ரியல்மி 5, ரியல்மி 5i மற்றும் ரியல்மி 5s பயனர்களுக்கு குட் நியூஸ்.. அட்டகாசமான நவம்பர் அப்டேட்..

|

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 5, ரியல்மி 5i மற்றும் ரியல்மி 5s ஆகிய மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு புதிய மென்பொருள் அப்டேட்டை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் நவம்பர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் என்ன-என்ன புதுப்பிப்புகள் செய்யப்பட்டுள்ளது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

ரியல்மி 5, ரியல்மி 5i மற்றும் ரியல்மி 5s பயனர்களுக்கு அப்டேட்

ரியல்மி 5, ரியல்மி 5i மற்றும் ரியல்மி 5s பயனர்களுக்கு அப்டேட்

ரியல்மி இணையதளத்தில் வெளியிடப்பட்ட சேஞ்ச்லாக் படி, ரியல்மி 5, ரியல்மி 5i மற்றும் ரியல்மி 5s ஸ்மார்ட்போன்களுக்கான சமீபத்திய மென்பொருள் அப்டேட் ஃபார்ம்வேர் வெர்ஷன் RMX1911EX_11.C.61 தற்பொழுது வெளியாகியுள்ளது. நவம்பர் மாத செக்யூரிட்டி பேட்ச் ஆண்ட்ராய்டு பாதுகாப்புடன் இந்த அப்டேட், அறியப்பட்ட பிழைகளையும் சரிசெய்கிறது மற்றும் போனின் நிலைத்தன்மையையும் மேம்படுத்துகிறது.

அப்டேட் உங்களுக்கு கிடைக்கிறதா என்பதை சரிபார்க்க

அப்டேட் உங்களுக்கு கிடைக்கிறதா என்பதை சரிபார்க்க

ரியல்மி பயனர்கள் சமீபத்திய அப்டேட்டை சரிபார்க்க, உங்களின் ஸ்மார்ட்போனில் உள்ள மெனுவிற்கு சென்று செட்டிங்ஸ் கிளிக் செய்து, சாப்ட்வேர் அப்டேட் என்பதை கிளிக் செய்யுங்கள். ஆப் டிராயரில் பயனர் உள்நுழையும் போது கீபோர்டு காண்பிப்பதற்கான டாகில் மாற்றத்தை அப்டேட் கொண்டுவந்துள்ளது.

'லேப் வளர்ப்பு இறைச்சி' சாப்பிட ஒப்புதல் கிடைத்தது.. உண்மையில் இது மனிதர்களுக்கு நல்லது தானா?'லேப் வளர்ப்பு இறைச்சி' சாப்பிட ஒப்புதல் கிடைத்தது.. உண்மையில் இது மனிதர்களுக்கு நல்லது தானா?

அப்டேட் லிஸ்ட்

அப்டேட் லிஸ்ட்

சன்செட் டு சன்ரைஸ் கண் வசதிக்கான விருப்பத்தை சேர்க்கிறது மற்றும் ஸ்கிரீன்-ஆஃப் செய்யும் போது ஒளிரும் அம்சத்தையும் சேர்த்து அப்டேட் செய்துள்ளது. பிளாஷ் லைட் ஆப் செய்வதற்கான ஷார்ட் பிரஸ் அம்சத்தையும் அப்டேட் செய்துள்ளது. மேலும், ஸ்கிரீன்ஷாட் அமைப்பு பக்கத்தில் புதிய டாகில் பொத்தானை அமைத்துள்ளது மற்றும் ஸ்கிரீன்ஷாட் பிஃளொட்டிங் மாதிரிக்காட்சிக்கான பயன்முறையையும் மேம்படுத்தியுள்ளது.

பேஸ் ரோல் அவுட் அப்டேட்

பேஸ் ரோல் அவுட் அப்டேட்

இந்த அப்டேட் பேஸ் ரோல் அவுட் முறையில் ஒவ்வொரு கட்டமாக வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி 5 சீரிஸ் பயனர்களின் அனைத்து பயனர்களுக்கும் மிக விரைவில் அப்டேட் கிடைக்கும் என்றும் ரியல்மி நிறுவனம் கூறியுள்ளது. சிக்கலான பிழைகள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, வரும் நாட்களில் இது ஒரு பரந்த வெளியீட்டைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme 5, Realme 5i, Realme 5s receive new update in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X