Just In
- 8 hrs ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 9 hrs ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
- 10 hrs ago
பட்ஜெட் விலையில் பக்காவான ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறக்கும் Infinix: அறிமுக தேதி இதுதான்.!
- 10 hrs ago
வானில் தோன்றிய விசித்திரமான உருவம்.! மொத்த ஊரும் ஆன்னு அண்ணாந்து பார்த்த அதிசயம்.!
Don't Miss
- News
"பாஜகவில் சேர்ந்தா தப்பிச்சீங்க.. இல்லனா புல்டோசர்தான்" - காங்கிரசை ஓப்பனாக மிரட்டிய பாஜக அமைச்சர்
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Lifestyle
குளிர்காலத்துல இந்த ஆரோக்கியமான பானங்களை குடிப்பது... உங்க உடலுக்கு பல அதிசயங்கள செய்யுமாம்!
- Movies
கலக்கலாக வந்த கமல்... அதிர வைத்த ஹவுஸ்மேட்ஸ்... தொடங்கியது பிக் பாஸ் கிராண்ட் பினாலே
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!
நீடித்து வரும் ஊரடங்கினால் வீட்டிற்குள் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் பல விதமான செயல்கள் செய்து பொழுதைக் கழித்துவருகின்றனர். இன்னும் சிலர் புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று கூகிளிடம் ஐடியா கேட்டு பல புதிய சமையல் ரெசிபி போன்றவற்றை ட்ரை செய்து வருகின்றனர். என்ன கேள்வி கேட்டாலும் பதில் அளிக்கும் கூகிள் இடம் நீங்கள் சில கேள்விகளை எப்பொழுதுமே கேட்டுவிடக் கூடாது, குறிப்பாக இந்த 12 விஷயங்களைக் கூகிளிடம் கேட்கவே கூடாது.

மிக முக்கியமான பாதுகாப்பு செய்தி
இணையப் பயனர்களில் பெரும்பாலானோர், தங்களுக்குத் தேவைப்படும் கேள்விக்கான பதிலைக் கூகிள் சர்ச் மூலம் தெரிந்துகொள்வதையே பழக்கமாகக் கொண்டுள்ளனர். அடிப்படைத் தகவல் முதல், உணவுப் பழக்கம், டயட், சமையல், ஆன்லைன் வங்கி சேவை, ஆன்லைன் ஷாப்பிங், மருத்துவ ஆலோசனை வரை பல தகவல்களைக் கூகிள் சர்ச் இல் பல கோடி பயனர்கள் தேடி வருகின்றனர். இவர்களுக்கு எல்லாம் இது ஒரு எச்சரிக்கை செய்தி.

கூகிள் பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள்
முதலில் கூகுளில் நீங்கள் பார்க்கும் அனைத்து வலைத்தளங்களையும் கூகிள் உருவாக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தேடிப்பிடித்து வழங்கும் ஒரு ஆன்லைன் தளமாக மட்டுமே கூகுள் செயல்படுகிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

இந்த 12 விஷயங்களை மட்டும் தேடவே கூடாது
குறிப்பாகப் பொழுது போகாமல் கூட இந்த 12 விஷயங்களை மட்டுமே எப்பொழுதும் கூகுளில் தேடவே செய்யாதீர்கள், ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். இதனால் என்ன ஆபத்துகள் ஏற்படும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

1.கூகிள் மூலம் ஆபாச வலைத்தளங்களைத் தேடினால் ஏற்படும் ஆபத்து
கூகிள் மூலம் முதலில் ஆபாச வலைத்தளங்களைத் தேடுவதை நிறுத்துங்கள். ஆபாச தளங்களில் ஆபத்துகளை அதிகம் உள்ளது, கூகிள் அக்கௌன்ட் மூலம் நீங்கள் தேடினால் உங்கள் அக்கௌன்ட் விபரங்கள் முழுதும் அம்பலமாகவும் வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து உஷாராக இருங்கள். நீங்கள் தேடிய "மேட்டர்கள்" அனைத்தும், பிற்காலத்தில் நீங்கள் பார்வையிடும் மற்ற வலைத்தளங்களில் விளம்பரமாக காட்டப்படும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

