டிக்டாக் செயலியை உடனே தடை செய்யுங்கள்: ராமதாஸ் கோரிக்கை.!

புதிய விதிமுறைகள் கொண்டுவந்து கண்காணிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட வேண்டும்.

|

டிக் டாக் மொபைல் செயலியை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்று தான் கூறவேண்டும், இந்த செயலி சமூக சீரழிவுக்கு வழிவகுப்பதால் உடனே தடை செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.

டிக்டாக் செயலியை உடனே தடை செய்யுங்கள்:  ராமதாஸ் கோரிக்கை.!

குறிப்பா இந்த டிக்டாக் செயலி பிடித்த பாடல்களுக்கு நடனம் ஆடவும்,பின்பு பிடித்த வசனங்களை வாயசைத்து பதிவு செய்யவும் தான் பயன்படுகிறது. இந்த செயலியைப் பயன்படுத்தி பலர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுகிறார்கள்.

மக்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த தொடங்கப்பட்ட இந்த டிக்டாக் செயலி தற்போது ஆபாச களஞ்சியமாக மாறிவிட்டதாகவும், பயனாளிகள் பதிவிடும் உள்ளடங்களுக்கு கட்டுப்பாடோ, தணிக்கையோ இல்லை என்பதால்
இளம்பெண்கள் பலரும் அருவருக்கத்தக்க அங்க அசைவுகளைப் பதிவு செய்வது அதிகரித்து இருப்பதாக ராமதாஸ் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்.

டிக்டாக் செயலியை உடனே தடை செய்யுங்கள்:  ராமதாஸ் கோரிக்கை.!

மேலும் இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைய தலைமுறையினரை சீரழிக்கும் சக்தியாக இந்த டிக்டாக் செயலி மாறி இருப்பதாகவும் புகார் கூறியுள்ளார்.

டிக்டாக் செயலியை உடனே தடை செய்யுங்கள்:  ராமதாஸ் கோரிக்கை.!

குறிப்பாக 16 வயதிற்கும் குறைவான சிறுவர்களுக்கு இந்த செயலியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் கணினி மற்றும் நெட்வொர்க் கண்காணிப்பு துறை பரிந்துரைத்துள்ளது.

டிக்டாக் செயலியை உடனே தடை செய்யுங்கள்:  ராமதாஸ் கோரிக்கை.!

இத்தகைய ஆப் பயன்பாடுளை கொண்டு கவனத்தை திசை திருப்பினால், இளைஞர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும். பின்பு இத்தகைய கவனத்தை திசைதிருப்பும் செயலிகளை தடுக்க, புதிய விதிமுறைகள் கொண்டுவந்து கண்காணிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட வேண்டும். மேலும் டிக்டாக் ஆப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Ramadoss demands ban on TikTok app says it leads to social disaster : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X