நீங்கள் கவனிக்க மறந்த கூகுள் மேப்ஸின் சூப்பர் டிப்ஸ்.! இனி எல்லாம் ஈசி தான்!

|

கூகுள் மேப்ஸ் என்பது கூகுள் உருவாக்கிய வலைத்தள மேப்பிங் சேவையாகும். இந்த மேப்பிங் சேவையில் உலகத்தில் உள்ள அனைத்து இடங்களின் செயற்கைக்கோள் படங்கள், வான்வழி புகைப்படங்கள், தெருக்களின் வரைபடங்கள், 360° வியூ புகைப்படங்கள், லைவ் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்துக்கு நிலைமைகள் போன்ற தகவல்களை இந்த கூகுள் மேப் சேவை வழங்குகிறது.

பயணிப்பதற்கான பாதை திட்டமிடல்

பயணிப்பதற்கான பாதை திட்டமிடல்

நடை பயணம், மோட்டர் பைக், கார், சைக்கிள் மற்றும் விமானம் அல்லது பொது போக்குவரத்து மூலம் பயணிப்பதற்கான பாதை திட்டமிடல், கால அவகாசத்தின் தகவல், மாற்று வழி மற்றும் செல்லும் வழியில் உள்ள சிறப்பிடங்கள் ஆகியவற்றின் தகவலை வழங்குகிறது.

புதிய மாற்றங்களையும் சோதனை செய்துவரும் கூகுள்

புதிய மாற்றங்களையும் சோதனை செய்துவரும் கூகுள்

கூகுள் மேப்ஸ் இயன்றளவில் பல எல்லைகளைக் கடந்து, யாரும் எதிர்பார்த்திடாத பல புதிய அம்சங்களைக் களமிறக்கி மக்களுக்குப் பெரிதும் பயனுள்ள ஒரு முக்கிய பயன்பாட்டுச் செயலியாக மாற்றியுள்ளது. இன்னும் மக்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் விதத்தில் பல புதிய மாற்றங்களையும் சோதனை செய்து வருகிறது.

ஃப்ரீ., ஃப்ரீ., ஃப்ரீ: செட்-டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கும் ஜியோ: வழிமுறைகள் இதோ?ஃப்ரீ., ஃப்ரீ., ஃப்ரீ: செட்-டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கும் ஜியோ: வழிமுறைகள் இதோ?

மறைநிலை முறை

மறைநிலை முறை

மேலும் கூகுள் நிறுவனம், சமீபத்தில் கூகுள் மேப்ஸ் இன் புதிய சேவைகளாக மறைநிலை முறை (Incognito mode), பார்வையற்றவர்களுக்கு உதவும் கூடுதல் வாய்ஸ் சேவைகள் மற்றும் பலவற் றை தற்பொழுது மேப்ஸ் செயலியில் கூகுள் நிறுவனம் இணைத்துள்ளது.

இது தெரிந்தாலே இனி எல்லாம் ஈசி தான்!

இது தெரிந்தாலே இனி எல்லாம் ஈசி தான்!

கூகுள் மேப்ஸ் அப்-ஐ, நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டிய சில முக்கியமான டிப்ஸ்கள் இவை தான். இவற்றைத் தெரிந்துகொண்டால் கூகுள் மேப்ஸ் மூலம் இன்னும் நீங்கள் அதிகப்படியான சிறப்பான விஷயங்களைக் அறிந்துகொண்டு, கூகுள் மேப்ஸ் மூலம் பல நன்மைகளை அனுபவிக்கலாம்.

1. ஷேர் லொகேஷன்

1. ஷேர் லொகேஷன்

நீங்கள் உங்கள் நண்பரைச் சந்திக்கிறீர்கள் என்றால், இந்த ஷேர் லொகேஷன் அம்சம் உங்களைக் கண்டுபிடிப்பதை உதவும். IOS அல்லது ஆண்ட்ராய்டு போனில் கூகுள் மேப்ஸ் ஓபன் செய்து, மேல் இடது மூலையில் உள்ள ஆப்ஷன் மெனுவை கிளிக் செய்து "ஷேர் லொகேஷன்" கிளிக் செய்யவும். நீங்கள் இருக்கும் இருப்பிடத்தை எவ்வளவு காலம் காண்பிக்க வேண்டும், யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை இங்கிருந்து நீங்கள் தீர்மானிக்கலாம்.

2. பிடித்த இடங்களைச் சேவ் செய்யுங்கள்

2. பிடித்த இடங்களைச் சேவ் செய்யுங்கள்

உங்களுக்குப் பிடித்த உணவகங்கள் அல்லது பூங்காக்கள் அல்லது புத்தகக் கடைகள் என அனைத்து பிடித்தமான இடங்களை ஒரே இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள இந்த அம்சம் உங்களுக்கு உதவுகிறது. பிடித்தமான இடங்களைத் தேர்வு செய்து "சேவ்" என்பதை கிளிக் செய்யவும். பின்னர், "நியூ லிஸ்ட்" என்பதை கிளிக் செய்து அதற்கு ஒரு பெயரைக் கொடுங்கள். இப்போது, நீங்கள் உருவாக்கிய லிஸ்ட்டின் கீழ் புதிய இடங்களைச் சேர்க்கலாம். இந்த பட்டியல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

டிச., 26 சூரிய கிரகணம்: தமிழகத்தில் எங்கெங்கு தெரியும், விளைவு என்ன ?டிச., 26 சூரிய கிரகணம்: தமிழகத்தில் எங்கெங்கு தெரியும், விளைவு என்ன ?

3.

3. "ஃபார் யு" அம்சம்

கூகுள் மேப்ஸ் இல் உள்ள "ஃபார் யு" அம்சம், நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சுவாரசியமான இடங்கள் குறித்த தகவலைத் தருகிறது. இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் செல்லும் வழியில் உள்ள சிறப்பான இடங்களுக்கும் செல்ல முடியும். குறிப்பாக இந்த அம்சத்தின் கீழ் அருகில் உள்ள இடங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் வழங்கப்படுகிறது. உங்களுக்கு முன்பு சென்றவர்கள் பதிவிட்ட கருத்துக்களையும் பார்க்கலாம்.

4. பயணத்தைத் கம்யூட் உடன் திட்டமிடுங்கள்

4. பயணத்தைத் கம்யூட் உடன் திட்டமிடுங்கள்

கூகுள் மேப்ஸ் கீழ் உள்ள இந்த சிறந்த "கம்யூட்" அம்சத்தைப் பயன்படுத்தத் தவறாதீர்கள், இது உங்கள் தினசரி பயணத்திற்குத் தேவையான பயண நேரத்தை முன்பே திட்டமிட்டு உங்களுக்கு வழங்குகிறது. கம்யூட் அம்சத்தின் கீழ் நீங்கள் எப்பொழுதும் செல்லும் வழியில் உள்ள லைவ் டிராபிக் அப்டேட்கள் வெறும் ஒற்றை கிளிக்கில் வழங்கப்படுகிறது. போக்குவரத்துக்கு நெரிசலினால் தாமதம் ஏற்படும் நேரங்களில்,உங்களுக்கான மாற்று வழியையும் இந்த கம்யூட்" அம்சம் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Super Tips For Google Maps You Forgot To Notice : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X