இந்த ஆப்ஸ்கள் உங்கள் மொபைலில் இருந்தால் பணம் மிச்சாகும் தெரியுமா?

பணத்தை மிச்சப்படுத்த உதவும் ஆப்ஸ்கள்

By Siva
|

உங்களிடம் ஒரு நல்ல மொபைல் போன் இருந்தால் போன் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களுகு மட்டும் பயன்படுவது மட்டுமின்றி உங்களது வரவு, செலவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

இந்த ஆப்ஸ்கள் உங்கள் மொபைலில் இருந்தால் பணம் மிச்சாகும் தெரியுமா?

பணத்தை சம்பாதிப்பது எந்த அளவுக்கு கஷ்டமோ, அதே அளவுக்கு சம்பாதித்த பணத்தை கட்டுப்பாடாக தேவையான விஷயத்திற்கு மட்டும் செலவு செய்வது மிகுந்த கஷ்டமான விஷயம். நம்முடைய வரவும் செலவும் நமது கட்டுக்குள் இருந்தால்தான் பணம் மிச்சமாகும்

இந்த நிலையில் நமது செலவுகள், வரவைவிட அதிகமானால் நமக்கு எச்சரிக்கை விடுக்க ஒரு நபர் தேவை. அந்த இடத்தை பூர்த்தி செய்கிறது ஒருசில ஆப்ஸ்கள். ஆண்ட்ராய்டு போன்களுக்கு செலவை கட்டுப்படுத்தும், செலவினங்களை ஒழுங்குபடுத்தும் ஆப்ஸ்கள் நிறைய உள்ளன. ஒரு ஃபைனான்சியர் அட்வைஸர் மாதிரி செயல்படும் இதுபோன்ற ஆப்ஸ்களில் ஒருசிலவற்றை தற்போது பார்ப்போம்

வால்நட் (Walnut)

வால்நட் (Walnut)

இந்த ஆப், உங்களுடைய மாத செல செலவுகள், கட்ட வேண்டிய பில்கள் ஆகியவற்றை சரியான தேதிக்குள் உங்களுக்கு ஞாபகப்படுத்தும். உங்களுக்கு வங்கிகளில் இருந்து மற்றும் பிறவற்றில் இருந்து வரும் மெசேஜ்களிடம் இருந்து உங்கள் பில், டிக்கெட்டுகள் மற்றூம் முக்கிய செலவினங்கள் ஆகியவற்றை ஆய்ந்து நீங்கள் செய்யும் செலவுகள், வரவுகள் ஆகியவற்றை உங்களுக்கு ஒரு மினி அறிக்கையாக கொடுக்கும். மேலும் இந்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் உள்ள நண்பர்களிடமும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்

டவுன்லோடு

 மணிஃபை (Monefy)

மணிஃபை (Monefy)

இந்த ஆப் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் செலவினங்களை ஒரே கிளிக்கில் எளிதாகக் கண்காணிக்கலாம், இது புதிய செயலி உங்களுடைய செலவினங்களை மிக விரைவாக சேர்க்க அனுமதிக்கிறது. மேலும் இதில் உள்ள பதிவுகளை புதியதாகஉருவாக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பதிவுகளை டெலிட் செய்யவோ முடியும். மேலும் இதில் உள்ள தகவல்களை இன்னொரு மொபைலுக்கு மாற்றவும் செய்யலாம்.

டவுன்லோடு

மணி வியூ (Money View)

மணி வியூ (Money View)

இந்த செயலி உங்களுக்கு மாத பட்ஜெட்டை போல வரவு எவ்வளவு? செலவு எவ்வளவு? என்பதை ஒரு அமைத்து கொடுக்கும். மேலும் இந்த ஆப், உங்களுடைய வங்கி கணக்கு எண்களின் கடைசி நான்கு எண்களை மட்டுமே எடுத்து கொண்டு எஸ்.எம்.எஸ் தகவல்களின்படி உங்களுடைய மாத பட்ஜெட்டை கொடுக்கும். மேலும் வங்கியின் செக்யூரிட்டியுடன் இணைந்து செயல்பட்டு உங்களுக்கு பாதுகாப்பையும் அளிக்கும்

டவுன்லோடு

மோ-பில்ஸ்: (Mobills)

மோ-பில்ஸ்: (Mobills)

இந்த ஆப் உங்களுடைய பட்ஜெட் திட்டம் மற்றும் பில்கட்ட வேண்டிய தேதியை ஞாபகப்படுத்துவது என இரண்டையும் ஒரே க்ளிக்கில் உங்களுக்கு அளிக்கும். உங்களுடைய வரவு செலவு டேட்டாக்களை மிக எளிதில் கையாண்டு உங்களுக்கு தகவல்களை அளிக்கும். மேலும் உங்களுக்கு வரும் வரவு, செலவுகள் மற்றும் பரிவர்த்தனைகள் அனைத்தும் உங்கள் விரல்நுனியில் சமர்ப்பிக்கும்

டவுன்லோடு

மணி லவர் (Money Lover)

மணி லவர் (Money Lover)

உங்களுடைய அனைத்து செலவுகளையும் சரியாக கண்காணிக்கும் ஆப்ஸ்களில் இதுவும் ஒன்று. ஒருசில நொடிகளில் உங்களுடைய தினசரி வரவுசெலவும், பரிவர்த்தனைகளை வகைப்படுத்துகிறது. மேலும் இந்த ஆப் மூலம் உங்கள் ஒரு பட்ஜெட்டை ஏற்படுத்தி கொண்டு அதற்குள் செலவை கட்டுப்படுத்தி கொள்ளலாம். மேலும் உங்களது பரிவர்த்தனைகளை வேறு சாதனங்களுக்கு பரிமாறிக்கொள்ளும் வசதியும் உண்டு.

டவுன்லோடு

Best Mobiles in India

Read more about:
English summary
Owning a good smartphone will help you in managing things apart from making calls and messages.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X