Home
Apps

SBI Quick Missed Call Banking இன்டர்நெட் இல்லாமல் பேலன்ஸ் செக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

இந்தியாவின், பாரத ஸ்டேட் வங்கி (SBI) தற்பொழுது SBI Quick - Missed Call Banking என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையை பயன்படுத்தி உங்கள் எஸ்பிஐ வங்கி கணக்கில் இருக்கும் இருப்பு தொகை எவ்வளவு என்பதை நீங்கள் ஒரே ஒரு மிஸ்ட் கால் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்த புதிய எஸ்பிஐ வங்கி சேவையுடன் இன்னும் சில கூடுதல் சேவைகளை எப்படி போன் மூலம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

கணக்கின் பேலன்ஸ் தெரிய இதை செய்யுங்கள்

கணக்கின் பேலன்ஸ் தெரிய இதை செய்யுங்கள்

உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் இருப்பு தொகை எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள, எஸ்பிஐ வங்கியின் பேலன்ஸ் விசாரணை செக் செய்யும் இருப்பு விசாரணை எண்னான 09223766666 இந்த எண்னை உங்கள் போனில் டயல் செய்து ஒரு மிஸ்ட் கால் கொடுங்கள்.

மினி ஸ்டேட்மென்ட் கூட தெரிந்துகொள்ளலாம்

மினி ஸ்டேட்மென்ட் கூட தெரிந்துகொள்ளலாம்

இதன் மூலம் உங்கள் எஸ்பிஐ வங்கி கணக்கில் இருக்கும் வைப்பு நிதி எவ்வளவு இருக்கிறது என்பது தெரிந்துவிடும். இதேபோல் உங்கள் கணக்கின் மினி ஸ்டேட்மென்ட் மற்றும் கணக்கு தொடர்பான இதர விவரங்களையும் அறிந்துக் கொள்ளலாம்.

வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியம்

வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியம்

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் பதிவு செய்துள்ள அவர்களின் மொபைல் போன் எண்ணிற்கு மட்டுமே இந்த புதிய மிஸ்ட் கால் சேவை செயல்படும். வங்கியுடன் இணைக்கப்படாத எண்ணில் இருந்து மிஸ்ட் கால் கொடுத்தால் உங்களுக்கு எந்தவிதமான தகவலும் பகிரப்படாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இன்னும் கூடுதல் சேவைகளை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால் SBI Quick பயன்பாட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

SBI Quick ஆப்

SBI Quick ஆப்

SBI Quick - Missed Call Banking சேவையை பயன்படுத்த எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் SBI Quick ஆப்பையும் தங்களது ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த SBI Quick ஆப் கூகிள் பிளே ஸ்டார் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது.

லாகின் விதிமுறை

லாகின் விதிமுறை

பதிவிறக்கம் செய்த பின் ஒருமுறை லாகின் செய்து, விதிமுறைகளை பதிவு செய்து பயன்படுத்த துவங்குங்கள். உங்கள் வங்கி கணக்கு விபரம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்களை சரியாக பதிவிடுங்கள். SBI இன் இந்த பதிவு முறை மிகவும் எளிமையானதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்டர்நெட் சேவை தேவை இல்லை

இன்டர்நெட் சேவை தேவை இல்லை

எஸ்பிஐ வங்கியின் இந்த புதிய SBI Quick ஆப் பயன்படுத்த பயனர்களுக்கு இன்டர்நெட் சேவை தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனேன்றால், உங்களுக்கு தேவைப்படும் அனைத்து வங்கி விபரங்களையும் நீங்கள் ஒரே ஒரு மிஸ்டு கால் மூலம் தெரிந்துகொள்ளலாம். அடுத்தபடியாக, 09223488888 என்ற எண்ணுக்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து ‘REG Account Number' என்ற ஃபார்மட்டில் ஒரு குறுஞ்செய்தியை அனுப்புங்கள் வேலை முடிந்தது.

மினி ஸ்டேட்மன்ட் விபரம் அறிந்துகொள்ள இதை செய்யுங்கள்

மினி ஸ்டேட்மன்ட் விபரம் அறிந்துகொள்ள இதை செய்யுங்கள்

உங்கள் கணக்கில் இருக்கும் இருப்பு தொகை எவ்வளவு என்பதை அறிந்துகொள்ள 09223766666 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். அதேபோல் உங்கள் வங்கி கணக்கின் மினி ஸ்டேட்மன்ட் விபரங்களை அறிந்துகொள்ள 09223866666 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள். இறுதியாக நடைபெற்ற 5 பரிவர்த்தனைக்கான விபரங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்படும். இன்டர்நெட் இல்லாமல் இனி எளிதாக பேலன்ஸ் செக் செய்துக்கொள்ளுங்கள்.

கூடுதல் சேவைகளையும் பயனர்கள் அணுகலாம்

கூடுதல் சேவைகளையும் பயனர்கள் அணுகலாம்

இந்த SBI Quick - Missed Call Banking முறைப்படி, உங்கள் வங்கி கணக்கின் இருப்பு தொகை மற்றும் மினி ஸ்டேட்மென்ட் விபரங்கள் மட்டுமின்றி உங்களின் ஏடிஎம் கார்டை முடக்குவது, ஏடிஎம் கார்டு பயன்முறை கட்டமைப்பு போன்ற கூடுதல் சேவைகளையும் உங்களால் இந்த SBI Quick Missed Call Banking மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
SBI Quick App Allows It's Bank Customers To Know Their Account Balance With Single Missed Call : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X