வீட்டு சாப்பாட்டை வழங்க ஸ்விகி நிறுவனம் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்விகி டெய்லி:வீட்டு சாப்பாடு சமைச்சா இல்லத்தரசிகளுக்கு வேலை வாய்ப்பு!

வீட்டுச் சாப்பாட்டின் ருசியைச் சுவைப்பதற்காக ஒரு புதிய முயற்சியாய் "ஸ்விகி டெய்லி" என்ற புதிய செயலி ஒன்றை ஸ்விகி நிறுவனம் நேற்று மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்துள்ளது.

ஸ்விகி டெய்லி அறிமுகம்

ஸ்விகி டெய்லி அறிமுகம்

வீட்டுச் சாப்பாட்டை மிஸ் செய்பவர்களுக்கும், வீட்டுச் சாப்பாட்டின் ருசியை ட்ரை செய்ய நினைப்பவர்களுக்கும், இந்த ஸ்விகி டெய்லி ஆப் உதவும் என்று ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்விகியின் இந்த புதிய சேவையை அந்நிறுவனம் ஹரியானாவில் உள்ள குருகிராம் நகரில் மட்டும் தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய முயற்சிக்கான காரணம் இதுதான்

புதிய முயற்சிக்கான காரணம் இதுதான்

இதனைத் தொடர்ந்து, இந்த மாதத்தின் இறுதிக்குள் பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது. வீட்டுச் சாப்பாட்டை ருசிக்க, ஸ்விகி பயனர்கள் ஆர்வம் காட்டுவதாகக் கிடைத்த தகவல் படி, ஸ்விகி நிறுவனம் இம்முயற்சியைக் கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறைந்த விலையில் ருசியான சாப்பாடு எவ்வளவு தெரியுமா?

குறைந்த விலையில் ருசியான சாப்பாடு எவ்வளவு தெரியுமா?

இந்த ஸ்விகி டெய்லி சேவையின் மூலம் பயனர்களுக்கு மிகக் குறைந்த விலையில் அருமையான வீட்டு உணவை வழங்க முடியுமென்று ஸ்விகி தெரிவித்துள்ளது. ஒரு வேலை சாப்பாட்டிற்கான துவக்க விலையே வெறும் ரூ.50 என்பது தான் கூடுதல் சிறப்பு. ஸ்விகி டெய்லி சேவையின் மூலம் தரமான உணவுகளை வெறும் ரூ.50 முதல் ரூ.100க்குள் பயனர்கள் ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருகிறது.

இல்லத்தரசிகளுக்கு வேலை வாய்ப்பு

இல்லத்தரசிகளுக்கு வேலை வாய்ப்பு

அதேபோல் ஸ்விகி அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஸ்விகி டெய்லி சேவையின் மூலம் பல சிறு வியாபாரிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமென்றும் ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது. உங்களுக்கு பிடித்தமான வீட்டுச் சாப்பாட்டு மெனுவை பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்துகொள்ளலாம்.

மாதாந்திர சேவையும் உண்டு

மாதாந்திர சேவையும் உண்டு

ஸ்விகி டெய்லி சேவையைப் பயன்படுத்தும் பயனர்கள் "ஒரு வேலை" உணவிற்காக அல்லது "மூன்று வேலை" உணவிற்காக என அவர்களின் தேவைக்கு ஏற்றாற்போல் ஆர்டர் செய்துகொள்ளலாம். அதுமட்டுமின்றி உங்களுக்குப் பிடித்த உணவு தயாரிப்பாளரிடம் மாதாந்திர சேவைக்கும் ஸ்விகி டெய்லி ஆப் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Swiggy Launched Swiggy Daily New App For Home Food Lovers : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X