Home
Apps

இந்தியாவில் லைவ் ஃபேன்டஸி கிரிக்கெட்-ஐ அறிமுகப்படுத்திய ரூட்டர் செயலி.!

லைவ் மேட்சின் போது இந்த லைவ் ஃபேன்டஸி கிரிக்கெட் கேம் மூலம் 4 வீரர்களை தேர்வு செய்து, நிகழ்நேரத்தில் நண்பர்களுடன் போட்டியிடலாம்.

By Vivek Sivanandam

சோசியல் ஸ்போர்ட்ஸ் என்கேஜ்மென்ட் ப்ளாட்பார்மான ரூட்டர், தனது கேமை தற்போது தரமுயர்த்தியுள்ளது. புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வெர்சனான ரூட்டர்3.0 செயலி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலகுவான பயனர் இடைமுகத்தை சர்வதேச பார்வையாளர்களுக்கு தருவதுடன்,இந்த புதிய அப்டேட்டில் பல்வேறு புதிய ஆச்சர்ய அம்சங்களை இணைத்துள்ளது. அதில் குறிப்பிடத்தகுந்தாக, ஸ்போர்ட்ஸ் சோசியல் பீட் மற்றும் இந்தியாவில் முதல்முறையாக கிரிகெட்டுக்காக லைவ் ஃபேன்டஸி கேமும் உள்ளன.

இந்தியாவில் லைவ் ஃபேன்டஸி கிரிக்கெட்-ஐ அறிமுகப்படுத்திய ரூட்டர் செயலி.

18 மாதங்களுக்கு முன்பே லைவ் ஸ்போர்ட்ஸ் என்கேஜ்மென்ட் என்னும் கருத்துருவை அறிமுகப்படுத்தியது ரூட்டர். 8 வெவ்வேறு விளையாட்டுகளுக்கான அனுபவத்தை தரும் வகையில் தனது முழு இடைமுகத்தையும் முடிந்தளவுக்கு பயன்படுத்தியுள்ளது. இந்த பட்டியிலில் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி, கூடைப்பந்து, பேட்மிடன், பார்முலா1 மற்றும் கபடியும் உள்ளது. இந்த துறையில் உள்ள வேறெந்த தளங்களும் இவ்வளவு பெரிய விளையாட்டு தொகுப்பை தருவதில்லை.

முதலாவதாக, இந்த தளத்தின் புதிய வடிவம் ஸ்போர்ட்ஸ் சோசியல் பீட்-ஐ அறிமுகப்படுத்துகிறது. தனிப்பட்ட நியூஸ்பீடான இதில் லைவ்வாக பிரபல விளையாட்டு சமூக வலைதளங்கள் வெளியிடும் விளையாட்டு தகவல்கள் இருக்கும்.

மேலும் இந்த தளத்தில், விளையாட்டு ரசிகர்களுக்காக சமூக விளையாட்டு அனுபவத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. லைவ் மேட்சின் போது இந்த லைவ் ஃபேன்டஸி கிரிக்கெட் கேம் மூலம் 4 வீரர்களை தேர்வு செய்து, நிகழ்நேரத்தில் நண்பர்களுடன் போட்டியிடலாம். இந்த வசதி வெகுவிரைவில் கால்பந்து போட்டிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட பின்பு பேசிய, ரூட்டர் நிறுவனத்தின் நிறுவனர்& சி.ஈ.ஓ பியூஸ் குமார், ஆர்வமுள்ள விளையாட்டு ரசிகர்களாக, அதை பார்க்கும் அனுபவத்தை மேலும் மேலும் ஆர்வமாக்கவே முயல்வோம். அதை அடைவதற்காக மேலும் ஒரு படியாக, ரூட்டர்3.0 ல் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்தை மூலம், பல்வேறு அம்சங்கள், வசதிகள் மற்றும் உட்செயலி அனுபவத்தை அறிமுகப்படுத்தி, அனைத்து விளையாட்டுகளிலும் உலகம் முழுக்க பயனர்கள் தொடர்புகொள்ளவும், போட்டி போடவும் அனுமதிக்கிறது.

இந்த புதிய அப்டேட் ஏற்கெனவே உள்ள பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றநிலையில், உலகம் முழுக்க உள்ள விளையாட்டு ஆர்வலர்களை கவர்ந்து மிகச்சிறப்பான சமூக அனுபவத்தை தரும் தரும் என்கிறார்.

ரூட்டர் தளத்தில் உள்ள வைவ் மேட்ச் என்கேஜ்மென்ட் வசதியும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் நிகழ்நேரத்தில் நடக்கும் மேட்சின் ஸ்கோரை பார்க்கவே, மேட்சை கணிக்கும் விளையாட்டு அல்லது புதிய வீடியோ மற்றும் உலக விளையாட்டு செய்திகள் உள்ள நியூஸ் பீட்-ஐ பார்த்து பொழுதுபோக்கலாம். மேலும் தற்போது ரூட்டர் பயனர்கள் மேட்ச் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளை விளையாடி அதில் பேட்ஜ்களை பெற்று தங்கள் ப்ரோபைலில் பெருமையாக வைக்கலாம்.

Best Mobiles in India

English summary
Rooter app brings first-ever live fantasy Cricket in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X