விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் SpaceX –ன் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டுகிறது!

2019 ஆம் ஆண்டு விண்வெளிக்குச் செல்லவிருக்கும் போயிங் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பயணிக்கும் ஒன்பது நபர்களின் பெயர்கள் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.

|

தொழில்நுட்ப உலகில் கொடிகட்டிப் பறக்கும் எலன் மஸ்க் தன்னுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை அடுத்த ஆண்டு செயல்படுத்த இருக்கிறார். விண்வெளித் திட்டங்களில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகள் துணை நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் SpaceX –ன் திட்டம்.!

“வருகின்ற நவம்பர் மாதத்தில் சர்வதேச விண்வெளி நிறுவனத்திற்கு ஏவப்படும் (ISS) ஆளில்லாத விண்கலம், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு முன்னோட்டமாக இருக்கும் ” என்கிறார், ஏரோ ஸ்பேஸ் தயாரிப்பாளர்களின் தலைவர் வைன்னே ஷாட்வெல் (Gwynne Shotwell).

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா, வணிக ரீதியாக வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்காக, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் விண்வெளியின் சுற்றுவட்டப் பாதைக்கு போக்குவரத்துக் கலங்களை உருவாக்கும் தனியார் நிறுவனங்களின் முயற்சிகளுக்கு நாசா உதவுகிறது.

2019 ஆம் ஆண்டு

2019 ஆம் ஆண்டு

2019 ஆம் ஆண்டு விண்வெளிக்குச் செல்லவிருக்கும் போயிங் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பயணிக்கும் ஒன்பது நபர்களின் பெயர்கள் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் புதியவர்களும் விண்வெளியைப் பற்றிய அனுபவம் மிக்கவர்களும் உள்ளனர்.

80 மில்லியன் டாலர்

80 மில்லியன் டாலர்

விண்வெளித் துறையில் அனுபவம் மிக்க பாப் பென்ஹென், மைக்கேல் ஹாப்கின்ஸ், டக்ளஸ் ஹர்லி ஆகியோருடன் புதியவரான விக்டர் குளோவர் என்பவரும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளார். விக்டர் குளோவர் அமெரிக்காவின் கடற்படை விமானத்தில் பணியாற்றியவர்.

2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க விண்கலங்கள் எதுவும் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவில்லை. ஸ்பேஸ் எக்ஸ் தன்னுடைய திட்டத்தை நிறுவேற்றினால் அமெரிக்கர்களின் விண்வெளிப் பயணத்திற்கு புத்துயிர் அளிப்பதாக இருக்கும்.

கடந்த ஏழு ஆண்டுகளாக அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குப் பயணிக்க ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவர் பயணிக்க 80 மில்லியன் டாலர் (560 கோடி ரூபாய்) செலவாகிறது.

அமெரிக்க விண்வெளி வீரர்

அமெரிக்க விண்வெளி வீரர்

"தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களைப் பாதுகாப்பாக விண்வெளிக்குக் அழைத்துச் சென்று, பிறகு அவர்களை திரும்பவும் பூமிக்கு அழைத்து வந்தால்தான் எங்களுடைய திட்டம் வெற்றிகரமாக நிறைவுறும்" என்கிறார் ஷாட்வெல்.

எங்களுடைய திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உரிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். எங்களுடைய சோதனை ஓட்டத்திற்குப் பிறகு, அமெரிக்க விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வது எங்களுடைய பணியாக இருக்கும். நாசா அனுமதிக்கும் வரை எங்களுடைய சேவை தொடரும் எனவும் இவர் கூறுகிறார்.

வாழ்நாளில் கிடைத்த அரிய சந்தர்ப்பம்

வாழ்நாளில் கிடைத்த அரிய சந்தர்ப்பம்

தங்களுடைய முதல் விண்வெளிப் பயணத் திட்டத்திற்கான பயணிகளின் பெயர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்த பொழுது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது வீரர்களும் நீல நிற உடையில், பெருமிதம் பொங்கும் புன்னகையோடு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தோன்றினர். நிருபர்களின் கேள்விகளுக்கு உற்சாகத்தோடு பதில் அளித்தனர்.

"விண்வெளிப் பயணத்திற்கான முதல் விண்கலத்தில் பயணிக்க இருப்பது வாழ்நாளில் கிடைத்த அரிய சந்தர்ப்பம். அதனை எதிர் நோக்கி ஆர்வத்தோடு காத்து இருக்கிறோம். அதற்காக நாங்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகள் இன்னும் நிறைய உள்ளன." என்கிறார் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது பேர் குழுவில் இடம் பெற்றுள்ள டக்ளஸ் ஹர்லி.

Best Mobiles in India

English summary
SpaceX Vows Manned Flight to Space Station Is on Track: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X