Home
Apps

ஸ்மார்ட்போன் பேட்டரி லைப்-ஐ நீட்டிக்கும் செயலி!

இந்த ஆய்விற்காக, இச்செயலியானது 200 ஸ்மார்ட்போன் பயனர்களை உள்ளடக்கி பரிசோதிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது.

By Vivek Sivanandam

நல்ல வாழ்நாள் கொண்ட மொபைல் பேட்டரிக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், ஸ்மார்ட்போனின் செயல்திறனை பாதிக்காத வகையில், ஆற்றல் நுகர்வை குறைக்கும் செயலியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஸ்மார்ட்போன் பேட்டரி லைப்-ஐ நீட்டிக்கும் செயலி!

ஐ.இ.இ.இ ஏக்சஸ் ஆராய்ச்சி கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ளது இந்த கண்டுபிடிப்பு, ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் வரை ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளை நீட்டிக்கும் வகையிலான தனித்துவ முறையை பரிந்துரைத்துள்ளது.

"புதிய ஆண்ராய்டு இயங்குதளத்தில் உள்ள உள்ளார்ந்த மல்டி விண்டோ வசதியின் மூலம், லேப்டாப்பில் ஒரே நேரத்தில் பல்வேறு செயலிகளை பல விண்டோக்களில் திறந்து பயன்படுத்துவது போல மொபைலிலும் பயனர்கள் செய்யமுடியும். ஆனால் இதன் காரணமாக தேவையில்லாமல் அதிக பேட்டரி வீணாக்கப்படுகிறது" என்கிறார் வாட்டர்லூ பல்கலைகழகத்தின் பேராசிரியர் கசிராசாகர் நாயக்.

ஸ்மார்ட்போன் பேட்டரி லைப்-ஐ நீட்டிக்கும் செயலி!

"நாங்கள் உருவாக்கியுள்ள செயலியை பயனர்கள் தங்களின் கருவிகளில் இன்ஸ்டால் செய்வதன் மூலம், அதிக முக்கியத்துவம் இல்லாத செயலிகளின் பிரகாசத்தை(ப்ரைட்னஸ்) குறைக்கலாம்" என்கிறார் நாயக்.

இந்த ஆய்விற்காக, இச்செயலியானது 200 ஸ்மார்ட்போன் பயனர்களை உள்ளடக்கி பரிசோதிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. அவர்கள் இச்செயலியை பதிவிறக்கம் செய்து, பல விண்டோக்கள் திறந்திருக்கும் நிலையில் பயன்படுத்தினர்.

ஸ்மார்ட்போன் பேட்டரி லைப்-ஐ நீட்டிக்கும் செயலி!

அதன் மூலம் இந்த ஆற்றல் சேமிப்பு வழிமுறையுடன் உதவியுடன் பேட்டரின் வாழ்நாளானது 10 முதல் 15% வரை நீட்டிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

"இரவு முழுவதும் உங்கள் போனை சார்ஜில் போட்டுவிட்டு மறுநாள் வீட்டு விட்டு செல்லும் போது 100% பேட்டரி இருந்தால் என்ன நடக்கும்?. நீங்கள் போனை பயன்படுத்தவே இல்லை எனினும், பின்புறம் நடக்கும் பல்வேறு செயல்பாடுகளால் பேட்டரியின் அளவு குறையும்" என்கிறார் நாயக். " மதியத்திற்குள் பேட்டரியின் சார்ஜ் 30% வரை குறைந்துவிடும். எனவே ஒரு நாளில் பலமுறை சார்ஜ் போட வேண்டி வரும். பயனர்களின் பார்வையில் இது மிகப்பெரிய சுமையாக இருக்கும்".

ஸ்மார்ட்போன் பேட்டரி லைப்-ஐ நீட்டிக்கும் செயலி!

அதிகப்படியான ஆற்றல் நுகர்வால் போனின் சூடாகிக்கொண்டே இருக்கும். அடிக்கடி சார்ஜ் செய்வதன் மூலம் பேட்டரியின் வாழ்நாள் குறைந்துவிடும். எனவே மூன்று ஆண்டுகள் என கணிக்கப்பட்டு வெளியாகும் பேட்டரி வெறும் இரண்டு ஆண்டுகளிலேயே மாற்றவேண்டிய சூழல் ஏற்படும் என குறிப்பிடுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Best Mobiles in India

English summary
Researchers Develop App That Can Extend Your Smartphone's Battery Life: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X