விளம்பரங்கள் மூலம் சிக்க வாய்ப்பு
அதாவது உங்கள் கூகுள் தேடல் வரலாற்றின் அடிப்படையின் கீழ் உங்களுக்கான விளம்பரங்கள் நீங்கள் பயன்படுத்தும் மற்ற வலைதள பக்கங்களில் பிரதிபலிக்கும் என்பதே இதற்கான பொருள். உங்கள் ஸ்மார்ட்போனில் ஆபாச தேடல்களானது விளம்பரமாக எழாமல் இருக்க வேண்டும் என்றால், கூகிள் மூலம் ஆபாச வலைத்தளம் மற்றும் ஆபாச தகவல்கள் எதையும் அணுக வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2. கூகிளில் ஆன்லைன் வங்கி குறித்துத் தேடினால் ஏற்படும் ஆபத்து
உங்கள் வங்கியின் ஆன்லைன் வங்கி வலைத்தளங்களை Google இல் தேடுவதைத் தவிர்க்கவும். பிஷ்ஷிங் (phishing) செய்வதற்கான வாய்ப்புகள் கடுமையாக அதிகரித்து வருவதால், வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் போல் தோற்றமளிக்கும் போலி, உங்கள் வங்கியின் உள்நுழைவு ஐடி மற்றும் பாஸ்வோர்டை என்டர் செய்வதனால் சிக்கலில் சிக்கிக்கொள்வீர்கள்.

3. கூகிளில் கஸ்டமர் கேர் எண்கள் குறித்துத் தேடினால் ஏற்படும் ஆபத்து
கூகிளில், நிறுவனங்களின் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை ஒருபோதும் தேட வேண்டாம். மோசடி செய்பவர்கள், மோசடி செய்வதற்கான அசல் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்கள் போன்ற போலி எண்களை வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் வலைக்குள் வீணாய் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

4. கூகிள் மூலம் ஆப்ஸ் டவுன்லோட் செய்தால் ஏற்படும் ஆபத்து
உங்களுக்குத் தேவையான ஆப்ஸ்களை டவுன்லோட் செய்ய, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களிலிருந்து ஆப்-களை டவுன்லோட் செய்யுங்கள். மால்வேர் உடன் கூடிய ஆப்களை டவுன்லோட் செய்வதற்கான வாய்ப்பு கூகுள் தளத்தில் உள்ளது. இதுபோன்ற சிக்கலில் சிக்காமல் தப்பித்துக்கொள்ளுங்கள்.

5. கூகிளில் ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளைத் தேடினால் ஏற்படும் ஆபத்து
கூகிளில் மருந்துகள் அல்லது மருத்துவ அறிகுறிகளை ஒருபோதும் தேட வேண்டாம். அது உங்களின் உயிருக்கே ஆபத்தாய் மாறிவிடக் கூடும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, மருத்துவரை அணுகுவதே சிறந்தது. ஆன்லைன் இல் மருந்துகளை நீங்கலாக ஆர்டர் செய்வதையும் தவிர்த்துவிடுங்கள். மருத்துவ அறிகுறிகள் அனைத்தும் கூகுளில் துல்லியமாக இருக்காது என்பதை நினைவில் வையுங்கள்.

6. கூகிளில் ஊட்டச்சத்து அல்லது எடை குறைப்பு குறித்து தேடினால் ஏற்படும் ஆபத்து
ஊட்டச்சத்து அல்லது எடை குறைப்பு குறித்து உங்களின் உணவு பழக்கங்களை மாற்ற விரும்பினால், கூகிளிடம் ஆலோசனை கேட்பதை தவிர்த்துவிட்டு நேரடியாக ஒரு டயட்டீஷியனிடம் சென்று ஆலோசனை கேளுங்கள். ஒவ்வொரு மனித உடலும் தனித்துவமானது, உங்களுக்கு ஏற்றாற்போல் ஒரு பழக்க முறையை மருத்துவரின் ஆலோசனையுடன் துவங்குவதே நல்லது. கூகிள் பொதுவான வழிமுறைகளை மற்றும் ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறது, இதனால் உங்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் உஷார்.

