ரிலையன்ஸ் : 8 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனம் கொண்ட முதல் இந்திய நிறுவனம்.!

ஆகஸ்ட் 16 அன்று மார்கன் ஸ்டேன்லி அறிக்கைப்படி"ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகம் F20e EV/sales of 0.8x என மதிப்பிடப்பட்டுள்ளது .

|

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு இந்த ஆண்டு 38% அதிகரித்ததன் விளைவாக, 8 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனம் கொண்ட முதல் இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து புதிய சந்தாதாரர்களை அதிகளவில் இணைத்து வருகிறது என இந்திய தொலைத்தொடர் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட தகவலால், மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குமதிப்பு 1.86% உயர்ந்து ரூ1,269.70என்ற புதிய உச்சத்தை தொட்டது மட்டுமில்லாமல்,அந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் 8.05 டிரில்லியன் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இந்திய சென்செக்ஸ் குறியீடு 0.13% உயர்ந்து, 38,336.76 புள்ளிகள் என்ற சாதனையை படைத்துள்ளது.

 8 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனம் கொண்ட முதல் இந்திய நிறுவனம்.!

ரிலையன்ஸ்நிறுவனத்தின் புதிய சேவையான ஜியோஜிகா பைபர் மற்றும் ஜியோ போன்2 மூலம் அந்நிறுவனம் கூடுதல் வருவாய் ஈட்டும் என்னும் எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவன பங்குகளை வாங்கி வருகின்றனர். அதிகப்படியான சந்தாதாரர்கள் இணைவது மற்றும் மக்களை கவரக்கூடிய கட்டணத்துடன் கூடிய திட்டங்களும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

 8 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனம் கொண்ட முதல் இந்திய நிறுவனம்.!

புதிதாக துவங்கப்பட்ட சுத்தகரிப்பு ஆலைகள் மற்றும் ரிலையன்ஸ் பெட்காக் கேஸிபிகேசன் திட்டத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாக, வலுவான வருவாய் வளர்ச்சி ஏற்படும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு முடிவுகளின் படி, தொலைதொடர்பு மற்றும் சில்லறை நிதி வர்த்தக துறைகளில் தொடர் முன்னேற்றம் ஏற்படுவதால், முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜூனில் முடிவடைந்த காலாண்டில் ரூ8,109 கோடி வருமானம் பெற்று அதில் ரூ612 கோடி லாபம் பெற்றுள்ளது. இது முந்தைய காலாண்டை விட 19.9% அதிகரித்துள்ளது. மார்ச்சில் முடிவடைந்த காலாண்டில் வருவாய் ரூ7,128 கோடியாகவும், லாபம் ரூ510 கோடியாகவும் இருந்தது. அந்த அறிக்கையின் படி இந்த காலாண்டில் வருவாய் 123.7% உயர்ந்து ஆண்டு வருவாய் ரூ25,890 கோடியாக உள்ளது.

 8 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனம் கொண்ட முதல் இந்திய நிறுவனம்.!

ஆகஸ்ட் 16 அன்று மார்கன் ஸ்டேன்லி அறிக்கைப்படி"ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகம் F20e EV/sales of 0.8x என மதிப்பிடப்பட்டுள்ளது . இது அந்நிறுவனத்துடன் ஒப்பீடு செய்யக்கூடிய வகையில் உள்ள சில்லறை வர்த்தக நிறுவனங்களான ப்யூட்சர் ரீடைல் மற்றும் ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனங்களுடன் ஒப்பீட்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுகளின் படி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜூன் மாதத்தில் புதிதாக 9.71மில்லியன் பயனர்களை இணைத்து, மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கையை 215மில்லியனாக அதிகரித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் கடந்த மாத சந்தை பங்கு ஆதாயம் 18.7% லிருந்து 18.78% ஆக உயர்ந்துள்ளது.

 8 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனம் கொண்ட முதல் இந்திய நிறுவனம்.!

"ஜியோ நிறுவனம் தொடர்ந்து தனது சந்தாதாரர்களை இணைத்து வந்தாலும், பல்வேறு கேஷ்பேக் ஆப்பர் மற்றும் ப்ரைம் உறுப்பினர் மாற்றங்களால், ஒரு பயனருக்கான சராசரி வருவாய் அதிக மாற்றமில்லாமல் தொடர்கிறது. இப்போதைக்கு அதிகமாக புதிய சந்தாதாரர்களை இணைப்பது மட்டுமே அந்நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது. கட்டணங்களை உயர்த்துவது பற்றி எந்த அறிகுறியும் தென்படவில்லை" என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Best Mobiles in India

English summary
RIL first Indian company to cross 8 trillion market cap: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X