ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான தலைசிறந்த கீபோர்டு ஆப்ஸ்.!

ஆன்ட்ராய்டு இயங்குதளம் போன்றே ஐஓஎஸ் இயங்குதளத்திலும் மூன்றாம் தரப்பு கீபோர்டு செயலிகள் கிடைக்கின்றன.

|

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் மூன்றாம் தரப்பு கீபோர்டு செயலிகள் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. இதன் மூலம் ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் கீபோர்டுகளை தவிர்த்து, பிளே ஸ்டோரில் கிடைக்கும் மற்ற கீபோர்டு செயலிகளை பயன்படுத்த முடியும்.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான கீபோர்டு ஆப்ஸ்.!

ஆன்ட்ராய்டு இயங்குதளம் போன்றே ஐஓஎஸ் இயங்குதளத்திலும் மூன்றாம் தரப்பு கீபோர்டு செயலிகள் கிடைக்கின்றன. சமீபத்திய கீபோர்டு செயலிகள் பெரும்பாலும் பல்வேறு வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. அந்த வகையில் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கும் தலைச்சிறந்த கீபோர்டு செயலிகளை தொடர்ந்து பார்ப்போம்.

  கூகுள் ஜிபோர்டு (Google Gboard)

கூகுள் ஜிபோர்டு (Google Gboard)

2016-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் தனது கூகுள் கீபோர்டு செயலிக்கு மாற்றாக ஜிபோர்டு அறிமுகம் செய்தது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கும் அற்புத கீபோர்டுகளில் ஒன்றாக ஜிபோர்டு இருக்கிறது. கூகுள், எமோஜி மற்றும் ஜிஃப் சர்ச் உள்ளிட்ட அம்சங்களை கீபோர்டு செயலியிலேயே மேற்கொள்ள முடியும்.

கூகுளின் ஜி (G) லோகோவை க்ளிக் செய்தால் தேவையானதை செய்து கொள்ள முடியும். ஜிபோர்டு செயலியில் ஜெஸ்ட்யூர் டைப்பிங் செய்ய முடியும் என்பதோடு, மிக துல்லியமான ஆட்டோகரெக்ட், வார்த்தை கணிப்பு மற்றும் ஒற்றை கையில் பயன்படுத்த ஒன்-ஹேன்ட் மோட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

எல்லா அம்சங்களுக்கும் மேலாக, ஜிபோர்டு செயலி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஹைட்ரோஜன் கீப்ரோடு (Hydrogen Keyboard)

ஹைட்ரோஜன் கீப்ரோடு (Hydrogen Keyboard)

ஜிபோர்டு கீபோர்டு ஆப் பல்வேறு பயனுள்ள அம்சங்களை வழங்கினாலும், அதிகப்படியான கஸ்டமைசேஷன்களை கொண்டிருக்கவில்லை, அந்த வகையில் ஹைட்ரோஜன் கீபோர்டு செயலியை முயற்சிக்கலாம். கூகுளின் ஜிபோர்டு போன்ற பயன்பாடுகளை கொண்டிருக்கும் இந்த செயலியில் பல்வேறு கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களை வழங்குகிறது.

கூகுள் கீபோர்டு போன்று இல்லாமல், ஹைர்டோஜன் கீபோர்டு செயலியில் நம்பர் ரோ ஆப்ஷனை இயக்க இடது புறம் ஸ்வைப் செய்யதோ அல்லது க்ளிப்போர்டு இயக்க இடது புறத்தில் ஸ்வைப் செய்யலாம். இத்துடன் பிரீமியம் அன்லாக்களை வாங்கும் போது, மேலும் அதிகப்படியான அம்சங்களை கஸ்டமைஸ் செய்ய முடியும்.

இன்ஸ்டால் செய்யும் போது கிடைக்கும் அம்சங்களே போதும் எனில், இந்த செயலியை இலவசமாக பயன்படுத்தலாம்.

கிராமர்லி கீபோர்டு (Grammarly Keyboard)

கிராமர்லி கீபோர்டு (Grammarly Keyboard)

கிராமர்லி கீபோர்டு ஆப் ஆன்லைன் மூலம் உங்களது எழுத்துக்களை சரி பார்க்கும். மிகவும் துல்லியமாக உங்களது வாக்கியங்களை சரிபார்த்து, மின்னஞ்சல் மற்றும் இதர சேவைகளில் பிழையின்றி தகவல்களை பரிமாற வழி செய்கிறது. கிராமர்லி கீபோர்டு ஆப் ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு தளத்தில் கிடைக்கிறது.

பெரும்பாலான செயலிகள் மற்றும் டெக்ஸ் ஃபீல்டுகளில் வேலை செய்யும் கிராமர்லி செயலியில் ஜெஸ்ட்யூர் மற்றும் ஜிஃப் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கிராமர்லி செயலியை இலவசமாக பயன்படுத்த முடியும் என்றாலும், பிரீமியம் அப்கிரேடு மூலம் கூடுதல் அம்சங்களை பயன்படுத்த முடியும்.

