பெண்களுக்காக ரிலையன்ஸ் அறிமுகம் செய்த Her Circle சமூக வலைத்தளம்.. இது என்ன புதுசா இருக்கு?

|

மகளிர் தினத்தை முன்னிட்டு பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கான வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பதிவு செய்திருந்தனர். ஆனால் நாட்டின் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு படி மேலே சென்று பெண்களுக்கான புதிய சமூக வலைத்தளத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பெண்களுக்காக ரிலையன்ஸ் அறிமுகம் செய்த Her Circle சமூக வலைத்தளம்..

ரிலையன்ஸ் பவுன்டேஷன் நிறுவனத்தின் தலைவர் நீட்டா முகேஷ் அம்பானி, Her Circle எனும் புதிய சமூக வலைத்தளத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த புதிய வலைத்தளம் பெண்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பெண்களுக்கான அதிகாரம், மகிழ்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் கருத்தில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த தளம் இந்தியப் பயனர்களைக் குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இதைப் பிற நாடுகளில் உள்ள பெண்களும் பயன்படுத்தலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய Her Circle வலைத்தளம் அனைத்து வகையான பின்னணியிலிருந்துவரும் பெண்களுக்கான ஒரு பிரத்தியேக தளத்தை உருவாக்கியுள்ளது. இது கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஜியோ ஆப் ஸ்டோர் மூலம் ஆப்ஸ் வடிவில் கிடைக்கிறது.

தற்போது இந்த சேவை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இன்னும் iOS தளத்தில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த தளம் மூலம் உருவாக்கப்படும் தரவுகள் அனைத்தையும் அனைவரும் பார்க்க முடியும். இருப்பினும், இந்த தளத்தின் சமூக வலைத்தள பிரிவு பெண்கள் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

பேஸ்புக் உடன் கூட்டு சேர்ந்த பின்னர் ஜியோ நிறுவனம் தனக்கென்று தனியாக ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது அனைவரையும் கவனிக்கச் செய்துள்ளது. அதிலும், இது பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதால் பாராட்டுக்கள் குவிகிறது.

Best Mobiles in India

English summary
Reliance foundation launches new hercircle social media platform in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X