Home
Apps

ரஷ்யா-உக்ரைன் போர்: அழுத்தம் கொடுக்கும் வகையில் இதுவரை இத்தனை செயலி, சேவைகள் ரஷ்யாவில் ரத்து!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் ஒரு மாதத்தைக் கடந்தும் நடந்து வருகிறது. இது உலகம் முழுவதும் பதற்றத்தையும் தாக்கத்தையும் அதிகரித்து வருகிறது. ரஷ்ய படைகளை திரும்பப் பெறும்படியான அழுத்தங்களை அதிகரிக்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் ரஷ்யாவில் சேவைகளை நிறுத்தி அறிவித்து வருகிறது. ஆப்பிள், அமேசான், கூகுள் உள்ளிட்ட பல பிரதான தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த பட்டியலில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் சேவைகளை திரும்பப் பெற்று அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ரஷ்யாவில் தங்கள் சேவைகளை திரும்பப் பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

ஒப்பந்தங்கள் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு

ஒப்பந்தங்கள் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு

அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், கனடா உள்ளிட்ட 12 நாடுகள் 1949 உலகப் போருக்கு பின்பு ஒப்பந்தங்கள் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு தான் நேட்டா. இதன்பின் இதில் கூடுதலாக 30 நாடுகள் இதில் உறுப்பு நாடுகளாக இணைந்தன. மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து பார்க்கையில், நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் மீது பிற நாடுகள் போர் தொடுக்கும் பட்சத்தில் அமைப்பில் பிற நாடுகள் உதவிக்கு வர வேண்டும் என்பதாகும். இந்த நிலையில் ரஷ்யா தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு உக்ரைன், தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய நேட்டோ அமைப்பில் இணைய விரும்பியது. இதையடுத்து உக்ரைன் நாட்டை நேட்டோ அமைப்புடன் இணைக்கக் கூடாது என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தியதோடு இதற்கான உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. இது கைகூடாததை அடுத்து ரஷ்யா நேரடியாக உக்ரைன் மீது போர் தொடக்க தொடங்கியது.

ஆப்பிள் பே மற்றும் ஆப்பிள் ஸ்டோர்

ஆப்பிள் பே மற்றும் ஆப்பிள் ஸ்டோர்

பொருளாதாரத் தடைகளை தொடர்ந்து ஆப்பிள் பே சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் ஆப்பிள் தள்ளப்பட்டிருக்கிறது. ஆப்பிள் ரஷ்யாவில் அதன் ஸ்டோர்களை மூடியது. ஆர்டி நியூஸ் மற்றும் ஸ்புட்னிக் போன்ற ரஷ்ய ஸ்பான்சர் செய்யப்பட்ட பயன்பாடுகளும் ஆப் ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டிருக்கின்றன.

அடோப்

அடோப்

அடோப் ரஷ்யாவில் அதன் சேவைகள் மற்றும் மென்பொருளை நிறுத்தியது, இது அச்சு ஊடகங்கள் மற்றும் எடிட்டர்களை பாதிக்கும் வகையில் இருந்தது. எடிட்டரஸ் மற்றும் ஆர்டிஸ்ட் போன்ற உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் பலரிடையே அடோப் அதன் சேவைகளில் மிகவும் பிரபலமானது.

அமேசான்

அமேசான்

உலகளவில் மிகப் பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் ரஷ்யாவில் தனது சில்லறை வர்த்தகத்தை நிறுத்தி அறிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி ரஷ்யா, பெலாரஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் இனிமேல் புதிதாக அமேசானில் வாடிக்கையாளராக சேர முடியாது என அமேசான் அறிவித்திருக்கிறது. அதேபோல் ரஷ்யாவில் தனது ப்ரைம் வீடியோ சேவையையும் ரத்து செய்து அறிவித்துள்ளது.

எட்ஸி

எட்ஸி

ரஷ்யா மற்றும் பெலாரஸில் தனது சேவைகளை திரும்பப் பெற்ற மற்றொரு பிரபலமான தொழில்நுட்ப நிறுவனமான எட்ஸி (Etsy) ஆகும். ஏப்ரல் 4 முதல் ரஷ்யாவிலிருந்து எட்ஸியை விற்பனையாளர்கள் அணுக முடியாது என்று இந்த இ-காமர்ஸ் தளம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மெட்டா

மெட்டா

மெட்டா, பேஸ்புக் அதன் சேவையை திரும்பப் பெறுவதற்கு முன்பே ரஷ்யாவில் இருந்து தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறி, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை ரஷ்யாவில் இருந்து தடை செய்யப்பட்டன.

கூகுள் மற்றும் கூகுள் பே

கூகுள் மற்றும் கூகுள் பே

கூகுள் பல்வேறு சேவைகளை நிறுத்தி அறிவித்திருக்கிறது. கூகுள் பே சேவையும் திரும்பப் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யா படையெடுப்பு குறித்து தவறான விளம்பரங்களை காட்டுவதை நிறுத்தும்படி ரஷ்யா கட்டுப்பாட்டு அமைச்சகம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து கூகுள் முதல்முறையாக ஒரு நாட்டில் விளம்பர வர்த்தகத்துக்கு தடை செய்தது. தொடர்ந்து கூகுள் ப்ளே ஸ்டோர் தடை செய்யப்பட்டது.

மைக்ரோசாப்ட், நெட்ஃபிளிக்ஸ், டிக்டாக்

மைக்ரோசாப்ட், நெட்ஃபிளிக்ஸ், டிக்டாக்

மைக்ரோசாப்ட் நிறுவனமும் உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவில் தனது சேவைகளை நிறுத்தி அறிவித்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் ரஷ்யாவில் இருந்து தடை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு, நெட்ஃபிளிக்ஸ் ரஷ்யாவை அதன் சேவை செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்ய பயனர்களின் பிரபல பயன்பாடான டிக்டாக் அதன் அனைத்து புதிய பதிவுகளையும் நிறுத்தி அறிவித்தது.

நோக்கியா, சோனி, சாம்சங்

நோக்கியா, சோனி, சாம்சங்

நோக்கியா, சாம்சங் மற்றும் சோனி போன்ற ஸ்மார்ட்போன்பிராண்டுகள் ரஷ்யாவில் வன்பொருள் விற்பனையை நிறுத்திவிட்டன. இதில் சோனி பிஎஸ்5 விற்பனை, சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மற்றும் நோக்கியா உள்கட்டமைப்பு தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

File Images

Best Mobiles in India

English summary
Russia Ukraine War- Here is a list of banned Apps to put pressure on Russia
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X