இதெல்லாம் டோர் டெலிவரியா? ரஷ்ய ஸ்டார்ட்அப் அசத்தல்.!

தற்போது இந்த சேவையானது மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க், ஸோஸி மற்றும் க்ராஸ்னோடர் முதலிய 4 நகரங்களில் கிடைக்கிறது.

|

இரஷ்யாவில் உள்ள நகரவாசிகள் தற்போது அவர்களின் ஆன்லைன் ஷாப்பிங் பட்டியலில் பெட்ரோலையும் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் இரண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கார் பார்க்கிங் இடத்திற்கே வந்து எரிபொருளை டெலிவரி செய்கின்றன.

இதுபோன்ற சேவைகள் ஏற்கனவே வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் நிலையில், இரஷ்யாவின் கடுமையான குளிர்காலத்தை மனதில் வைத்துப் பார்க்கையில் இந்த சேவை சிறப்பாக ஒன்றாக பார்க்கப்படுகிறது. இரஷ்ய மொழியில் 'டாப்லிவோ வி பாக்' அதாவது "டேங்கிற்கே வரும் எரிபொருள்" என்ற பெயர் கொண்ட நிறுவனமும், பம்ப் என்று மற்றொரு நிறுவனமும், ஸ்மார்ட்போன் செயலி வாயிலாக ஆர்டர் செய்தால், வாகனத்தின் உரிமையாளர் இல்லையெனினும் கூட, வீட்டிற்கே வந்து எர்பொருளை நிரப்பி கொடுத்துவிடும்.

பீட்டர்ஸ்பெர்க்

பீட்டர்ஸ்பெர்க்

தற்போது இந்த சேவையானது மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க், ஸோஸி மற்றும் க்ராஸ்னோடர் முதலிய 4 நகரங்களில் கிடைக்கிறது. ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் வாயிலாக அமெரிக்க நிறுவனங்களான உபர் மற்றும் அமேசான் போன்றவை, பொருட்களை ஆன்-டிமாண்ட் டெலிவரி செய்யும் முறையை, இந்நிறுவனங்கள் இரஷ்ய நகரங்களில் முன்னெடுக்கின்றன.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

"இதனை நீங்கள் உபர்மயமாக்கல் (உபரைஸ்சேசன்) என்று அழைக்கலாம்"என்கிறார் டாப்லிவோ வி பாக் நிறுவனத்தின் பொது இயக்குனர் அலினா. "டாக்ஸி, உணவு டெலிவரி உள்ளிட்ட பலதுறைகளிலும் இதை காண முடியும்" என்கிறார்.

ஏதேனும் ஒரு சேவைகளில் பதிவு செய்த பயனர் ஒருவர், வாகனத்தில் எரிபொருள் குறைவாக இருக்கும் போது, ஸ்மார்ட்போன் வாயிலாக ஆர்டர் செய்யும் போது, வாகனம் இருக்கும் இடம் உள்ளிடட் தகவல்கள் உடனடியாக அனுப்பப்படும்.

இணைய வழியில்

இணைய வழியில்

இணைய வழியில் ஆர்டர் பெறப்பட்டவுடன், பெட்ரோல் அல்லது டீசல் போன்ற எரிபொருள் நிரப்பப்பட்ட டேங்க் இணைக்கப்பட்டு சிறிய வேன் அந்த இடத்திற்கு அனுப்பப்படும். அந்த வாகனம் எரிபொருள் நிரப்ப வேண்டிய இடத்திற்கு வந்தவுடன், உரிமையாளரின் உதவி ஏதுமின்றி அவர்களாகவே பெட்ரோல்/எரிபொருளை நிரப்பிவிட்டு அடுத்த வாடிக்கையாளர்களை நோக்கி சென்றுவிடுவர்.

வாடிக்கையாளர்கள் பெட்ரோல் டேங்கின் மூடியை பூட்டாமல் விட்டுவிட்டால், அவர்கள் இல்லாமல் கூட இந்த வாகனம் பெட்ரோல் நிரப்பிவிட்டு சென்றுவிடும். ஆனாலும் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த முறையை கையாளமாட்டார்கள்.

டாப்லிவோ வி பாக்

டாப்லிவோ வி பாக்

"மூடியை மூடாமல் விட்டுச் சென்றால், யாராவது டேங்கில் சர்க்கரையை போடுவது, ஏற்கனவே உள்ள பெட்ரோலை திருடுவது போன்றவற்றை செய்வர் என்ற பயம் பலருக்கும் இருக்கும்" என்கிறார் டாப்லிவோ வி பாக் நிறுவனத்தின் செயல் இயக்குனர் போரிஸ். இவர் இச்சேவையை 2017 முதல் வழங்கிவருகிறார்(பம்ப் நிறுவனம் துவங்கி ஓராண்டிற்கு பின்).

இவ்விரு நிறுவனங்களின் பெரும்பாலான வர்த்தகம் கார் சேரிங் நிறுவனங்களால் இயக்கப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதால் மட்டுமே கிடைக்கிறது. தனியார் கார் முதலாளிகளும் குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்த சேவை இன்னும் இரஷ்ய எரிபொருள் சந்தையில் முக்கிய பங்குவகிக்கவில்லை. நாளொன்றுக்கு சராசரியாக 16,000 முதல் 18,000 வரை எர்பொருளை டெலிவரி செய்கின்றனர். இது ஒரு எரிபொருள் நிலையம் விற்கும் எரிபொருளின் அளவு தான்.

பெட்ரோல் பங்க்

பெட்ரோல் பங்க்

ஆனாலும் இந்நிறுவனங்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வளர திட்டமிட்டுள்ளன. வாகனங்கள் எரிபொருள் நிரம்பும் தேவை ஏற்பட்டால் தானாகவே ஆட்டோமேடிக் மெசேஜ் அனுப்பவும், உரிமையாளர் பகிரும் இரகசிய எண் மூலம் பெட்ரோல் டேங்க் மூடியை திறக்கும் தொழில்நுட்பம் ஏற்கனவே உள்ளது.

"இதுவும் எங்கள் சேவையில் இணைந்த பின்னர், வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்க் என்றால் என்ன என்பதையே மறந்து விடுவர்" என்கிறார் போரிஸ்

Best Mobiles in India

English summary
Running Low on Fuel These Russian Startups Deliver Petrol Diesel to Your Car: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X