Home
Apps

புகார் கொடுத்த பயனர்கள்: Apple ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட ஆறு செயலிகள்: நடந்தது இதுதான்.!

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்திய வண்ணம் உள்ளது. குறிப்பாக பாதுகாப்பு அம்சத்தில் அதிக கவனம் செலுத்துகிறது ஆப்பிள் நிறுவனம். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியச் சந்தைக்கான ஆப் ஸ்டோரில் இருந்து தீங்கு விளைவிக்கும் கடன் செயலிகளை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த செயலிகள் பயனர்களிடம் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது பாக்கெட் கேஷ், வைட் கேஷ், கோல்டன் கேஸ், ஓகே ருப்பி உள்ளிட்ட சில செயலிகள் தான் நீக்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம். அதாவது இந்த செயலிகள் பயனர்களிடம் தேவையற்ற கட்டணங்களை வசூலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Apple ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட ஆறு செயலிகள்: நடந்தது இதுதான்.!

இதைத் தொடர்ந்து இந்த கடன் செயலிகள் தேவையற்ற கட்டணங்களை வசூலிப்பதாக ஏராளமான பயனர்கள் ரிவ்யூ அளித்துள்ளனர். இதுதவிர கொடுத்த கடனை திரும்பி வசூலிக்கச் சட்ட விரோதமாகச் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே தான் இந்த செயலிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த செயலிகள் பயனர்களின் கான்டாக்ட் விவரம் கேலரி மற்றும் போனில் இருக்கும் இதர தரவுகளின் அணுகலைப் பயனர் பதிவு செய்யும் போது பெற்று, அதன்பின்னர் பயனர்களை மார்ஃப் செய்யப்பட்ட படங்கள், வீடியோக்கள் மூலம் அச்சுறுத்துவதாகவும் ஆப்பிள் ஸ்டோரில் பயனர்கள் புகார் கொடுத்துள்ளனர். தற்போது அதன் பேரில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல் ஆப்பிள் ஸ்டோரில் மோசடி செயலிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அப்படி ஆப்பிள் நிறுவனத்தின் சிஸ்டத்தை ஏமாற்ற முயற்சிக்கும் செயலிகள் மற்றும் ஆப் டெவலப்பர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. அதேசமயம் பயனர்களுக்குச் சிறந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆப்பிள் செயலி ரிவ்யூ வழிகாட்டு நெறிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Apple ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட ஆறு செயலிகள்: நடந்தது இதுதான்.!

தற்போது முறையற்ற கடன் செயலிகளின் இயக்கத்தை நிறுத்தும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ஆப்பிள் ஸ்டோரில் இருந்து சில செயலிகள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கூகுள் நிறுவனமும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இயங்க தவறிய முக்கியமான பல செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி இருந்தது.

இந்தியாவில் கடந்த சில வருடங்களில் பயனர்களுக்கு அதிவேகமாகக் கடன் கொடுக்கும் செயலிகள் கணிசமான அளவில் அதிகரித்து பிரபலம் அடைந்து வருகின்றன. ஆனாலும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட கடன் செயலிகளைத் தேர்வு செய்வது நல்லது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Six loan apps removed from Apple Store: What's the reason? : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X