7. கூகிளில் அரசாங்க வலைத்தளங்கள் குறித்து தேடினால் ஏற்படும் ஆபத்து
வங்கி வலைத்தளங்களைப் போலவே, நகராட்சி வரி, மருத்துவமனைகள் போன்ற அரசாங்க வலைத்தளங்கள் தான், மோசடி செய்பவர்களின் பிரதான இலக்குகளாகும். எனவே சரியான URL உங்களுக்குத் தெரிந்தால் நேரடியாக அந்த தளங்களுக்குச் செல்லுங்கள். போலியான மோசக்காரர்களின் வலைத்தளங்களில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

8. கூகிள் மூலம் சமூக வலைத்தள லாகின் செய்தால் ஏற்படும் ஆபத்து
சமூக வலைத்தள அக்கௌன்ட்களை கூகிளிலிருந்து லாகின் செய்யாதீர்கள். சமூக வலைத்தள ஆப்-கள் மூலம் எப்போதும் லாகின் செய்ய அறிவுறுத்தப்படுகிறது, கூகுள் மூலம் லாகின் செய்வது ஃபிஷிங்கிற்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

9. கூகிளில் தனிப்பட்ட நிதி மற்றும் பங்குச் சந்தை குறித்து தேடினால் ஏற்படும் ஆபத்து
ஆரோக்கியத்தைப் போலவே, தனிப்பட்ட நிதி ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது, அனைவரையும் பணக்காரர்களாக மாற்றும் ஒரு முதலீட்டுத் திட்டம் ஒருபோதும் இருக்க முடியாது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். எனவே, முதலீடு செய்யும் போது கூகிள் தேடல் முடிவுகளிலிருந்து ஆலோசனையைப் பெறுவதைத் தவிர்த்துவிடுங்கள்.

10. கூகிளில் ஈ-காமர்ஸ் வலைத்தளம் குறித்து தேடினால் ஏற்படும் ஆபத்து
ஈ-காமர்ஸ் வலைத்தளங்களில் கிடைக்கும் சலுகைகளுக்கான இலவச கூப்பன் தளங்கள் மற்றும் போலி ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள் கூகிள் தேடலில் அதிகரித்து வருகின்றன. இந்த தளங்களை கிளிக் செய்தால், உங்களின் ஆன்லைன் வங்கி விபரங்கள் திருடப்படும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

11. கூகிள் மூலம் ஆன்டி-வைரஸ் டவுன்லோட் செய்தால் ஏற்படும் ஆபத்து
ஆபத்திலிருந்து தடுப்பதற்கு தானே ஆன்டி-வைரஸ் பயன்படுத்துகிறோம். அதில் என்னப்பா சிக்கல் என்று கேட்குறீங்களா? காரணம் இருக்கு, இலவசமாகக் கிடைக்கும் ஆன்டி-வைரஸ் இல் ஆபத்து இருக்கு. இலவசமாகக் கிடைக்கும் எதோ ஒன்றின் பின்னால், நிச்சயம் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

12. கூகிளில் இலவச கூப்பன் கோடு விபரங்கள் குறித்து தேடினால் ஏற்படும் ஆபத்து
ஆன்லைன் ஷாப்பிங்கில் தள்ளுபடிக்கு, உங்களுக்கு ஒரு கூப்பன் கோடு கிடைத்தால், அது நல்லது. ஆனால் கூகுளில் கூப்பன் கோடுகளை தேடி, சிக்கலில் சிக்கி உங்கள் வங்கி விபரங்களை வீணாய் மோசக்காரர்களுக்குக் கொடுக்காதீர்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470