Just In
- 2 hrs ago
டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- 4 hrs ago
இனி குழப்பம் வேண்டாம்? ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட் போன்கள்
- 4 hrs ago
இந்தியா: 108 மெகா பிக்சல் கேமரா கொண்ட 'சியோமி மி நோட் 10' விலை மற்றும் அறிமுகம் தேதி லீக்!
- 5 hrs ago
உலக நாட்டு செய்திகளை கலக்கும் 3 தமிழர்கள்: எதற்கு தெரியுமா?
Don't Miss
- News
இந்த மாதிரியான சம்பவங்களுக்கு என்கவுண்டர்களை சட்டப்பூர்வமாக்கணும்.. பாஜக பெண் எம்பி வரவேற்பு
- Movies
முரட்டுத்தனமான பேய்களை விரட்டுவதே வி .இஸட்.துரையின் இருட்டு
- Finance
827 பங்குகள் விலை ஏற்றம்..! 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..!
- Automobiles
வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?
- Sports
இந்திய வீரர்களின் பந்துவீச்சை வெளுத்துகட்டிய வெஸ்ட் இண்டீஸ் .. 208 ரன்கள் இலக்கு
- Lifestyle
மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்று முதல் ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்.! எப்படினு தெரிஞ்சுக்கோங்க.!
ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பண பரிவர்த்தனை செய்யும் புதிய சேவையை பாரத் ஸ்டேட் வங்கி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி இனி ஸ்டேட் பேங்க் பயனர்கள் ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்.

ஏ.டி.எம் கார்டு இல்லா பரிவர்த்தனை சேவை
சிப் இல்லாத ஸ்மார்ட் ஏ.டி.எம் கார்டுகளை மார்ச் இறுதிக்குப் பின் பயன்படுத்த முடியாதென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அனைவரும் சிப் உள்ள ஏ.டி.எம் கார்டுகளை வாங்க அலைந்துகொண்டிருக்கும் நேரத்தில் பாரத் ஸ்டேட் வாங்கி ஒருபடி முன்னேறி கார்டு இல்லா பரிவர்த்தனை சேவையை தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

யோனோ டிஜிட்டல் பேங்கிங்
எஸ்.பி.ஐ. யோனோ என்ற டிஜிட்டல் பேங்கிங் சேவையை பாரத் ஸ்டேட் வங்கி கடந்த 2017 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. யோனா கேஷ்(Yono Cash) என்ற புதிய மொபைல் செயலியை பயன்படுத்தி இனிமேல் பயனர்கள் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

2 ஃபாக்டர் ஆதென்டிகேஷன்
இந்த யோனா கேஷ் சேவை, 2 ஃபாக்டர் ஆதென்டிகேஷன் முறைப்படி செயல்படுகிறது, இதனால் பயனர்களுக்கு ஸ்கிம்மிங் மற்றும் குளோனிங் ஆபத்துகளில் சிக்காமல் பாதுகாப்பாகப் பணப் பரிவர்த்தனை செய்ய முடியுமென்று பாரத் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

16,500 ஏ.டி.எம் மையங்களில் அறிமுகம்
இந்த புதிய யோனா கேஷ் செயலியை உங்கள் மொபைலில் பயன்படுத்தி இனி ஏ.டி.எம் கார்டு இல்லாமல் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்-களில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்த சேவை இந்தியாவில் உள்ள சுமார் 16,500 ஏ.டி.எம் மையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யோனா கேஷ் செயலி
யோனா கேஷ் செயலியை டவுன்லோட் செய்து, 6 இலக்கு பயனர் அடையாள என்னை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அக்கௌன்ட் மொபைல் எண்ணையும் இணைத்து கொள்ளுங்கள், 6 எண் அடையாள இலக்கு எண்ணைப் பதிவு செய்ததும் ஓ.டி.பி எண் மெசேஜ்ஜாக வழங்கப்படும். அதனைப் பயன்படுத்தி உங்களுக்கான யோனா கேஷ் அக்கௌன்ட்டை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

