ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஸ்பார்க் ஆப் அறிமுகம்.!

இன்பாக்ஸ் பை ஜிமெயில் நீக்கப்பட்டு விட்டதால், ஐஒஎஸ் தளத்தில் பிரபலமாக இருக்கும் ஸ்பார்க் செயலி ஆண்ட்ராய்டு தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்று தான் கூறவேண்டும், அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு இன்பாக்ஸ் பை ஜிமெயில் மின்னஞ்சல் செயலியை அறிமுகம் செய்தது, சமீபத்தில் இந்த இன்பாக்ஸ் பை ஜிமெயில வசதி நீக்கப்பட்டது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஸ்பார்க் ஆப் அறிமுகம்.!

இந்த இன்பாக்ஸ் பை ஜிமெயில் மின்னஞ்சல் செயலியில் முக்கிய அம்சங்களாக மேசெஜ் குரூப்பிங் மற்றும் ரிமைண்டர்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்பாக்ஸ் பை ஜிமெயில் நீக்கப்பட்டு விட்டதால், ஐஒஎஸ் தளத்தில் பிரபலமாக இருக்கும் ஸ்பார்க் செயலி ஆண்ட்ராய்டு தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கஸ்டமைசேஷன் வசதிகளுடன் ஐஒஎஸ் தளத்தில் பிரபல மின்னஞ்சல் செயலியாக ஸ்பார்க் இருக்கிறது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஸ்பார்க் ஆப் அறிமுகம்.!

ஸ்பார்க் செயலியில் ஜெஸ்ட்யூர் சார்ந்த யு.ஐ.இ ஸ்மார்ட் இன்பாக்ஸ் வசதி மற்றும் சைடுபாரை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி போன்றவை வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் இன்பாக்ஸ் அம்சத்தை பொருத்தவரை இது அனைத்து மின்னஞ்சல்களையும் தனித்தனியாக பிரித்து ஒழுங்காக காட்சிப்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஸ்பார்க் ஆப் அறிமுகம்.!

குறிப்பாக வாசிக்கப்படாத மின்னஞ்சல்கள் மேலேயும், மிகமுக்கிய மின்னஞ்சல்கள் மற்றும் இறுதியில் வாசிக்கப்பட்ட மின்னஞ்சல்கள் சீராக வரிசைப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிமெயில் போன்ற ஸ்பார்க் செயலியிலும் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்பார்க் செயலியில் ஜெஸ்ட்யூர் வசதி வழங்கப்பட்டுள்ளதால், வலது அல்லது இடதுபுறம் ஸ்வைப் செய்து மின்னஞ்சல்களில் பல்வேறு ஆப்ஷன்களை செயல்படுத்திக் கொள்ளலாம். கூகுள் பிளே ஸ்டோரில் ஆண்ட்ராய்டு தளத்திற்கு பயன்படும் ஸ்பார்க் செயலி இலவசமாக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Spark email app for Android arrives as Google shuts down ‘Inbox by Gmail’: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X