Home
Apps

வாட்ஸ்ஆப்பில் ரகசியமாக வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது எப்படி.?

இல்லையென்றால் இங்கே கற்றுக்கொள்ளுங்கள், எப்படி என்று.?!

By Muthuraj

வாட்ஸ்ஆப்பில் டைப் செய்து செய்து விரல் வலிக்க ஆரம்பித்தாலோ.. அல்லது டைப் செய்யும் அளவு சிறிய மெசேஜ் அல்ல, பக்கம் பக்கமாக பஞ்சாயத்து இருக்கிறது என்றாலோ.. அல்லது டைப்பிங் செய்யும் அளவு நான் ஒரு சுறுசுறுப்பான ஆள் இல்லை, செம்ம சோம்பேறி என்றாலோ.. போன் பேச முடியாது அதே சமயம் டைப் செய்யவும் முடியாது என்றாலோ.. உங்களுக்கு உதவுவது வாட்ஸ்ஆப் வாய்ஸ் மெசேஜ் தான்.!

வாட்ஸ்ஆப்பில், டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கு ஆகச்சிறந்த மாற்றாக கருதப்படும் வாய்ஸ் மெசேஜை ரகசியமாகவும் அனுப்பலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா.? இல்லையென்றால் இங்கே கற்றுக்கொள்ளுங்கள், எப்படி என்று.?!

ரகசியமாக என்றால் எப்படி.?

ரகசியமாக என்றால் எப்படி.?

ரகசியமாக என்றதும் மறைவாக அல்லது மறைத்து அனுப்பலாம் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். பொதுவாக வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படும் வாய்ஸ் மெசேஜ் ஆனது ஹெட்செட் போடாவிட்டால் மொபைல் ஸ்பீக்கரில் தானே ஒலிக்கும். அதை மொபைல் இயர் பீஸில் ஒலிக்க வைக்க முடியும் என்பது தான் இந்த சீக்ரெட்.!

அதெப்படி சாத்தியம்.?

அதெப்படி சாத்தியம்.?

பெரிய வேலைகள் ஏதுமில்லை. வழக்கமாக வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் செய்யும் பட்டனை லாங் பிரஸ் செய்யாமல் அதை பிரஸ் செய்து மேல் பக்கம் இழுக்க லாக் குறியீடு ஒன்று வரும். அதன் பின்னர் பதிவாகும் வாய்ஸ் மெசேஜ் ஆனது இயர் பீஸ் வழியாக கேட்கப்படும். அவ்வளவு தான்., முயற்சி செய்து பாருங்கள்.!

உங்களுக்கு கிடைக்குமா.?

உங்களுக்கு கிடைக்குமா.?

சுவாரசியமான விஷயம் என்னவெனில் இந்த அம்சத்தினை, விருப்பமுள்ள யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதாவது இந்த அம்சமானது வேலை செய்ய எந்தவொரு அப்டேட்டும் தேவையில்லை. குறிப்பிட்ட வழிமுறையை நிகழ்த்தும் போது, பதிவாகும் வாய்ஸ் மெசேஜ் ஆனது ஸ்பீக்கர் வழியாக வெளிப்படுவதற்கு பதிலாக இயர் பீஸ் வழியாக வெளிப்படும், அவ்வளவு தான்.!

ரெக்கார்ட் செய்வதில் அல்லது டெலிட் செய்வதில் ஏதேனும் மாற்றங்கள்.?

ரெக்கார்ட் செய்வதில் அல்லது டெலிட் செய்வதில் ஏதேனும் மாற்றங்கள்.?

பெரிய மாற்றங்கள் ஒன்றுமில்லை. ஒருமுறை பிரஸ் செய்து லாக்குறியீட்டை நோக்கி ரெக்கார்ட் பட்டனை இழுத்து விட்ட பின்னர், தாங்கவே பதிவாக தொடங்கும். பதிவாகும் மறுபக்கம் கேன்சல் பட்டன் கிடைக்கும். ரெக்கார்ட் செய்ததை அனுப்ப வேண்டும் என்றால் சென்ட் பட்டனை அழுத்தவும் அல்லது டெலிட் செய்ய வேண்டும் என்றால் கேன்சல் பட்டனை அழுத்தவும். அழுத்தவும் அது டெலிட் ஆகும்.

அனுப்பும் முன்னர் நாமே கேட்கும் அம்சம்.!

அனுப்பும் முன்னர் நாமே கேட்கும் அம்சம்.!

இது தவிர ரெக்கார்ட் செய்யப்பட்ட வாய்ஸ் மெசேஜை, அனுப்பும் முன்னர் நாமே கேட்கும் அம்சத்தையும் வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது. தற்போது வரையிலாக பொதுவாக அனைவருக்கும் கிடைக்காத இந்த அம்சமானது பீட்டா பதிப்பில் (2.18.123) மட்டுமே கிடைக்கிறது. இது மிக விரைவில் அனைவர்க்கும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறுக்கீடும் இருக்காது, பதிவும் நீக்கப்படாது.!

குறுக்கீடும் இருக்காது, பதிவும் நீக்கப்படாது.!

மேலும் ஒரு வாய்ஸ் மெசேஜை பதிவு செய்யும் போது குறுக்கீடு இருக்கும் பட்சத்தில், அதுவரை பதிவான வாய்ஸ் கிளிப்புகள் தானாக சேமிக்கப்படும். குறிப்பாக நீண்ட வாய்ஸ் மெசேஜை அனுப்பும் போது இந்த அம்சம், பயனர்களுக்கு மிகவும் உதவும், எந்த விதமான குறுக்கீடும் இருக்காது, பதிவும் நீக்கப்படாது. மேலும் பல வாட்ஸ்ஆப் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் ஆப்ஸ் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்

Best Mobiles in India

English summary
Send secret voice notes on WhatsApp, here's how. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X