விரைவில் வெளியாகும் சோனி ப்ளேஸ்டேசன் கிளாசிக்.!

வாடிக்கையாளர்கள் இந்த ப்ளேஸ்டேசனை தொலைக்காட்சியுடன் இணைப்பதற்காக எச்.டி.எம்.ஐ கேபிளை பெறுவர் மற்றும் மேட்சிங் கலர் ஸ்கீமுடன் 2 கண்ட்ரோலர்களையும் பெறுவர்.

|

23 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான உண்மையான ப்ளேஸ்டேசனின் சிறிய மற்றும் நவீன வெர்சனான, ப்ளேஸ்டேசன் கிளாசிக்-ஐ வெளியிடும் தேதியை சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. 1994 ஆம் ஆண்டு உண்மையான ப்ளேஸ்டேசன் வெளியான நாளான டிசம்பர் 3 அன்றே, இந்த புதிய ப்ளேஸ்டேசன் கிளாசிக்கும் வெளியாகவுள்ளது. இதன் விலை $99.99USD(ரூ 7,270)/ $129.99CAN(ரூ9,450) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விரைவில் வெளியாகும் சோனி ப்ளேஸ்டேசன் கிளாசிக்.!

20 ப்ரீ லோடேட் கிளாசிக் கேம்கள்
ஏற்கனவே வெளிவந்த ப்ளேஸ்டேசனை விட பாதிஅளவு குறைவாகவும், 45% சிறியதாகவும் இருக்கும் இந்த ப்ளேஸ்டேசன் கிளாசிக், புதிய கேம்கள் மட்டுமில்லாமல் பழமையை நினைவு கூற விரும்பும் விளையாட்டு பிரியர்களுக்காக பழைய கேம்களையும் திரும்ப கொண்டுவரவுள்ளது. பைனல் பென்டாஸி 7, ஜம்ப்பிங் ப்ளாஸ், ரைட்ஜ் ரேசர் டைப்4, டெக்கான்3 மற்றும் வைல்ட ஆர்ம்ஸ் உள்ளிட்ட 20 கேம்ஸ் பீரி லோடேடாக இதில் வெளிவருகிறது. எதிர்காலத்தில் மேலும் பல கேம்களை இதில் இணைக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த ப்ளேஸ்டேசனை தொலைக்காட்சியுடன் இணைப்பதற்காக எச்.டி.எம்.ஐ கேபிளை பெறுவர் மற்றும் மேட்சிங் கலர் ஸ்கீமுடன் 2 கண்ட்ரோலர்களையும் பெறுவர். கேம்களை விளையாடிவிட்டு சேவ் செய்வதற்காக 'வெர்சுவல் மெமரி கார்டும்' வழங்கப்படுகிறது.

விரைவில் வெளியாகும் சோனி ப்ளேஸ்டேசன் கிளாசிக்.!

தற்போது கேம் விளையாடுபவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க, நின்டென்டோ நெஸ் கிளாசிக், சிகாஸ் மெகா டிரைவ் மினி , அடாரி விசிஎஸ் என ஏராளமான கன்சோல்கள் முன்பதிவுடன் கிடைக்கின்றன.

பிப்ரவரி மாதம் சோனி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட ப்ளேஸ்டேசன் 4, 2013 நவம்பரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விற்பனைக்கு வந்தது. மேலும் அது 2014 ஜனவரியில் ரூ39,990 என்ற விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இந்த பி.எஸ்4 ன் முக்கிய போட்டியாளர்களாக நின்டென்டோ வி யூ மற்றும் மைக்ரோசாப்டின் எக்ஸ் பாக்ஸ் ஒன் உள்ளன.

விரைவில் வெளியாகும் சோனி ப்ளேஸ்டேசன் கிளாசிக்.!

ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்பு, சோனி நிறுவனம் உண்மையான ப்ளேஸ்டேசனை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. சோனி கம்ப்யூட்டர் எண்டர்டெயின்மெண்டால் உருவாக்கப்பட்ட இந்த ஹோம் கன்சோல் தான், வீடியோ கேம் வரலாற்றிலேயே உலகம்முழுக்க 100 மில்லியன் யூனிட்கள் விற்று சாதனை படைத்துள்ளது. மேலும் சோனி நிறுவனம் தனது பயனர்கள் வீட்டிலேயே நிகழ்நேரத்தில் முப்பரிமாண 3டி மற்றும் கிராபிக்ஸ் உடன் கேம்களை விளையாடவும் வழிவகை செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
Sony’s PlayStation Classic to launch on December 3 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X