வங்கி உத்தரவாதத்தை தர ஒப்புக்கொண்ட ஆர்.காம் நிறுவனம்!

தொலைதொடர்புத்துறையால் அனுப்பபட்ட நோட்டீஸ், "சட்டவிரோதமானது, தன்னிச்சையானது மற்றும் அதிகாரமற்றது " என குறிப்பிடுகிறது ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம்.

|

2016க்கு பின்னர் போட்டி மேகங்களால் சூழப்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேசன் தொலைதொடர்பு நிறுவனம், அனைத்து திசைகளிலும் இருந்தும் பிரச்சனைகளை எதிர்கொண்டு போராடி வருகிறது. தற்போது அந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்ச்சியை உள்ளடக்கிய புதிய வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் ஜியோ இன்போ காம் நிறுவனத்திற்கு அலைவரிசைகளை விற்கும் பொருட்டு, ரூ774 கோடி மதிப்புள்ள வங்கி உத்திரவாதங்களை தருவதாக அந்நிறுவனம் தொலைத்தொடர்பு துறையிடம் கூறியுள்ளது. இதன் மூலம் இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் பாக்கி வைத்துள்ள அலைவரிசைக்கான திரும்ப செலுத்தவேண்டிய தொகையை பூர்த்தி செய்யமுடியும் என நம்புகிறது.

வங்கி உத்தரவாதத்தை தர ஒப்புக்கொண்ட ஆர்.காம் நிறுவனம்!

இந்த அலைவரிசைகள் முறையே 2013 மற்றும் 2015ல் நடைபெற்ற ஏலத்தில், அடுத்த 18 வருடங்களுக்கு பணம் செலுத்திக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போதைய சூழ்நிலையில் இந்த தொலைதொடர்பு நிறுவனம் பணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் தற்போது வங்கி உத்தரவாதம் மூலம், அரசு ரூ15,000 கோடி வரையிலான பணத்திற்கு 10 ஆண்டுகள் உத்திரவாதம் பெறுகிறது.

இந்த புதிய அறிவிப்பு பற்றி தொலைதொடர்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரூ774 கோடி மதிப்பிலான வங்கி உத்திரவாதங்கள் மட்டுமின்றி, அடுத்த 15-16 ஆண்டுகளுக்கு எதிர்கால அலைவரிசை தொடர்பான அனைத்தையும் ஜியோ நிறுவனம் பார்த்துக்கொள்ளும் என, தொலைதொடர்பு துறைக்கு உத்திரவாதம் அளித்து இந்த வாரம் கடிதம் ஒன்று வந்துள்ளது"என தெரிவித்தார்.

வங்கி உத்தரவாதத்தை தர ஒப்புக்கொண்ட ஆர்.காம் நிறுவனம்!

கடந்த ஏப்ரல் மாதம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தால் சமர்பிக்கப்பட்ட ரூ900 கோடி மதிப்புள்ள வங்கி உத்தரவாதங்களை, உரிமம் தொடர்பான விதிமீறல் காரணமாக தொலைதொடர்புத்துறை ரொக்கமாக மாற்றிக்கொண்டது. அந்த வங்கி உத்திரவாதங்களுக்கு ஈடான புதிய உத்திரவாதங்களை ஜியோ நிறுவனம் மீண்டும் திரும்ப சமர்பிக்கவில்லை எனவும் தொலைதொடர்புத்துறை தெரிவித்துள்ளது. ஜியோ நிறுவனத்தை நோக்கி எழுப்பப்பட்ட எந்த கேள்விகளுக்கும் இன்னும் பதிலளிக்கப்படவில்லை. எனினும் ஆர்காம் நிறுவனம் தனது ரூ774 மதிப்புள்ள வங்கி உத்திரவாதங்களை திரும்ப அளிப்பதாக கடந்த வெள்ளி அன்று தெரிவித்தது அனைவரும் அறிந்ததே. அதேநாள், இந்த நிறுவனம் தொலைதொடர்புத்துறைக்கு எதிராக, அதன் உரிமங்களை ரத்து செய்ததற்காக, தொலைதொடர்புத்துறை தீர்பாயத்தில் முறையீடு செய்துள்ளது.

தொலைதொடர்புத்துறையால் அனுப்பபட்ட நோட்டீஸ், "சட்டவிரோதமானது, தன்னிச்சையானது மற்றும் அதிகாரமற்றது " என குறிப்பிடுகிறது ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம். மேலும், இந்த உரிமங்களை இரத்து செய்ததால், அந்நிறுவனத்தின் சொத்துக்களை ஜியோ நிறுவனத்திற்கு விற்பதில் குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த விற்பனை தான் வரும் நாட்களில் ஆர்காம் நிறுவனத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கவுள்ளது.

ஆகஸ்ட் 10 அன்று இவ்வழங்கின் விசாரணை முடியும் வரை எந்தவொரு ஏலத்தை நடத்த வேண்டாம் என தொலைதொடர்பு துறைக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே வங்கி உத்திரவாதங்களை தொலைத்தொடர்புத்துறை பணமாக மாற்றிவிட்டதாக ஆர்காம் நிறுவனம் தீர்பாயத்தில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தொலைதொடர்பு சந்தை பொருளாதார ரீதியாக முடங்கியுள்ள நிலையில், உரிமங்களை ரத்து செய்தால், அந்த அலைவரிசைகளை ஏலம் எடுக்க யாரும் இல்லை என்பதையும் ஆர்காம் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

தொலைதொடர்புத்துறையின் நிலைப்பாட்டை ஒப்புக்கொண்டுள்ள அத்துறையின் அதிகாரிகள், " உரிமங்களை ரத்து செய்வதால் எங்களுக்கு எதுவும் கிடைக்கப்போவது இல்லை. ஆனால் அதனால் பணத்தை இழப்போம்" என்றனர்.

வங்கி உத்தரவாதத்தை தர ஒப்புக்கொண்ட ஆர்.காம் நிறுவனம்!

எரிக்சன் நிறுவனத்துடன் செய்த வர்த்தகத்தால், ஆர்காம் நிறுவனமும், அதன் ஒரு நிறுவனரும், சில குறு முதலீட்டாளர்களும் கூட திவாலானது நினைவுகூறத்தக்கது. மேலும் உச்சநீதிமன்றமும், ஆர்காம் நிறுவனத்தின் வயர்லெஸ் சொத்துக்களை ஜியோவிற்கு விற்க பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனத்தின் மாபெரும் கடன்களை அடைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.
Best Mobiles in India

English summary
RCom Admits to Furnishing Bank Guarantees of Rs 774 Crore Also Contests DoT Notice in TDSAT Today: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X