Home
Apps

PUBG மொபைல் கேம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா?

மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான PUBG மொபைல் கேம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேமை விளையாட முயன்ற பயனர்களுக்கு இந்த தற்காலிகமாக இடைநிறுத்த தகவல் கேமின் ஹோம் ஸ்கிரீனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக பப்ஜி நிறுவனம் இந்த தற்காலிகமாக இடைநிறுத்தத்தை உலகம் முழுதும் அறிவித்தது என்று தெரியுமா? வாருங்கள் சொல்கிறோம்.

பப்ஜி மொபைல் கேம்

பப்ஜி மொபைல் கேம்

கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கக்கூடிய இந்த பப்ஜி மொபைல் கேமை மில்லியன் கணக்கான பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த கேமை திறக்கும்போது பயனர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு காண்பிக்கப்படுகிறது. அந்த தகவலில் PUBG இன் சேவையகங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, விளையாடுவதற்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தது.

இடைநிறுத்தப்பட்டது ஏன்?

இடைநிறுத்தப்பட்டது ஏன்?

தற்காலிக இடைநீக்கம் ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 12 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 15, 12 மணி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் PUBG மொபைல் கேம் இடைநிறுத்தப்பட்டுள்ளதா? ஆம், இந்தியாவிலும் இந்த கேம் தற்பொழுது தற்காலிகமா இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இது உலகளாவிய சேவையக பணிநிறுத்தம் என்றும், PUBG மொபைல் கேமை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் அணுக முடியாது என்றும் டென்சென்ட் கேம்ஸ் அறிவித்துள்ளது.

கேம் ஆஃப் பீஸ் பெயர்மாற்றம்

கேம் ஆஃப் பீஸ் பெயர்மாற்றம்

இந்தியா மட்டுமின்றி சீனா மற்றும் ஹாங்காங், மக்காவோ மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த கேமை அந்நிறுவனம் இடைநிறுத்தம் செய்துள்ளது. அங்கு PUBG மொபைல் என்ற பெயரை அந்நிறுவனம் "கேம் ஆஃப் பீஸ்" என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை வெய்போ தந்து பதிவில் விளக்கியுள்ளது.

காரணம்

காரணம்

வெய்போ இடுகையின் தெரிவிக்கப்பட்ட தகவல் "கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உயிர் நீத்தவர்களை" நினைவுகூரவும் மதிக்கவும் மற்றும் இரங்கல் தெரிவிக்க நிறுவனம் சேவையகங்களை மூடுவதாக அந்த இடுகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 5 ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு சேவையகங்கள் ஆன்லைனிற்கு திரும்பும் என்று தெரிவித்தது. அதே போல் நேற்று மீண்டும் பப்ஜி கேம் விளையாட கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
PUBG Mobile temporarily suspended Only Because Of This Reason Only : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X