ஏ.டி.எம் கார்டு இல்லாமல் இனி பணம் எடுத்துக்கொள்ளலாம்
அருகில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் 6 எண் பாஸ்வோர்டை பயன்படுத்தி ஏ.டி.எம் கார்டு இல்லாமல் இனி பணம் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் பின் நம்பர் மற்றும் 6 எண் கொண்ட இலக்கு எண்ணைப் பயன்படுத்து 30 நிமிடங்களுக்குள் பணப் பரிவர்த்தனையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் எண் & பெயர் மூலம் ஆதார் கார்டு ஸ்டேட்டஸ் விவரங்களை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?
இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் வழங்கிய ஆதார் அடையாள அட்டையை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டது.
அதன் பின்பு நடந்தஆதார் சர்ச்சைகளுக்கு பிறகு ஆதார் கட்டாயமில்லை என்பது போல உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தனிநபர் அடையாள அட்டை
இருப்பினும் இன்னும் பல தனிநபர் அடையாள சான்றிதழ்கள் ஆதரவுடன் இனிக்கப்பட்டுதான் உள்ளது. தனிநபர் அடையாள அட்டையை இன்னும் பல இடங்களில் பயன்படுத்தித் தான் வருகிறோம்.

ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸ்
உங்கள் ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸ் மற்றும் அதில் பதிவிடப்பட்டுள்ள உங்களின் விபரங்களை, மொபைல் எண் மற்றும் பெயர் வைத்து ஆன்லைன் இல் எப்படி சரி பார்ப்பது என்று பார்க்கலாம்.

ஆதார் விபரங்களை எப்படி ஆன்லைன் இல் சரிபார்ப்பது:
- முதலில் uidai.gov.in தளத்தை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
- மை ஆதார் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- அதன் கீழ் காணப்படும் செக் ஆதார் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள்.

புது டேப்
- உங்கள் ஆதார் ஸ்டேட்டஸ் இன் புது டேப் ஓபன் ஆகிவிடும்.
- அதில் உங்கள் கார்டின் 14 இலக்கு என்றொல்மெண்ட் ஐடியை பதிவு செய்துகொள்ளுங்கள்.
- செக்யூரிட்டி கோடு எண்களையும் என்டர் செய்து செக் ஸ்டேட்டஸ் கிளிக் செய்யுங்கள்.

தொலைந்த ஆதார் அட்டையை மொபைல் எண் மற்றும் பெயர் வந்து எப்படித் திரும்பப் பெறுவது:
- முதலில் uidai.gov.in தளத்தை உங்களின் மொபைல் அல்லது லேப்டாப்பில் ஓபன் செய்துகொள்ளுங்கள்.
- அதன் கீழ் காணப்படும் "Retrive Lost or Forgotten EID/UDI" ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
- உங்களின் பெயர், மொபைல் எண், ஈமெயில் ஐடி மற்றும் செக்யூரிட்டி கோடு எண்களை என்டர் செய்து சென்ட் ஒடிபி கிளிக் செய்யுங்கள்.
- உங்கள் எண்ணிற்கு வந்த ஒடிபி எண்களை "Verify OTP" கிளிக் செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

டவுன்லோட் ஆதார் கார்டு
- உங்களின் ஆதாரின் 12 இலக்கு எண் மற்றும் 14 இலக்கு என்றொல்மெண்ட் ஐடி எஸ்.எம்.எஸ் ஆகா அனுப்பப்படும்.
- uidai.gov.in தளத்தின் ஹோம் பேஜ் சென்று "I have" ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். - இப்பொழுது உங்களின் 14 இலக்கு என்றொல்மெண்ட் ஐடி, பின் நம்பர், மொபைல் எண் மற்றும் பெயர் டைப் செய்து கொள்ளுங்கள்.
- "Validate and Download" ஆப்ஷனை கிளிக் செய்து உங்களின் ஈ-ஆதார் கார்டு விபரங்களை உங்களின் போன் ஆழத்து லேப்டாப் இல் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090