ஸ்விஃப்ட்கீ கீபோர்டு (SwiftKey Keyboard)

ஸ்விஃப்ட்கீ கீபோர்டு (SwiftKey Keyboard)

ஸ்விஃப்ட்கீ கீபோர்டு ஆப் கூகுள் கீபோர்டு போன்றே பல்வேறு ஆப்ஷன்களை மிக எளிமையாக பயன்படுத்த வழி செய்கிறது. மிக வேகமாக இயங்குவதோடு, செயற்கையாக ஆட்டோகரெக்ட் அம்சம் மிக துல்லியமாக வேலை செய்கிறது.

ஸ்விஃப்ட்கீ கீபோர்டு செயலியின் ஃப்ளோட்டிங் கீபோர்டு செயலியை மற்ற செயலிகளை விட வித்தியாசமாக மாற்றுகிறது. கீபோர்டை அன்டாக் செய்து, அளவை மாற்றி, ஸ்கிரீனில் எங்கு வேண்டுமானாலும் வைத்து டைப் செய்ய முடியும். அந்த வகையில் இந்த செயலியை பெரிய திரையிலும் மிக சுலபமாக பயன்படுத்த முடியும்.


ஸ்விஃப்ட்கீ கீபோர்டு செயலி இலவசமாக கிடைக்கும் நிலையில் கூடுதல் அம்சங்களை இன்-ஆப் பர்சேஸ் மூலம் வாங்கி பயன்படுத்த முடியும்.

மினியம் (Minuum)

மினியம் (Minuum)

மினியம் செயலி கீபோர்டு ஆப்களில் மிகவும் விசித்திரமானதாக இருக்கிறது. வழக்கமான க்வெர்டி லே-அவுட் வழங்காமல், அனைத்து எழுத்துக்களையும் ஒற்றை வரிசையில் வழங்குகிறது. இத்துடன் மிக துல்லியமான ஆட்டோகரெக்ட் ஆப்ஷன் உங்களது தகவல்களை பிழையில்லாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த லே-அவுட் வேண்டாம் என்போருக்கு க்வெர்டி கீபோர்டு ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஏராளமான ஆப்ஸ் இதன் பயன்பாட்டை மேலும் சுவாரஸ்யமானதாக்குகிறது. மேலும் எமோஜி, கர்சர் கன்ட்ரோல், க்ளிப் போர்டு கன்ட்ரோல், சர்ச் மற்றும் ஷேர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.


மினியம் ஆப் சீராக பயன்படுத்த சில காலம் ஆகும், அந்தளவு அற்புத அம்சங்களை இந்த ஆப் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் இந்த ஆப் பயன்படுத்த 3.99 டாலர்கள் செலவிட வேண்டும். இத்துடன் 30 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் பயன்படுத்தி பார்க்கும் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

ஃப்ளெஸ்கி (Fleksy)

ஃப்ளெஸ்கி (Fleksy)

ஜெஸ்ட்யூப் டைப்பிங் இன்றி, ஃப்ளெஸ்கி ஆப் அதன் ஆட்டோகரெக்ட் அம்சம் மூலம் அனைவரையும் கவர்கிறது. மிக துல்லியமாக எழுத்துப்பிழைகளை கண்டறியும் இதன் மென்பொருள் ஆட்டோகரெக்ட் சேவையை வழங்குவதில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

மினியம் செயலி போன்றே, ஃப்ளெஸ்கி ஆப் எக்ஸ்டென்ஷன்ஸ் பார் கொண்டுள்ளது. இதில் கிடைக்கும் எக்ஸ்டென்ஷன்களை மிக நேர்த்தியாக கஸ்டமைஸ் செய்வதோடு, ஜிஃப் சர்ச் மற்றும் க்ளிப்போர்டு கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும்.

ஃப்ளெஸ்கி ஆப் இலவசமாக கிடைப்பதோடு, இதன் டெவலப்பர்கள் செயலியில் உள்ள அனைத்து தீம்களையும் இலவசமாக வழங்குவதாக அறிவித்தனர். இதன் இன்-ஆப் பர்சேஸ் மூலம் கூடுதல் எக்ஸ்டென்ஷன்களை டவுன்லோடு செய்ய முடியும்.

ஸ்லாஷ் கீபோர்டு (Slash Keyboard)

ஸ்லாஷ் கீபோர்டு (Slash Keyboard)

எக்ஸ்டென்ஷன்கள் சார்ந்து இயங்கும் மற்றொரு செயலியாக ஸ்லாஷ் இருக்கிறது. பில்ட்-இன் கூகுள் சர்ச், ஜிஃபி, எமோஜி, கூகுள் மேப்ஸ், யூடியூப், அமேசான், ஸ்பாட்டிஃபை, ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் பல்வேறு இதர சேவைகளை வழங்குகிறது.

ஸ்லாஷ் கீபோர்டு முற்றிலும் இலவசமாக கிடைப்பதோடு, மிகவும் வித்தியாசமாகவும் இருக்கும். எனினும் மற்ற கீபோர்டு ஆப்களை போன்று இதன் ஆட்டோகரெக்ட் அம்சம் பெருமை கொள்ளும் வகையில் இருக்காது.

