அட்லாண்டிக் கடலைக் கடந்த ரோபோடிக் படகின் வராற்றுச் சாதனை!

  தானே இயங்கக் கூடிய படகுத் தயாரிப்பை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட “மைக்ரோ டிரான்சாட் சவால்” (Microtransat Challenge) படகுப் போட்டியில் ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. SB Met என்னும் பெயர் கொண்ட ரோபோடிக் படகு நிர்ணயிக்கப்பட்ட எல்லையை எட்டிச் சாதனை படைத்துள்ளது. இந்த ரோபோடிக் படகை நார்வே நாட்டைச் சேர்ந்த Offshore Sensing AS என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

  அட்லாண்டிக் கடலைக் கடந்த முதல் ரோபோடிக் படகு என்னும் பெருமையை இப்படகு பெற்றுள்ளது. நியூபவுண்ட்லேண்ட் (Newfoundland) என்னும் இடத்திலிருந்து தன்னுடைய பயணத்தைத் தொடங்கிய இந்த ரோபோடிக் படகு ஏறக்குறைய 75 நாட்கள் பயணத்திற்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேி தன்னுடைய இலக்கை அடைந்துள்ளது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ரோபோடிக் படகு

  இந்த வெற்றியின் மூலம், ஆளில்லாத படகுத் தொழில் நுட்பத்தில் ஒரு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. கடல் தொடர்பான ஆராய்ச்சிகளை மிகக் குறைந்த செலவில் செய்திட இந்த ரோபோடிக் படகுத் தொழில்நுட்பம் உதவும்.
  "இதற்கான சாத்தியக் கூறுகளை நாங்கள் உறுதிப்படுத்தி உள்ளோம்" என்கிறார் ஆஃப்சோர் சென்சிங் (Offshore Sensing) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டேவிட் பிட்டி. "கடப்பதற்குக் கடினமான கடல் பகுதிகளுள் வட அட்லாண்டிக் கடல் பகுதியும் ஒன்று. இதனையும் எங்கள் படகு கடந்துள்ளது. எப்படிப்பட்ட கடல் சூழ்நிலையையும் ரோபோடிக் படகால் கடக்க முடியும் என்கின்ற நம்பிக்கையை SB Met ரோபோடிக் படகு அளித்துள்ளது" என்கிறார் இவர்.

  அமெரிக்கா

  மைக்ரோடிரான்சாட் போட்டி விதிமுறைகளின்படி ஐரோப்பா மற்றும் கரீபியனுக்கு இடையேயான கடல் பகுதிகளையும், வட அமெரிக்கா மற்றும் அயர்லாந்துக்கு இடைப்பட்ட பகுதியையும் கடப்பதற்கு 2.4 மீட்டர் அளவுள்ள படகினைப் பயன்படுத்த வேண்டும். தாங்கள் பயணிக்கும் பகுதியைப் பற்றிய தகவல்களைத் தொடர்ச்சியான இடைவெளிகளில் தெரிவிக்க வேண்டும்.

  ஆபத்துகளை எதிர் கொள்ள நேரிடும்

  சாலையில் இயங்கும் தானியங்கிக் கார்களுக்கு, சாலைகளைக் கடப்போர், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றால் சிக்கல்கள் ஏற்படுவதைப் போல கடலில் இயங்கும் தானியங்கிப் படகுகளுக்கும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. கடுமையான காற்று, மிக உயரமாக எழும்பும் அலைகள், மற்றும் கடற்பகுதி சார்ந்த ஆபத்துகளை எதிர் கொள்ள நேரிடும்.

  செயில்டிரோன்

  2010 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வரும் இந்தப் போட்டிகளில் பங்கேற்ற பல்வேறு குழுக்களின் முயற்சிகளும் வெற்றி இலக்கை எட்டாமல் தோல்வியில்தான் முடிந்துள்ளன. மீன் வலைகள் மற்றும் கப்பல்களால் ஏற்படும் ஆபத்துகள், காணாமல் போதல் போன்ற காரணங்களால் இவை நிகழ்ந்துள்ளன.

