சராஹா (ஆப்) ஹீரோயினா - வில்லியா.? நல்லதா - கெட்டதா.?

By Prakash
|

இன்று உலக நாடுகள் முழுவதும் வைரலாக பரவி வருகிறது இந்த சராஹா ஆப், மேலும் இந்தியாவில் சராஹா ஆப் பொறுத்தவரை அதிக மக்கள் டவுன்லோட் செய்த வண்ணம் உள்ளனர், மேலும் இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் மிக எளிமையாக கிடைக்கிறது, அதன்பின் 5எம்பி அளவு மிக விரைவில் டவுன்லோடு செய்ய முடியும் இந்த சராஹா ஆப்.

சராஹா (ஆப்) ஹீரோயினா - வில்லியா.? நல்லதா - கெட்டதா.?

இந்த சராஹா ஆப் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது எனக் கூறப்படுகிறது, சிலர் இந்த ஆப் பாதுகாப்பானது இல்லை எனக் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இவற்றில் உள்ள நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்:

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்:

இந்த சராஹா ஆப் பொறுத்தமட்டில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் இவற்றை எளிமையாக டவுன்லோடு செய்ய முடியும்.

சவுதி அரேபியா:

சவுதி அரேபியா:

சராஹா ஆப் பொறுத்தவரை சவுதி அரேபியாவில் உள்ள மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் பல லட்சம் பேர் இந்த சராஹா ஆப் பயன்பாட்டை டவுன்லோட் செய்துள்ளனர்.

சராஹா ஆப்:

சராஹா ஆப்:

இந்த சராஹா ஆப் பொதுவாக முகம் தெரியாதவர்கள் தரும் கருத்துக்களை கொண்டு ஒருவர் தன்னை மாற்றிக் கொள்ளமுடியும் என இதை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் முகம் தெரியாதவர்கள் கொடுக்கும் கமெண்ட்களை நாம் பெறமுடியும்.

விஸ்பர் மற்றும் யாக் :

விஸ்பர் மற்றும் யாக் :

இந்த சராஹா ஆப் போல இணையத்தில் பல்வேறு ஆப்ஸ் உள்ளன, எடுத்துக்காட்டாக விஸ்பர் மற்றும் யாக், சீக்ரேட் போன்ற அதிக ஆப் இணையத்தில் வெளிவந்துள்ளன.

ப்ரோஃபைல்:

ப்ரோஃபைல்:

நீங்கள் இந்த சராஹா ஆப் பயன்படுத்தினால் உங்கள் ப்ரோஃபைலினை யார் வேண்டுமானாலும் பார்க்கு வசதி இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது, அதன்பின் மற்றவற்களின் ப்ரோஃபைல்களை பார்த்து மெசேஜ் அனுப்பும் வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 மெசேஜ்:

மெசேஜ்:

ப்ரோஃபைல்களை பார்த்து மெசேஜ் அனுப்பும் வசதி இவற்றில் உள்ளது ஆனால் அவர்கள் லாக் இன் செய்தாலும் அனுப்பும்மெசேஜ் மடடுமே தெரியும்,யார் அனுப்பியது என்ற தகவல் கிடைக்காது.

மெசேஜ் பிளாக்:

மெசேஜ் பிளாக்:

தேவையில்லாமல் வரும் மெசேஜ் மற்றும் பலரின் ப்ரோஃபைல்களை பிளாக் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது பல லட்சம் மக்கள் இந்த சராஹா ஆப் பயன்படுத்துகின்றனர்.

இரண்டு மொழிகள்:

இரண்டு மொழிகள்:

இந்த சராஹா ஆப் பொறுத்தவரை இரண்டு மொழிகள் மட்டுமே பயன்படுத்தும் வசதி உள்ளது அவை ஆங்கிலம் மற்றும் அரபு போன்ற மொழிகள்.

Best Mobiles in India

English summary
Sarahah is an anonymous messaging app Heres why it is going viral ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X