ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. வந்துவிட்டது ஸ்னாப் மேப் புதிய வசதி

By Siva
|

சமூக வலைத்தளங்கள் இடையே போட்டிகள் அதிகமாகி வருவதால் தனித்தன்மை கொண்ட புதுப்புது வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. வந்துவிட்டது ஸ்னாப் மேப் புதிய வசத

அந்த வகையில் ஸ்னாப்சாட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்னாப் மேப் வசதியில் உங்கள் நண்பர்களை எங்கே இருக்கின்றார்கள் என்பதை அறிவது மட்டுமின்றி அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்

உங்கள் ஸ்மார்ட்போன் கேமிராவை ஜூம் செய்வதன் மூலம் இந்த புதிய வசதியை பெற்று கொள்ளலாம். உங்கள் நண்பருடன் நீங்கள் சாட் செய்ய ஆரம்பித்தவுடன், உங்கள் நண்பர் பிட்மோஜி அக்கவுண்டனை லிங்க் செய்தவுடன், அவர் என்ன செய்கிறார் என்பதை நீங்கள் பார்க்கலாம், அவர் நடந்து கொண்டோ அல்லது டிரைவிங் செய்து கொண்டோ அல்லது அவர் வேறு வேலையில் இருந்தாலோ அதை நீங்கள் உங்கள் கேமிரா மூலம் பார்க்கலாம்.

இந்த புதிய வசதியை நீங்கள் ஆக்டிவேட் செய்துவிட்டால் உலகின் எந்த மூலையில் உங்கள் நண்பர் இருந்தாலும் அவர் இருக்கும் இடத்தையும் அவர் செய்து கொண்டிருக்கும் வேலையையும் நேரில் பார்ப்பது போன்று பார்க்கலாம். மேலும் நண்பர்களை சியர்ச் செய்ய நண்பர்களின் பெயர்களை சியர்ச் பாக்ஸில் போட்டு தேடும் வசதியும் இதில் உள்ளது.

மேலும் உங்களுடைய இருப்பிடம் மற்றும் நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை ஸ்னாப்சாட்டில் உள்ள உங்கள் நண்பருக்கு தெரியக்கூடாது என்று நினைத்தாலும் அதற்கு இதில் ஆப்சன் உள்ளது. இதற்கு நீங்கள் வலது மேல்புறத்தில் உள்ள செட்டிங் ஐகான் சென்று செலக்ட் செய்து கொள்ளலாம்

இதில் உங்களுக்கு மூன்று ஆப்சன்கள் இருக்கும். முதலாவதான கோஸ்ட் மோட் ஆப்சனை நீங்கள் தேர்வு செய்தால் நீங்கள் இருக்கும் இடம் மற்றும் செய்து கொண்டிருக்கும் வேலையை உங்கள் நண்பரால் பார்க்க முடியாது. இரண்டாவதான 'மை ப்ரெண்ட்ஸ்' என்ற ஆப்சன் நீங்கள் இருக்கும் இடத்தை மட்டும் உங்கள் நண்பரால் தெரிந்து கொள்ள முடியும்.

மூன்றாவது ஆப்சனான 'செலக்ட் பிரெண்ட்ஸ்' என்ற ஆப்சனை நீங்கள் தேர்வு செய்தால் ஸ்னாப் மேப் மூலம் உங்கள் நண்பர் நீங்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதோடு, நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையையும் தெரிந்து கொள்வார்

இந்த புதிய வசதி சமூக வலைத்தளங்களின் புரட்சிகரமான புதிய வசதியாக கருதப்படுகிறது. ஸ்னாப் மேப் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை அடுத்து இந்த வசதியை மற்ற சமூக வலைத்தளங்களும் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Snapchat has introduced a new feature called Snap Map that will not only show you on a map where your friends are but also what they are doing.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X