ஜின்ஜர் கீபோர்டு (Ginger Keyboard)

ஜின்ஜர் கீபோர்டு (Ginger Keyboard)

ஜின்ஜர் கீபோர்டு ஆப் தீம்ஸ், எமோஜி, ஜெஸ்ட்யூர் டைப்பிங், ஆட்டோகரெக்ட், ஷார்ட்கட்கள் மற்றும் சர்ச் போன்ற அம்சங்களை வழங்குகிறது.

மற்ற கீபோர்டு செயலிகளில் இல்லாத கேம்ஸ் வசதி, ஜின்ஜர் கீபோர்டில் இருக்கிறது. ஸ்னேக் போன்ற பிரபல கேம்களில் துவங்கி, அதிகப்படியான கேம்களை விளையாட முடியும். ஜின்ஜர் கீபோர்டு செயலியில் உள்ள ஸ்பெல் செக்கர் அம்சம் ஆட்டோகரெக்ட் போன்ற சேவையின் மாறுபட்ட பதிப்பாக இருக்கிறது.

ஜின்ஜர் கீபோர்டு செயலி இலவசமாக கிடைக்கும் போதும், முழுமையான சேவையை பயன்படுத்த மாதம் 0.99 டாலர்களை செலுத்த வேண்டும்.

 டச்பால் கீபோர்டு (TouchPal Keyboard)

டச்பால் கீபோர்டு (TouchPal Keyboard)

மற்ற செயலிகளை போன்றே இந்த செயலியும் அதிகப்படியான அம்சங்களை வழங்குகிறது. பில்ட்-இன் ஜிஃப் சப்போர்ட், எமோட்டிக்கான், எமோஜி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகிறது. இதன் எமோஜி ஆர்ட் அம்சம் பல்வேறு இலவச மற்றும் பிரீமியம் தீம்கள், கஸ்டமைஸ் ஃபான்ட்கள், டிக்ஷனரிக்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

அதிகப்படியான பயனுள்ள அம்சங்கள் நிறைந்த டச்பால் செயலியை இலவசமாக டவுன்லோடு செய்யலாம். எனினும் பிரீமியம் தரவுகளை இயக்க ஆண்டுக்கு 4.99 டாலர்கள் செலுத்த வேண்டும்.

 ஜிஃப் கீப்ரோடு (GIF Keyboard)

ஜிஃப் கீப்ரோடு (GIF Keyboard)

ஜிஃப்களை அதிகளவு பயன்படுத்துவோருக்கு இந்த செயலி சிறப்பானதாக இருக்கும். அடிக்கடி பயன்படுத்தும் ஜிஃப்களுக்கு க்விக் அக்சஸ், டிரென்டிங் ஜிஃப், சர்ச் டூல் மற்றும் வழக்கமான கீபோர்டுக்கு ஷார்ட்கட் என பல்வேறு சுவாரஸ்ய அம்சங்களை இந்த ஆப் வழங்குகிறது. ஜிஃப் கீபோர்டு செயலியை இலவசமாக பயன்படுத்தலாம்.

ஏஐ.டைப் (ai.type)

ஏஐ.டைப் (ai.type)

ஸ்விஃப்ட்கீ போன்றே, ஏஐ.டைப் கீபோர்டு செயலியும் தனித்துவம் மிக்க அம்சங்களை வழங்குகிறது. செயலியினுள் டவுன்லோடு செய்ய சுமார் 1.5 லட்சத்துக்கும் அதிகமான தீம்களை கொண்டிருக்கும் ஏஐ.டைப் செயலி பல்வேறு அனிமேட்டெட் தீம்களையும் கொண்டிருக்கிறது. செயலி வழங்கும் தீம்கள் பிடிக்கவில்லை எனில் பில்ட்-இன் மேக் இட் மைன் தீம் மேக்கர் டூல் மூலம் உங்களுக்கான தீம்களை நீங்களாகவே உருவாக்கி கொள்ளலாம்.

ஏஐ.டைப் செயலியை பயன்படுத்த 3.99 டாலர்கள் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோ கீபோர்டு (GO Keyboard)

கோ கீபோர்டு (GO Keyboard)

கோ கீபோர்டு செயலியின் மிக முக்கிய அம்சமாக அதன் தீம்கள் இருக்கின்றன. எழுத்துக்களின் உயரம், ஸ்பேஸ் பார் அகலம், கர்சர் கன்ட்ரோல் என ஒவ்வொரு அம்சங்களையும் பயன்பாட்டிற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளில் சிறந்த எமோஜி கீபோர்டு இதுதான் என இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

கோ கீபோர்டு செயலியை இலவசமாக பயன்படுத்த முடியும் என்றாலும், விளம்பரங்கள் வேண்டாம் என்போர் சிறு தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

Best Mobiles in India

English summary
So many ways to type on Android: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X