நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் செயலி.!!

By Meganathan
|

ஸ்மார்ட்போன்களால் இன்று எல்லாமே சாத்தியமாகி விட்டது. செயலி கொண்டு எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் நாம், இனி நிலநடுக்கம் வர இருப்பதையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் நிலநடுக்கம் சார்ந்த முன் எச்சரிக்கை தகவல்களை வழங்கும் ஒரு விசேஷ செயலி குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..

மை ஷேக் (MyShake)

மை ஷேக் (MyShake)

அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்கெலி நிலநடுக்க ஆய்வாளர்கள் மற்றும் சிலிகான் வேலியின் டியூட்ஷி டெலிகாம் இன்னோவேஷன் சென்டர் இணைந்து வடிவமைத்த செயலி தான் மை ஷேக்.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

இந்த செயலி அக்செல்லோமீட்டர், மற்றும் சில அல்காரிதம்களை கொண்டு சில விநாடிகளில் ஸ்மார்ட்போனினை நிலநடுக்க உணர்த்துக் கருவியாக மாற்றும்.

செயலி

செயலி

மை ஷேக் செயலி மூலம் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் கருவியும் நிலநடுக்க உணர்த்துக் கருவியாக மாறிவிடுகின்றது. நிலநடுக்கம் மற்றும் அவ்வப்போது ஏற்படும் இதர அதிர்வுகளை பிரிக்கும் அல்காரிதம் ஒன்றை உருவாக்குவது மிகவும் கடினமானதாகும்.

தகவல்

தகவல்

'நிலநடுக்க ஆய்வாளர்களாக நிலநடுக்கம் சார்ந்த தகவல்களை சேகரிப்பது மிகவும் கடினமானதாகும். அதிகப்படியான தகவல்கள் இருந்தால் தான் நிலநடுக்க இயற்பியலை புரிந்து கொண்டு எதிர்கால நிலநடுக்கங்களை கச்சிதமாக கணிக்க முடியும்' என பெர்கெலியின் நிலநடுக்க ஆய்வு மைய தலைவர் ரிச்சார்ட் ஆலென் தெரிவித்துள்ளார்.

வழங்கி

வழங்கி

மை ஷேக் செயலி நிலநடுக்கத்தை உணர்த்தும் போது சேகரித்த தகவல்களை சென்ட்ரல் சர்வர் எனப்படும் வழங்கிக்கு அனுப்பும், இந்த தகவல்களில் இடம், நேரம் மற்றும் ரிக்டர் அளவு போன்றவை இடம் பெற்றிருக்கும்.

சேகரிப்பு

சேகரிப்பு

சேகரிக்கப்பட்ட தகவல்கள், ஏற்கனவே இருக்கும் தகவல்களுடன் ஆய்வு செய்யப்பட்டு, தொகுத்து அவை செயலியை பயன்படுத்துவோருக்கு அனுப்பப்படும்.

பதிவிறக்கம்

பதிவிறக்கம்

இந்த சேவை பயனுள்ளதாக அமைய அதிக கருவிகளில் இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

வீடியோ

மை ஷேக் செயலி குறித்த விளக்க வீடியோ.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இனிமே எல்லாம் இப்படித்தான், ஆப்பிள் புதிய முடிவு.!!

சாம்சங் அதிரடி : விரைவில் இந்தியாவில் வெளியாகும் கேலக்ஸி சி.!!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Smartphone App Can Help Predict Earthquakes Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X