ரெட்பஸ் ஆப் பயன்படுத்துபவர்களா நீங்கள்: அசத்தலான சேவை அறிமுகம்: இன்றே பயன்படுத்துங்கள்.!

|

ஆன்லைன் பஸ் டிக்கெட் புக்கிங் தளமான ரெட்பஸ் நிறுவனம், தற்பொழுது கார்பூலிங் (carpooling ) என்ற புதிய சேவையைப் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனேவில் துவங்கியுள்ளது. இந்த புதிய சேவைக்கு ரெட்பஸ் நிறுவனம் ஆர்பூல் (rPool) என்று பெயரிட்டுள்ளது.

ஆர்பூல் சேவை என்றால் என்ன?

ஆர்பூல் சேவை என்றால் என்ன?

ரெட்பஸ் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய கார்பூலிங் சேவையின் படி, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு, அதே வழியில் செல்லும் வேறு ஒரு நபரின் காரில் நீங்களும் சேர்ந்து பயணித்துக்கொள்ளலாம். அதற்கான பயண செலவையும் நீங்கள் அந்த ஓட்டுநருக்கு வழங்கிவிடலாம்.

எப்படி இந்த ஆர்பூல் சேவையைப் பெறுவது?

எப்படி இந்த ஆர்பூல் சேவையைப் பெறுவது?

ஆர்பூல் சேவையை நீங்கள் பயன்படுத்த முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிடப்பட்டுள்ள ஆர்பூல் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். உங்கள் மொபைல் என் மற்றும் ஈமெயில் ஐடி விபரங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். நீங்கள் இருக்கும் இடத்தை ஆர்பூல் செயலியில் தேர்வு செய்துவிட்டு, நீங்கள் செல்ல வேண்டிய இடத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

குறைந்த விலையில் அதீத பலன் கொண்ட பிஎஸ்என்எல் குறைந்த விலையில் அதீத பலன் கொண்ட பிஎஸ்என்எல் "அபிநந்தன் 151" திட்டம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ஒரு கிளிக் போதும்

ஒரு கிளிக் போதும்

நீங்கள் போக வேண்டிய இடத்தின் வழியே செல்லும், அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் விபரங்கள் உங்களுக்கு வழங்கப்படும். உங்களுக்கு பிடித்தமான ஓட்டுநருடன் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல அவர்களை கிளிக் செய்தால் போதும். உங்கள் இடத்திற்கே வந்து உங்களை பிக்கப் செய்துகொள்வார்கள்.

ஆர்பூல் சேவைக்கு எப்படி கட்டணம் செலுத்துவது?

ஆர்பூல் சேவைக்கு எப்படி கட்டணம் செலுத்துவது?

ஆர்பூல் சேவைக்குக் கட்டணமாக ஆர்பூல் பாயிண்ட்ஸ்களை மட்டுமே நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆர்பூல் செயலி மூலம் பணம் செலுத்தி ஆர்பூல் பாய்ண்ட்ஸ்களை உங்கள் கணக்கில் வைத்துக்கொள்ளலாம். ஆர்பூல் சேவையின் படி உங்களின் 1 ரூபாய், 1 ஆர்பூல் பாயிண்டாக மாற்றப்பட்டு உங்கள் ஆர்பூல் அக்கௌன்ட்டில் சேமித்து வைக்கப்படும்.

அப்படி என்னதான் இருக்கு இந்த ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில்... பார்க்கலாமாங்க !அப்படி என்னதான் இருக்கு இந்த ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில்... பார்க்கலாமாங்க !

ஆர்பூல் சேவை பாதுகாப்பானதா?

ஆர்பூல் சேவை பாதுகாப்பானதா?

ஆர்பூல் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் அவர்களின் முழு விபரங்களை கொடுத்தாக வேண்டும். இதில் எந்தவித ஏமாற்றமும் இருக்காது என ரெட்பஸ் தெரிவித்துள்ளது. உங்கள் ஓட்டுனருக்கு நீங்கள் கால் செய்தால் உங்களின் எண்கள் அவர்களுக்குச் செல்லத்தப்படி உங்களுடைய எண்கள் போன் மாஸ்கிங் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் செல்லும் வாகனத்தின் முழு விபரம் மற்றும் லைவ் லொக்கேஷன் அனைத்தும் உங்கள் குடும்பத்தினருக்கு பகிர்ந்துகொள்ளலாம்.

ஆர்பூல் சேவையின் பயன்கள் என்ன?

ஆர்பூல் சேவையின் பயன்கள் என்ன?

ஆர்பூல் சேவையினால், நிச்சயம் நகரங்களில் ஏற்படும் டிராபிக் சிக்கல்கள் குறைக்கப்படும். ஒருவர் மட்டும் பயணிக்கும் வழியில் கூடுதலாக அதே வாகனத்தைப் பயன்படுத்தி 3 நபர்கள் செல்வது போக்குவரத்துக்கு நெரிசலைக் குறைக்கும். முக்கியமாக வாகன எண்ணிக்கைகளைக் குறைத்து சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்க முடியும். அதிகளவில் பணம் மற்றும் பெட்ரோல் சேமிக்கப்படும் என்று ரெட்பஸ் தெரிவித்துள்ளது.

உலகை மிரட்ட வருகிறது சாம்சங்கின் 292 இன்ச் 8கே டிவி.!உலகை மிரட்ட வருகிறது சாம்சங்கின் 292 இன்ச் 8கே டிவி.!

Best Mobiles in India

English summary
Redbus Launched New rPool App For Carpooling In Bengaluru Hyderabad And Pune : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X