Home
Apps

முன்பதிவில்லா டிக்கெட் புக் செய்ய மொபைல் செயலி : அசத்தும் ரெயில்வே.!

யூ.டி.எஸ் கவுன்டர்களின் மூலமோ அல்லது https://www.utsonmobile.indianrail.gov.in இணையதளத்தில் உள்ள ரீசார்ஜ் வசதியின் மூலமோ ஆர்-வாலட்டிற்கு பணம் ரீசார்ஜ் செய்யலாம்.

By Vivek Sivanandam

முன்பதிவில்லா டிக்கெட்களை புக் செய்வது, கேன்சல் செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது இந்தியன் ரெயில்வே.

முன்பதிவில்லா டிக்கெட் புக் செய்ய மொபைல் செயலி : அசத்தும் ரெயில்வே

ரெயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த செயலியின் மூலம் சீசன் மற்றும் ப்ளேட்பார்ம் டிக்கெட்களையும் வாங்கவும், புதுப்பிக்கவும் முடியும். மேலும் ஆர்-வாலட்டில் இருப்பை சரிபார்க்கவும், இருப்பில் பணத்தை சேர்க்கவும் முடியும். அதுமட்டுமின்றி பயனர்களின் கணக்கையும், டிக்கெட் முன்பதிவு செய்த வரலாற்றை மேலாண்மை செய்யவும் முடியும்.

ஆண்ராய்டு

ஆண்ராய்டு

ரெயில்வே தகவல் அமைப்பு மையம்(Centre for Railway Information System ) உருவாக்கியுள்ள உட்சான்மொபைல்(utsonmobile) என்று அழைக்கப்படும் இந்த செயலி ஆண்ராய்டு மற்றும் விண்டோஸ் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது. பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் விண்டோஸ் ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மொபைல் எண்

மொபைல் எண்

முதலில் பயணிகள், அவர்களின் மொபைல் எண், பெயர், ஊர், பதிவுசெய்யவுள்ள ரெயிலின் வகை, பெட்டி வகை, டிக்கெட் வகை, பயணிகளின் எண்ணிக்கை, அதிகமாக பயன்படுத்தும் ரயில் வழித்தடங்கள் போன்ற தகவல்களை பதிவு செய்ய வேண்டும். வெற்றிகரமாக பதிவு செய்த பின்பு, பயணியின் ரெயில்வே வாலட் (ஆர்-வாலட்) பூஜ்ய பண இருப்புடன் தானாக உருவாக்கப்படும். இதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை.

முன்பதிவில்லா டிக்கெட்

முன்பதிவில்லா டிக்கெட்

யூ.டி.எஸ் கவுன்டர்களின் மூலமோ அல்லது https://www.utsonmobile.indianrail.gov.in இணையதளத்தில் உள்ள ரீசார்ஜ் வசதியின் மூலமோ ஆர்-வாலட்டிற்கு பணம் ரீசார்ஜ் செய்யலாம். இந்த செயலியானது, முன்பதிவில்லா டிக்கெட்களை பதிவு செய்வதற்காக மட்டுமே என்பதால் முன்கூட்டியே டிக்கெட்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

காகித வடிவில்

காகித வடிவில்

மேலும் பயணிகள் பயணத்தின் போது காகித வடிவில் டிக்கெட்களை எடுத்துசெல்ல வேண்டிய அவசியமில்லை. டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட்களை சரிபார்க்கும் போது, பயணிகள் இந்த செயலியில் உள்ள 'Show Ticket' எனும் வசதியை பயன்படுத்தி டிக்கெட்டை காண்பிக்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Railways introduces mobile app to book unreserved tickets: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X