MyJio App: சத்தமின்றி ஜியோ பார்த்த வேலை: கடுப்பில் Google Pay & PhonePe.!
ஜியோ நிறுவனத்திடம் கிட்டத்தட்ட 370மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர், இருந்தபோதிலும் கூட ஜியோ தனது வளர்ச்சியை நிறுத்துவதாக தெரியிவில்லை. ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி புதிய புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.

ஜியோ யுபிஐ (Jio UPI)
இந்நிலையில் மறுபடியும் சத்தமின்றி தனது பயனர்களுக்கு மற்றொரு சேவையை அறிமுகம் செய்துள்ளத, அது ஜியோ யுபிஐ (Jio UPI) சேவை ஆகும். இன்றும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஜியோ நிறுவனம்தனது JioMoney ஆப்பில் யுபிஐ அம்சத்தைக் கொண்டுவந்துள்ளது.

போன்பே அல்லது கூகுள் பே
எனவே அது ஜியோ பயனர்களுக்கான யுபிஐ பரிவர்த்தனைகளை மிகவும் எளிதாக்கியுள்ளது, அதன்படி நீங்கள் ஜியோ பயனர் என்றால், உங்கள் ஸ்மார்ட்போனில் போன்பே அல்லது கூகுள் பே போன்ற பணப்பரிமாற்ற ஆப்ஸ்கள் இருப்பின், அதை இன்ஸ்டால் செய்யக் கூட நேரிடலாம்.

குறிப்பிட்ட முறையில் வழங்கத் துவங்கியுள்ளது
ஜியோ தனது சந்தாதாரர்களுக்கு யுபிஐ அடிப்படையிலான சேவையை ஒரு குறிப்பிட்ட முறையில் வழங்கத் துவங்கியுள்ளது என்று என்ட்ராக்கர் உறுதிபடுத்தியுள்ளது. மேலும் இந்த சேவையானது ஒரு சில சந்தாதாரர்கள் மட்டுமே முதலில் பெறுவார்கள், பின்னர் மெதுவாக இது மற்ற பயனர்களுக்கும் அணுக கிடைக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

மைஜியோ ஆப்புடன் ஒருங்கிணைந்துள்ளது
ஜியோவின் இந்த யுபிஐ சேவையானது மைஜியோ ஆப்புடன் ஒருங்கிணைந்துள்ளது, எனவே பணம் செலுத்தும்நோக்கத்தின் கீழ் யுபிஐ-ஐ பயன்படுத்த விரும்பும் ஜியோ சந்தாதாரர்கள் இதற்காக தனியாக ஒரு புதிய ஆப்வசதியை டவுன்லோட் செய்யவேண்டி நிலைமை இருக்காது.

கடுமையான போட்டியை உண்டாக்கும்
ஆனால் ஜியோபே மற்றும் இந்த ஜியோ யுபிஐ சேவை ஆகிய இரண்டும் வேறுபட்டவை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஜியோவின் புதிய யுபிஐ சேவைக்கு எந்த விதமான பெயரும் இது வரையிலாக சூட்டப்படவில்லை. கண்டிப்பாக
இந்த ஜியோவின் இந்த புதிய யுபிஐ சேவை ஃபோன்பே மற்றும் கூகுள் பே போன்ற ஆப்களுக்கு கடுமையான போட்டியைஉண்டாக்கும்.


Click it and Unblock the Notifications