Home
Apps

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து பப்ஜி நீக்கம்!

இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து பப்ஜி தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சமூக வலைத்தளங்களில் மக்கள் தீவிரமாக பகிர்ந்து வருகின்றனர்.

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் பப்ஜி நீக்கம்!

தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதி 118 சீன பயன்பாடுகளை இந்தியா தற்பொழுது தடை செய்துள்ளது. இதில் பிரபல விளையாட்டு கேமிங் ஆப்பான பப்ஜி பயன்பாடும் தடை செய்யப்பட்டுள்ளது. டிக்டாக் பயன்பாட்டிற்கு அடுத்தபடியாக பப்ஜி இப்பொழுது தடை செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களின் மத்தியில் பிரபலான இந்த பப்ஜி ஆப்பானது, ஊரடங்கு காலத்தில் மட்டும் 17.5 கோடிக்கும் மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் பப்ஜி நீக்கம்!

சர்வதேச அளவில் ஒப்பிடுகையில், இந்தியாவில் தான் பப்ஜி கேமை அதிகப்படியானோர் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த பப்ஜி கேமிற்கும் தடை விதிக்கப்பட்டதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோரில் இருந்து பப்ஜி கேம் நீக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் பப்ஜி நீக்கம்!

இருப்பினும், ஏற்கனவே பப்ஜியை பதிவிறக்கம் செய்தவர்கள் மட்டும் இப்பொழுது கேமை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதற்கு பின் பப்ஜி கேம் தொடர்பான எந்தவித புதிய அப்டேட்டையும் இவர்கள் பெறமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு டிக்டாக் தடை செய்யப்பட்ட போது, இந்தியாவில் அதன் சர்வரும் நிறுத்தப்பட்டது.

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் பப்ஜி நீக்கம்!

அதே போல், பப்ஜி கேம் சர்வர் எப்பொழுது முற்றிலுமாக நிறுத்தப்படும் என்பது சரியாக தெரியவில்லை, ஒருவேளை அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் டிக்டாக் பயனர்களுக்கு நேர்ந்த அதே அவலநிலைமை தான் பப்ஜி பயனர்களுக்கும் நிகழும் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
PUBG removed from apple app store and google play store in india : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X