ரிலையன்ஸ் ஜியோ மூலம் ஜியோடிவியின் இணையதள பதிப்பு அறிமுகம்
இந்த வாரம் முழுவதும் ரிலையன்ஸ் ஜியோ மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருவதாக தெரிகிறது. ஏனெனில் தனது அப்ளிகேஷனில் புதிய அம்சங்களையும் சேவைகளில் மேம்பாடுகளையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

முன்னதாக, இந்த நிறுவனத்தின் மூலம் மைஜியோ அப்ளிகேஷனில் 'ஹலோஜியோ' என்ற ஒரு வாய்ஸ் அசிஸ்டெண்ட் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டதாக செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில் ஜியோடிவி அப்ளிகேஷனுக்கான ஒரு இணையதள பதிப்பை இப்போது ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ளதாக, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம் ஜியோ பயனர்களுக்கு 500க்கும் மேற்பட்ட டிவி சேனல்களைக் கண்டுகளிக்க முடியும். இந்த அப்ளிகேஷன் அல்லது சேவை முன்பு மொபைல் பயனர்களுக்கு பிரத்யேகமாக அப்ளிகேஷன் மூலம் அளிக்கப்பட்டு வந்தது. இப்போது இணையதளத்தின் ஆதரவுடன் பயனர்கள், இந்த அம்சத்தை அல்லது டிவி சேனல்களைப் பெறலாம்.
இந்த ஜியோடிவி இணைதளத்தைப் பற்றி டெலிகாம்டாக் முதன் முதலாக செய்தியை வெளியிட்டது.

புதிய ஜியோடிவி இணையதளத்தை எல்லா உலாவிகளும் ஆதரிக்கின்றன. மேலும் இந்தப் புதிய சேவையை அப்ளிகேஷன் உதவியின்றி, பயனர்களுக்கு டிவி சேனல்களை இலவசமாக கண்டு களிக்க முடியும். ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோமியூஸிக் மற்றும் பலவற்றை உட்படுத்தி ஒரு தகுந்த அப்ஸ் தொகுப்பை ரிலையன்ஸ் ஜியோ அளித்துள்ளது.
ஜியோவின் பிரைம் உறுப்பினருக்கு இந்த அப்ஸ் தொகுப்பு இலவசமாக கிடைப்பதோடு, இதில் உள்ள எல்லாவற்றையும் பயனர்கள் இலவசமாக பயன்படுத்த முடியும்.
அதே நேரத்தில், இந்தச் சேவையைப் பெற விரும்பும் எந்தொரு பயனரும், http://jiotv.com/ என்ற இணையதளத்திற்கு சென்று ஜியோ கணக்கின் மூலம் உள்நுழைந்து பெற்று கொள்ளலாம். தங்களின் ஜியோ சிம் நம்பர் மற்றும் கடவுசொல்லைப் பயன்படுத்தி பயனரால் உள்நுழைய முடியும். மேலும் ஒரு பிராட்பேண்ட் இணைப்பு மூலமும் இந்தச் சேனல்களைப் பெறலாம்.
ஜியோடிவியின் இணையதள குறுக்கீட்டின் மூலம் கிடைக்கும் அனுபவம், மொபைல் இணையதள யூஐ போலவே ஒத்துள்ளது. எல்லா சேனல்களும் கிடைமட்டமாக பட்டியலிடப்படுகின்றன. எனவே பயனரின் தேவைக்கேற்ப எஸ்டி மற்றும் ஹெச்டி சேனல்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
ஜியோ பயனர்கள் அனைவருக்கும் ஜியோடிவி சேவை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுவதோடு, அதன் போட்டியாளர்களான ஏர்டெல் டிவி, வோடாபோன் ப்ளே ஆகியவற்றை விட அதிகளவிலான உள்ளடக்கத் தேர்வுகளை அளிக்கிறது. ஜியோடிவி சுமார் 550 லைவ் டிவி சேனல்களை அளிக்கும் போது, அதன் போட்டியாளர்கள் சுமார் 220 - 250 சேனல்களை மட்டுமே அளித்து வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செயல்பாட்டின் மூலம் தனது நெட்வார்க்கிற்கு அதிக பயனர்களை கவருவதோடு, அவர்களை தக்கவைத்து கொள்ளவும் இந்நிறுவனத்திற்கு எதுவாக அமைகிறது. சில நாட்களுக்கு முன்பு, அதிக தேவையில் உள்ள வீடியோ தளமான ஜியோசினிமாவின், ஒரு இணையதள பதிப்பை தனது வாடிக்கையாளர்களுக்காக ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








