Samsung Galaxy F62 புதிய அப்டேட்.. எதற்காக தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

|

சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனுக்கான முதல் அப்டேட்டை வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டு, பிப்ரவரி 22 அன்று அதன் முதல் விற்பனைக்கு வந்தது.

Samsung Galaxy F62 புதிய அப்டேட்.. எதற்காக தெரியுமா?

அப்டேட் வெர்ஷன் எண் E625FDDU1AUB4 உடன் வருகிறது, மேலும் இது ஸ்மார்ட்போனுக்கு சமீபத்திய பிப்ரவரி பாதுகாப்பு பேட்சையும் கொண்டு வருகிறது. மேலும், இது கேமரா துறையிலும் மேம்பட்ட செயல்திறனைக் கொண்டுவருகிறது. ஒட்டுமொத்த சாதன நிலைத்தன்மையும் மேம்படுத்தப்பட்டுள்ளது இந்த புதிய அப்டேட்.

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 அப்டேட் சுமார் 180 MB அளவை கொண்டுள்ளது. புதிய அப்டேட் அண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்டது, இது யுஐ 3.1 உடன் உள்ளது. இப்போது இது அனைத்து சாம்சங் கேலக்ஸி எஃப் 62 பயனர்களுக்கு கிடைக்கிறது. அSettings > Software Update > Download and Install கிளிக் செய்து அப்டேட்டை டவுன்லோட் செய்யலாம்.

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 சிறப்பம்சம்

  • 6.7' இன்ச் 1080x2400 பிக்சல் கொண்ட முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் பிளஸ் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 11 உடன் UI 3.1 இயங்குதளம்
  • ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9825 சிப்செட்
  • 6 ஜிபி ரேம் / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை ஸ்டோரேஜ்
  • குவாட் ரியர் கேமரா அமைப்பு
  • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
  • 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
  • 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
  • 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
  • டூயல் நானோ சிம்
  • வைஃபை
  • புளூடூத் v 5.0
  • ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
  • என்எப்சி
  • யூ.எஸ்.பி டைப்-சி
  • 3.5 ஆடியோ ஜாக்
  • 25W ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 7,000 எம்ஏஎச் பேட்டரி
Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Galaxy F62 gets its first update in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X