  இது போன்ற ரோபோடிக் படகுத் தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த செயில்டிரோன் (Saildrone) நிறுவனம், 7 மீட்டர் நீளமுள்ள படகினைத் தயாரித்துள்ளது. இந்தப் படகு 12 மாதங்கள் வரை கடலில் பயணித்துத் தகவல்களைச் சேகரிக்கும் வலிமை உடையது. போயிங் நிறுவனத்தைச் சேர்ந்த லிக்விட் ரோபோடிக்ஸ் (Liquid Robotics) என்னும் படகு, வேவ் கிளைடர் (Wave Glider) என்னும் தொழில்நுடபத்தின் மூலம் அலைகளின் ஆற்றல் வழியாக இயக்க ஆற்றலைப் பெறுகிறது.

  உலக ரோபோ படகுப் பயணப் போட்டிகள்

  ஒவ்வொரு ஆண்டும் உலக ரோபோ படகுப் பயணப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டுக்கான போட்டி, இங்கிலாந்தில் உள்ள துறைமுக நகரான செளதாம்டன் நகரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மேம்படுத்தப்பட்ட ரோபோடிக் தொழில் நுட்பத்துடன் பல படகுகள் பங்கு கொள்ளவிருக்கின்றன.


  தானே இயங்கும் படகுகள் தானே இயங்கும் கார்களைப் போன்றே இயங்குகின்றன. செயற்கை அறிவுத் தொழில் நுட்பத்தின் மூலமாக இப் படகுக்கான இயக்க நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன. சுற்றுப்புறத்தை உணர்ந்து செயல்படுவதற்காக நுண் உணர்விகள் (sensors) பயன்படுத்தப்படுகின்றன.

  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொறியியல் ஆய்வு கல்வி நிறுவன குழுவினர் முதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினர். சீனாவில் இருந்து இரண்டு குழுவினர் பங்கேற்றனர். இதில் ஒரு குழுவினர், வலிமையான கடல் அலைகளில் இருந்து தங்களுடைய படகைக் காப்பாற்ற முடியாமல் தத்தளித்தனர்.

  எடை குறைந்த, சிறிய வடிவில் அமைந்த எலக்ட்ரானிக் பொருட்கள், சூரிய சக்தியைச் சேகரிக்கும் அமைப்புகள், முப்பரிமான அச்சுகள் மற்றும் பிற முன்னேறிய தொழில் நுட்பங்கள் ஆகியவற்றின் துணை இருந்தால் ரோபோடிக் படகுகளை எளிதாகத் தயாரிக்கலாம் எனப் போட்டியாளர்கள் கூறுகின்றனர்.

  "ஆளில்லாத படகுகளைத் தயாரித்து இயக்குவதில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு வகையான தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, கனடா நாட்டைச் சேர்ந்த டல்ஹௌசி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த குழுவினர் ரேபோடிக் படகுப் போட்டியில் பல முன்னேற்றங்களைக் கண்டு வருகின்றனர்." என்கிறார் மைக்ரோடிரான்சாட் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர், காலின் சாயிஸ் (Colin Sauze). போட்டிகளில் பல்வேறு வகையான மாற்றங்களும் வரவிருக்கின்றன என்றும் இவர் கூறுகிறார்.

  வேகமாக இயங்கக் கூடிய வகையிலும், செலவு குறைவாகவும், அளவில் சிறியதாகவும் ரோபோடிக் படகுகளைத் தயாரிப்பதுதான் சவாலான விசயம் என்றும் கூறுகிறார்.


  இத்தகைய போட்டிகளின் மூலமாகக் கடல் ஆய்வுகளுக்குத் தேவையான ரோபோடிக் படகுகள் மிகக் குறைந்த செலவில் தயாரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Robot Boat Sails Into History by Finishing Atlantic Crossing: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more