SBI YONO ஆப்ஸ் இன் இன்ஸ்டா சேமிப்பு வசதி பற்றி உங்களுக்கு தெரியுமா?

|

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) அண்மையில் இன்ஸ்டா சேமிப்பு கணக்கு என்ற புதிய வசதியை இந்தியாவில் துவங்கியது. இந்த புதிய இன்ஸ்டா சேமிப்பு சேவை பற்றி உங்களுக்குத் தெரியுமா? தெரியாதென்றால் இப்பொழுது தெரிந்துகொள்ளுங்கள். இந்த சேவையை எப்படி பயன்படுத்தி நீங்களும் பயனடையலாம் என்று பார்க்கலாம்.

YONO App பயன்பாட்டு

இந்த அற்புதமான வசதியை எஸ்பிஐ யோனோ ஆப் மூலம் அறிமுகம் செய்துள்ளது. உங்கள் ஸ்மார்ட்போனில் YONO App பயன்பாட்டு செயலியை இன்ஸ்டால் செய்து இந்த சேவையை நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது SBI வங்கியின் https://www.sbiyono.sbi என்ற யோனோ வலைத்தளத்தைப் பயன்படுத்தலாம். ஆதார் OTP அங்கீகாரத்தைப் பயன்படுத்தி, வீட்டிலிருந்தபடியே உங்கள் வங்கிக் கணக்கை நீங்கள் புதிதாகத் திறக்கலாம்.

 2 லட்சம் மட்டுமே

உங்களுடைய சாதாரண வங்கி சேமிப்பு கணக்கிற்கு வரையறுக்கப்பட்டபடி, வாடிக்கையாளர் குறைந்தபட்ச பண இருப்பை பராமரிக்க வேண்டும். இந்த வங்கிக் கணக்கில் அதிகபட்ச இருப்புத் தொகையாகப் பயனர் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே வைத்துக்கொள்ளமுடியும். அதேபோல், சேமிப்பு வங்கிக் கணக்கிற்கு அனுமதிக்கப்பட்ட ஓராண்டுக்கான மொத்த கடன் தொகை 2 லட்சம் மட்டுமே என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

65-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!65-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

ஆண்ட்ராய்டு 10

தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளடக்கத்திற்கான இன்ஸ்டா சேமிப்பு கணக்கு ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்படும் ஆன்லைன் சேவையை சேர்ந்தது. இந்த இன்ஸ்டா சேமிப்பு சேவை தற்பொழுது iOS 8 மற்றும் அதற்கு மேற்பட்ட iOS தளங்களில் பயன்முறைக்குக் கிடைக்கிறது. அதேபோல், ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு ஆண்ட்ராய்டு 5.0 முதல் ஆண்ட்ராய்டு 10 வரையிலான பயனர்களுக்கு இந்த சேவை கிடைக்கிறது.

ஒன்பிளஸ் சீன நிறுவனமா? உண்மையில் ஒன்பிளஸ் எந்த நாட்டை சேர்ந்த பிராண்ட் தெரியுமா?ஒன்பிளஸ் சீன நிறுவனமா? உண்மையில் ஒன்பிளஸ் எந்த நாட்டை சேர்ந்த பிராண்ட் தெரியுமா?

YONO App

இன்ஸ்டா சேமிப்பு கணக்கைத் திறப்பதற்கான கிளையை விண்ணப்பதாரரே ஆப் மூலம் எளிதாக தேர்வு செய்துகொள்ளலாம். இந்த இன்ஸ்டா சேமிப்பு கணக்கிற்கு YONO App பயன்பாட்டில் Nomination கட்டாயமாகும், கணக்கு வைத்துள்ள நபர் ஒருவரை மட்டுமே நாமினேஷன் முறைக்கு நியமனம் செய்ய முடியும். இந்த கணக்கிற்கு Green PIN process மூலம் ஏடிஎம் பின் உருவாக்கப்பட்டு, Rupay டெபிட் கார்டு வழங்கப்படும். இந்த சேமிப்புக் கணக்கிற்கு பாஸ் புக் மற்றும் காசோலை வசதி கிடையாது.

Best Mobiles in India

English summary
SBI Insta Saving Bank Account Found On SBI Yono App Know The Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X