ஸ்நாப்சாட் vs இன்ஸ்டாகிராம்: எதை பயன்படுத்தலாம்

|

சமூக வலைத்தளங்களின் மிக முக்கிய பணிகளில் ஒன்று, தகவல்களை பகிர்ந்து கொண்டு, அவற்றை அதிகம் பேருக்கு விநியோகம் செய்வது தான். பெரும்பாலான தளங்கள் அதிகம் வளர்ந்து வரும் நிலையில், ஒருசில சேவைகள் மட்டுமே பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஒன்றாக இருக்கிறது.

ஸ்நாப்சாட் vs இன்ஸ்டாகிராம்: எதை பயன்படுத்தலாம்

அவ்வாறு பெரும்பாலானோர் பயன்படுத்தும் தளமாக இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்நாப்சாட் இருக்கிறது. இரண்டு சேவைகளும் ஒரே வித சேவைகளையே வழங்குகின்றன.

சமீபத்தில் பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் புதிய அம்சங்களை ஸ்நாப்சாட்டில் இருந்து திருடுவதாக கூறப்படுகிறது. இரு செயலிகளிலும் உள்ள அம்சங்கள் மற்றும் உங்களுக்கு ஏற்ற செயலி எது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ரியாக்ஷன்கள்

ரியாக்ஷன்கள்

புகைப்படங்களை ஆன்லைனில் பதிவு செய்வதே நண்பர்களிடம் இருந்து ரியாக்ஷன்களை பெறுவதற்கு தான். இதில் இன்ஸ்டாகிராம் சிறப்பானதாக உள்ளது.

இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் போட்டோ மற்றும் வீடியோக்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்நாப்சாட்செயலியில் உங்களது நண்பர்கள் என்ன செய்கின்றனர் என்பதை யாராலும் பார்க்க முடியாது.

 டிராக் டவுன்

டிராக் டவுன்

பழைய தகவல்களை மீண்டும் பார்க்க வேண்டும் என்றால் ஸ்நாப்சாட் வெளியேறி விடுகிறது. இதனால் நண்பர்களின் பழைய வரலாறுகளை டிராக் செய்ய ஸ்நாப்சாட் உகந்தது இல்லை.

ஸ்டோரீஸ்

ஸ்டோரீஸ்

இன்ஸ்டாகிராமுடன் ஒப்பிடும் போது ஸ்நாப்சாட்டில் அதிகப்படியான ஃபில்ட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை உங்களது புகைப்படங்களை அழகாக மாற்றுகிறது. எனினும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்வது எளிமையாகிறது, இந்த அனுபவம் ஸ்நாப்சாட்டில் கிடைக்காது.

லைவ் வீடியோ

லைவ் வீடியோ

தற்போதைய டிரெண்ட்களில் ஒன்றாக லைவ் வீடியோக்கள் உள்ளது. பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஸ்நாப்சாட் செயலி இந்த வசதியை வழங்கவில்லை.

டீமோகிராபிக்ஸ்

டீமோகிராபிக்ஸ்

பெரும்பான்மையான ஸ்நாப்சாட் வாடிக்கையாளர்கள் மில்லியன் கணக்கில் உள்ளனர், இவர்களில் பாதி பேர் 25 வதை கடந்தவர்கள். இன்ஸ்டாகிராம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பில்ட்டர்கள்

பில்ட்டர்கள்

இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் மற்றும் ஸ்நாப்ஸ்களை உருவாக்க வழங்கப்படும் அம்சங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளது. இரு தளங்களிலும் டெக்ஸ்ட், ஸ்டிக்கர், ஃபில்ட்டர், டிராயிங்களை போஸ்ட்களில் வழங்குகின்றன. இத்துடன் ஸ்நாப்சாட்டில் அதிகப்படியான கஸ்டமைசேஷன் அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

விளம்பரங்கள்

விளம்பரங்கள்

இரண்டு தளங்களிலும் விளம்பரங்களை அனுமதிக்கின்றன, இவை குறிப்பிட்ட மக்களுக்காக வழங்கப்படுகின்றன. விளம்பரங்களை பொருத்த வரை இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் அதிகப்படியான வசதிகளை வழங்குகின்றது, இதுவே ஸ்நாப்சாட் செயலியில் வாடிக்கையாளர்கள் ஸ்பைவ் செய்ததும் அதிகப்படியான அம்சங்களை வழங்குகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
One of the main aims of social network sites is to promote, share and distributes various types of data among others. Find out the difference between Instagram and Snapchat

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X