432 லைவ் ஸ்ட்ரீம் சேனல்கள், 15 பிராந்திய மொழிகள் : ஆதிக்கத்தின் உச்சியில் ஜியோ.!

இந்தியாவில் அந்த சிக்கலே கிடையாது யார் இதனை முதலில் பெரிய அளவில் ஆரம்பிப்பார்கள் என்பதே பெரும் கேள்வியாக நிற்கிறது.

|

இந்தியா மெதுவாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளைப் போன்றே டெலிகாம் பிரிவின் அடிப்படையில் மாற்றங்கள் கண்டு வருகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள பல்வேறு தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் பயனர்களுக்கு உள்ளடக்கத்தை வழங்குவதில் பெரிதும் கவனம் செலுத்துகின்றனர்.

அமெரிக்காவின் நிலைப்பாட்டை பொறுத்தம்மட்டில் முதல் இடத்தை அடைவதற்கு ஏடி&டி, வெரிசோன் போன்ற நிறுவனங்கள் போட்டிபோட வண்ணம் உள்ளன. மறுபக்கம் இந்தியாவில் அந்த சிக்கலே கிடையாது யார் இதனை முதலில் பெரிய அளவில் ஆரம்பிப்பார்கள் என்பதே பெரும் கேள்வியாக நிற்கிறது. அந்த கேள்விக்கு பதிலாகும் முனைப்பில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கியுள்ளது.

போட்டிமுனைப்பில்

போட்டிமுனைப்பில்

இந்த டிவி ஆப் பந்தயத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே போட்டிமுனைப்பில் செயல்பட்டு கொண்டிருக்க மறுபக்கம் வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் இப்போதுஹான் இந்த உள்ளடக்கங்களில் நுழைய ஆரம்பிக்கின்றன.

டிஜிட்டல் உள்ளடக்கம்

டிஜிட்டல் உள்ளடக்கம்

இந்த நிலைப்பாட்டில் குறிப்பாக, ஜியோ ஒரு சிறந்த தொலைதொடர்பு ஆபரேட்டராக மட்டுமின்றி ஜியோம்யூசிக், ஜியோமூவீஸ், ஜியோடிவி போன்ற பல சேவைகளுடன் ஒரு டிஜிட்டல் உள்ளடக்க வழங்குநராகவும் திகழ்கிறது.

432 நேரடி டிவி ஸ்ட்ரீம் சேனல்

432 நேரடி டிவி ஸ்ட்ரீம் சேனல்

ரிலையன்ஸ் ஜியோ இன்போம்காமின் ஜியோடிவி ஆப் ஆனது கேபிள் டிவி மற்றும் டிடிஎச் ஆபரேட்டர்களைப் பெற விரும்புகிறது. ஒரு நல்ல அளவிற்கு, ஜியோடிவி ஏற்கனவே முன்னேற்றம் அடைந்துள்ள இந்நிலையில் தற்போது, ஜியோடிவி ஆப் ஆனது 15 பிராந்திய மொழிகளில் 432 நேரடி டிவி ஸ்ட்ரீம் சேனல்களுக்கான அணுகல்களை வழங்கவுள்ளது.

நேரம் கடந்து வந்தவுடன்

நேரம் கடந்து வந்தவுடன்

ஜியோடிவி (முன்னர் ஜியோபிளே என அறியப்பட்டது) ஆரம்பத்தில் வெறும் ஐந்து சேனல்களுடன் ஐந்து முதல் ஆறு மொழிகளுக்கு ஆதரவுடன் தொடங்கப்பட்டது. நேரம் கடந்து வந்தவுடன், நிறுவனம் புதிய சேனல்கள் மற்றும் புதிய மொழிகளையும் சேர்த்துள்ளது.

பத்து பிரிவுகள்

பத்து பிரிவுகள்

மேலும் முன்பு ஜியோ நான்கு பிரிவுக்லைன் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது 8 வணிக செய்தி சேனல்கள், 31 பக்தி சேனல்கள், 100 பொழுதுபோக்கு சேனல்கள், 27 இன்போடைன்மெண்ட் சேனல்கள், 23 குழந்தைகள் சேனல்கள், 12 வாழ்க்கை முறை சேனல்கள், 38 மூவி சேனல்கள், 34 மியூசிக் சேனல்கள், 139 செய்தி சேனல்கள் மற்றும் 20 விளையாட்டு சேனல்கள் என மொத்தம் பத்து பிரிவுகள் உள்ளன.

சேனல் வகை

சேனல் வகை

இந்த அளவிலான சேனல் வகை பட்டியலைப் பார்த்தபிறகு, ஜியோ அதன் பயன்பாட்டிற்கு ஒரு போர்ட்டபிள் எஸ்டிபி-ஐ உட்பொதிக்க முடிந்தது என்பது தெளிவாகிறது.

தமிழ்

தமிழ்

மொழிகளின் அடிப்படையில் பார்த்தால் ஹிந்தி (148) ஆங்கிலம் (62), தெலுங்கு (49), தமிழ் (39), மலையாளம் (26), கன்னடம் (22), மராத்தி (17), ஒரியா (16), பெங்காலி (14), அஸ்ஸாமி (12), குஜராத்தி (9), பஞ்சாபி (6), உருது (6), போஜ்பூரி (5), நேபாளி (1) ஆகிய சேனல்களை கொண்டுள்ளது.

சமீபத்தில் தான்

சமீபத்தில் தான்

ஜியோ டிவி வழியாக லைவ் ஸ்ட்ரீமிங் சேவைகளை வழங்க ஜியோவுடன் இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய ஒளிபரப்பாளர்களும் கைகோர்த்துள்ளனர், மேலும் இது ஜியோவிற்கான பெரும் போனஸ் ஆகும். நேரடி தொலைக்காட்சி பிரிவில் ஜியோவின் போட்டி ஆபரேட்டர்களிடமிருந்து எந்த ஆபத்தும் வரவில்லை, ஏனெனில் ஏர்டெல் இந்த பிரிவில் இல்லை. ஐடியா மற்றும் வோடபோன் சமீபத்தில் தான் தங்களது லைவ் டிவி சேவைகளை ஆரம்பித்தது. தற்போது முறையே 112 மற்றும் 70-க்கும் மேற்பட்ட சேனல்கள் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Is Going Big With Jio Tv; It Now Has 432 Channels to Stream Live TV Across 15 Regional Languages. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X