சீன ஆப்களுக்கு இப்படியொரு நிலைமையா? ஆப்பு வைக்கும் ரிமூவ் சீனா ஆப்ஸ்.!

|

கடந்த சில நாட்களாக இந்தோ-சீனா எல்லையில் பதற்றம் சற்று அதிகரித்து வருககிறது. குறிப்பாக எல்லை சண்டையை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளும் ராஜதந்திர வழிகளை எடுத்துக் கொண்டாலும், கிழக்கும் லடாக்கில் அவரவர் எல்லைகளில் தங்கள் ராணுவ வலிமைய பலப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

 சீன ஆப்ஸ்களை நீக்க

இந்த நிலையில் ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட ஒரு தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தங்கள் ஸ்மார்ட்போனிலிருந்துசீன ஆப்ஸ்களை நீக்க உதவும் நோக்கில் ஒரு அருமையான ஆப் வசதியை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பின் பெயர்

சுருக்கமாக கூறவேண்டும் என்றால்,உங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் அனைத்து சீன ஆப்களையும் ஒரே கிள்க் மூலம்அகற்றுவதை நோக்கமாக கொண்ட ஒரு ஆப், கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது, அந்த ஆப்பின் பெயர்
- Remove China Apps ஆகும்.

Nokia 43' இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?Nokia 43' இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

அதிகமான முறை

Remove China Apps ஆனது வெறும் 3.8எம்பி எடை கொண்டுள்ளது, இதுவரை இந்த ஆப் வசதியை சுமார் 1மில்லியனுக்குஅதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பின்பு சீனாவிலிருந்து வரும் நிறுவனங்களுக்கு சொந்தமான ஆப்களைக்கண்டறிந்து அதை நீக்குவதற்கான வழியை எளிமை படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

Remove China Apps ஆனது ஆண்ட்ராய்டு

Remove China Apps ஆனது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான சீன ஆப்களின் இன்ஸ்டாலஷன்களை நீக்குவதற்கான ஒரு
அருமையான டூல் ஆகும். சீன ஆப்களை கண்டறிவது மிகவும் எளிதானது, இருப்பினும் இந்த டூல் அனைத்து சீன ஆப்களையும்
பட்டியலிடுகிறது.

ஸ்மார்ட்போனிலிருந்து

இதன் வழியாக நீங்கள் தேர்வுசெய்யும் ஆப்களை எளிதாக உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து அகற்றலாம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சீன ஆப்கள் பாதுகாப்பாக இல்லை, எனவே நீங்கள் நிறுவலை நீக்க விரும்பும் சீன ஆப்களை ஸ்கேன் செய்து தேர்ந்தெடுக்கலாம்,
பின்பு அவற்றை நிறுவல் நீக்க 'Remove' பொத்தானைக் கிளிக் செய்க " என்று இந்த ஆப் அதன் பிளே ஸ்டோர் விளக்கத்தில்
கூறப்பட்டுள்ளது.

 Bin ஐகானைத் தட்டுவதன் மூலம்

சீனாவை அடிப்படையாக கொண்ட நிறுவனங்களிலிருந்து எல்லா பயன்பாடுகளையும் நீக்க விரும்பும் பயனர்கள் செய்யவேண்டியது, ரிமூவ் சீனா ஆப்ஸ் வழியாக அவர்களின் ஸ்மார்ட்போனில் உள்ள எல்லா ஆப்களையும் ஸ்கேன் செய்துபின்னர் அந்தந்த ஆப்களின் பெயருக்கு அடுத்ததாக தோன்றும் Bin ஐகானைத் தட்டுவதன் மூலம் தனித்தனியாக ஆப்களை
நீக்குவதே ஆகும்.

என்று ஹேஷ்டேக்கின் கீழ் எதிரொலிக்கிறது

தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் ஆப்பில் பிரபலமடைந்து வரும் ரிமூவ் சீன ஆப்ஸ் ஆனது டிவிட்டரிலும் புகழ் பெற்றுவருகிறது. டிவிட்டரில் இந்த ஆப் ‘#BoycottChineseProducts' என்று ஹேஷ்டேக்கின் கீழ் எதிரொலிக்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Remove Chinese Apps By Using This Tool On Your Android Smartphones: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X