ஃப்ரொஜக்டர் பொருத்தப்பட்ட ஹெல்மெட் தயாரித்த சோனி! அதில் என்ன சிறப்பு தெரியுமா?

பட்டாம்பூச்சியின் கண்களில் இந்த உலகம் எப்படி தெரியும் என்பதை மற்றொரு டெமோ மூலம் சோனி நிறுவனம் காட்சிபடுத்தியது.

|

ஒவ்வொரு ஆண்டும், டெக்சாஸ் மாகாண தலைநகர் ஆஸ்டினில் நடைபெறும் SXSW (South by South west) மாநாட்டில், தனது புதுமையான படைப்புகளை சமீபகாலமாக காட்சிபடுத்தி வருகிறது சோனி நிறுவனம். அந்த வரிசையில், இந்தவருடம் எதிர்காலத்திற்கான ஹெட் லைட் (Superception headlight system)ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளது.

ஹெல்மெட் போன்ற அமைப்பையுடைய இதன் முன்பக்கத்தில் சோனி MP-CL1 ப்ராஜக்டர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இதை பயனர் தலையில் பொருத்தியிருக்கும் போது, அவர் கண்ணுக்கு புலப்படும் வகையில் காட்சிகளை திரையிடும்.

சோனி:

சோனி:

மேலும் ஒரு சிறப்பம்சமாக, இதில் சோனி MDR-XB950 ஹெட்போனும் இணைக்கப்பட்டுள்ளது. இது பயனரை, அந்த காட்சிகளில் மூழ்கிவிடச்செய்யும் அளவிற்கு தேவையான அனைத்து ஒலியையும் துல்லியமாக தரும்.

 ப்ரஜெக்ட்டர்:

ப்ரஜெக்ட்டர்:

எடுத்துக்காட்டாக கொசு ஒன்று இரத்தத்தை தேடி எப்படி நுகரும் என்பதை ப்ரஜெக்ட்டர், அந்த கொசுவின் பார்வையில் காட்சிபடுத்தும் அதே வேளையில், ஹெட்செட்டும் கொசுவின் ரீங்காரமிடும் சத்தத்தை துல்லியமாக ஒலிபரப்பும்.

 சென்சார்கள்:

சென்சார்கள்:

பயனரின் நடவடிக்கைகளை கண்டறிய, இந்த கருவியில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. காட்சிப்படுத்த தேவையான அனைத்து தரவுகளும் மூல கணினியில் இருந்து பெறப்படுகிறது. பயனரின் அசைவுகளை பொறுத்து, ஹெல்மெட் காட்சிகளை ஒத்திசைத்து வெளிப்படுத்துகிறது.

டெமோ:

டெமோ:

பட்டாம்பூச்சியின் கண்களில் இந்த உலகம் எப்படி தெரியும் என்பதை மற்றொரு டெமோ மூலம் சோனி நிறுவனம் காட்சிபடுத்தியது. சுவரில் தோன்றிய காட்சிகள் மிகவும் வண்ணமயமாக இருந்தது. இந்த டெமோ மூலம், விலங்குகள் அதன் சுற்றுபுற சூழலில் நடமாட எப்படி உணர்வுகளை பயன்படுத்துகின்றன என்பதை பயனர்கள் உணர முடியும்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
தொழில்நுட்பம்:

தொழில்நுட்பம்:

இந்த கருவியை பயன்படுத்தி, மனிதனின் பார்வையில் பல்வேறு உணர்வுகளை, தொழில்நுட்பம் மூலம் பிரதிபலிக்கலாம் என காட்டியிருக்கிறோம் என சோனி நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம், பயனர்கள் விலங்குகளின் பார்வையில் வாழ்க்கை எப்படி இருக்கும் என அறியமுடியும். இந்த கருவியை தலையில் அணிவதால், பயனரின் பார்வையோடு இது ஒத்துபோகிறது. இந்த கருவியை பயன்படுத்தி, விலங்குகளை பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் எளிதில் விலங்குகளை பற்றி அறியலாம்.

Best Mobiles in India

English summary
Sony showcases a projector helmet ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X