WhatsApp இருக்கா? வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் யூசர்களுக்கு வச்சாங்க பாரு ட்ரீட்.. இனி ரொம்ப ஈஸி!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான யூசர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம், தனது ஆப்பை தொடர்ந்து அப்கிரேட் செய்து வருகிறது. அந்த வகையில், யூசர்களின் அணுகலை இன்னும் எளிமையாக்கும் நோக்கில், வாட்ஸ்அப் ஒரு புதிய பீச்சரை சோதனை செய்து வருகிறது. இந்த புதிய பீச்சரானது, ஸ்மார்ட்போனின் ஹோம் ஸ்கிரீனில் (Home Screen) ஒரு விட்ஜெட்டை (Widget) பில்ட் செய்து, அதன் மூலம் நேரடியாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதியை வழங்குகிறது.
இந்த புதிய பீச்சர் எப்படி செயல்படும்?
இப்போது, வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வேண்டுமானால், முதலில் ஆப்பை திறந்து, குறிப்பிட்ட நபரின் சாட் பகுதிக்குச் சென்று, அங்குள்ள மைக்ரோஃபோன் ஐகானை அழுத்திப் பிடித்துப் பேச வேண்டும். இது சிறிய செயலாகத் தெரிந்தாலும், அவசரமான நேரங்களில் சற்று நேரத்தை எடுத்துக் கொள்ளுவதை மறுக்க முடியாது.

இனி வரவிருக்கும் புதிய ஹோம் ஸ்கிரீன் விட்ஜெட் மூலம், வாட்ஸ்அப் செயலிக்குள் நுழையாமலேயே, ஹோம் ஸ்கிரீனில் உள்ள விட்ஜெட்டை அழுத்துவதன் மூலம் நேரடியாக வாய்ஸ் மேசேஜ்களை பதிவு செய்து அனுப்ப முடியும். இது குறிப்பாக டிராவல் செய்யும்போதோ அல்லது மிக விரைவாக ஒரு மெசேஜ்ஜை பகிர வேண்டிய நேரத்தில் பயனுள்ளதாக இருக்கும்.
யூசர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
இந்த பீச்சரானது யூசர்களுக்கு பல வகைகளில் கூடுதல் வசதியை வழங்குகிறது. வாட்ஸ்அப் ஆப்புக்குகள் நுழைந்து, சாட்டை (Chat) தேடி, அதன்பின் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் நிலையை இது தவிர்க்கிறது. ஒரே கிளிக்கில் வாய்ஸ் மெசேஜ்களை பதிவு செய்ய தொடங்கலாம். உடனடியாக அதை அனுப்பி பதில்களை பெற்று கொள்ளலாம்.
குறிப்பாக அடிக்கடி வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் சாட்களுக்கு, இந்த விட்ஜெட்டை ஹோம் ஸ்கிரீனில் வைப்பதன் மூலம் மிக எளிதாக அதை கையாள முடியும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு இந்த விட்ஜெட் அம்சம், ஸ்மார்ட்போன் அனுபவத்தை மேலும் எளிதாகக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பீட்டா வெர்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.
இந்த புதிய விட்ஜெட் அம்சம் தற்போது பீட்டா (Beta) வெர்ஷனில் மட்டுமே இருக்கிறது. ஆகவே, சோதனை முயற்சியில் கொண்டுவரப்பட்டு உள்ளது. WABetaInfo தளத்தின் தகவலின்படி, வாட்ஸ்அப் நிறுவனம் ஆனது வரவிருக்கும் அப்டேட்களில் இந்த வசதியை அனைத்து யூசர்களுக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீட்டா சோதனையின் போது ஏற்படும் தவறுகள் சரிசெய்யப்பட்டு, அதன் செயல்பாடுகள் முழுமையாக உறுதி செய்யப்பட்ட பிறகே, இது பொதுப் பயன்பாட்டிற்கான அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் அப்டேட்டில் சேர்க்கப்படும். எனவே, பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்பை அடிக்கடி அப்டேட் செய்து வைத்து கொள்ளுங்கள் விரைவில் கிடைக்கும்.
வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல்வேறு அப்டேட்களை கொடுத்து வருகிறது. மல்டி-டிவைஸ் சப்போர்ட், சேனல்கள், மற்றும் பிரைவரி அம்சங்களுக்கு பிறகு, இந்த வாய்ஸ் மெசேஜ் விட்ஜெட் வசதி பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாய்ஸ் மெசேஜ்கள் தவிர்க்க முடியாததாக மாறிவருகிறது.
ஆகவே, அது தொடர்பான அப்டேட்களில் வாட்ஸ்அப் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இப்போதைக்கு வாய்ஸ் மெசேஜ்களுக்கு மட்டும் இந்த விட்ஜெட் வசதி கிடைக்க இருப்பதாக தெரிகிறது. விரைவில் மற்ற அணுகல்களுக்கும் இதேபோல விட்ஜெட் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற செய்திகளுக்கு கிஸ்பாட் தளத்தை பின்தொடரவும்.


Click it and Unblock the Notifications