ஸ்னாப்மேப் வசதியை அறிமுகப்படுத்திய ஸ்னாப்சாட்!

ஸ்னாப்மேப்பில் என்னென்ன நடக்கிறது என்பதற்கான அலர்ட் அல்லது அப்டேட்களை பயனர்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள அனுமதிக்கும் .

|

பயனர்கள் தாங்கள் உள்ள லோகேசனை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள உதவியாக ஸ்னாப்மேப் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ஸ்னாப்சாட் . மேலும் இந்த வசதியின் மூலம் அதே இடத்தில் நண்பர்களால் பகிரப்பட்ட ஸ்னாப்களையும் பார்க்கமுடியும்.ஸ்னாப்மேப்பில் என்னென்ன நடக்கிறது என்பதற்கான அலர்ட் அல்லது அப்டேட்களை பயனர்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள அனுமதிக்கும் மேப் எக்ஸ்ப்ளோர் வசதியையும் ஸ்னாப்சாட் இந்தாண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்னாப்மேப் வசதியை அறிமுகப்படுத்திய ஸ்னாப்சாட்!

ஆனால் இந்த மேப் எக்ஸ்ப்ளோர் வசதி பயனர்கள் இருக்கும் இடத்தை செயலி பயன்பாட்டில் இல்லாத சமயத்தில் கூட எப்போதும் தெரிவித்துக்கொண்டே இருப்பதால் தனிப்பட்ட உரிமைகளை மீறுவதாக உள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

தற்போது ஸ்னாப்சாட் இந்த பிரச்சனையை சரிசெய்வதில் தீவிரமாக உள்ளது. அது மிட்டுமில்லாமல், தங்களின் லோகேசனை பகிர்வது மற்றும் லோகேசனை கோருவது போன்றவற்றை பயனர்கள் கட்டுப்படுத்த முடியும்.

இந்த புதியவசதியின் மூலம் எந்த நேரத்தில் லோகேசனை நண்பர்களுக்கு பகிர வேண்டும் அல்லது நண்பர்களின் லோகேசனை கோர வேண்டும் என தேர்வு செய்ய முடியும். நண்பர் அவரின் லோகேசனை பகிர விரும்பும்பட்சத்தில் அது ஸ்னாப்மேப்-ல் காண்பிக்கப்படும்.கடந்த சில வாரங்களில் இந்த புதிய வசதிகள் ஐ ஓ.எஸ் மற்றும் ஆண்ராய்டு பயனர்களுக்கு தரப்பட்டுள்ளன. இதுவரை இந்த அப்டேட்-ஐ பெறாத பயனர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?


இந்த லோகேசன் பகிரும் வசதியை பயன்படுத்த பயனர் அந்த நண்பரின் பெயரை அழுத்திப் பிடித்து அல்லது சாட் திரையில் உள்ள ஹம்பர்கர் மெனுவை தேர்வு செய்யவும். பின்னர் வரும் பாப்அப் திரையில் 'Request Location' மற்றும் 'Send My Location' வசதிகள் இருக்கும். இதன் மூலம் எளிதாக நண்பர்களிடம் லோகேசனை பகிரவோ அல்லது கோரவோ முடியும்.

ஸ்னாப்மேப் வசதியை அறிமுகப்படுத்திய ஸ்னாப்சாட்!


மேலும் இந்த புதிய லோகேசன் பகிரும் வசதி உங்களை நண்பர்கள் பட்டியலில் சேர்த்துள்ள நண்பர்களுக்கு மட்டுமே வேலை செய்யவும். எனவே வேற்றுநபர்கள் யாரும் லோகேசனை கேட்டு தொந்தரவு செய்யவார்களோ என பயனர்கள் கவவைப்பட வேண்டியதில்லை. பயனர்கள் தங்களின் லோகேசனை பகிர்ந்துகொள்ள விருப்பமில்லை என்றால் இந்த வசதியை முடக்கிவைக்கவும் ஸ்னாப்சாட் அனுமதிக்கிறது.

Best Mobiles in India

English summary
Snapchat now lets a user decide when they want to send or receive location on Snap Map; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X