ஜியோவுடன் கூட்டு சேருகிறதா PUBG MOBILE நிறுவனம்? 50:50 டீலா! இல்லை நோ-டீலா!

|

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை தாண்டிய பதட்டங்கள் காரணமாக, கடந்த மாதம் தடைசெய்யப்பட்ட இந்தியாவில் மிகவும் பிரபலமான பப்ஜி கேமை அந்நிறுவனம் மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவருவதற்காக ஜியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ

சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஒப்புதலுக்கான பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளது மற்றும் இரு நிறுவனங்களின் முனைகளிலிருந்தும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு வருகிறது என்று தகவல் கிடைத்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்குப் பாரபட்சமற்ற செயல்களில் ஈடுபடுவதால் பப்ஜி கேமிங் பயன்பாடு தடைசெய்யப்பட்டது.

விநியோக உரிமை

தடை செய்யப்பட்டதிலிருந்து, இந்தியாவில் கேமிற்கான விநியோக உரிமையை டென்செண்டிலிருந்து புதுப்பித்துள்ளதாக PUBG கார்ப்பரேஷன் கூறியுள்ளது, அதாவது PUBG நிறுவனம் இப்போது நமது நாட்டில் தனது சொந்த நிறுவனத்தை நிறுவ முன்னிறுத்தியுள்ளது. சமீபத்தில் டென்சென்ட், "பிளேயர் தரவின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நிறுவனத்திற்கு முன்னுரிமை அளிப்பதால் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம்." என்று கூறியுள்ளது.

SBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்! ADWM கூட இருக்கே!SBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்! ADWM கூட இருக்கே!

PUBG கார்ப்பரேஷன்

இதைச் சேர்த்து, இந்த விவகாரத்தை தீர்க்க இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. PUBG கார்ப்பரேஷன் தனது அறிக்கையில் கூறியதவாது, "சமீபத்திய முன்னேற்றங்களின் வெளிச்சத்தில், இந்தியாவில் டென்சென்ட் விளையாட்டுக்களுக்கு PUBG MOBILE உரிமையை இனி அங்கீகரிக்கும் முடிவை PUBG கார்ப்பரேஷன் எடுத்துள்ளது.

நடவடிக்கை

PUBG கார்ப்பரேஷன் நாட்டிலுள்ள அனைத்து வெளியீட்டு பொறுப்புகளையும் ஏற்கும். நிறுவனம் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு தனது சொந்த PUBG அனுபவத்தை வழங்குவதற்கான வழிகளை ஆராய்கிறது, அதன் ரசிகர்களுக்கு உள்ளூர்மயமாக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான விளையாட்டு சூழலைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலம் நடவடிக்கை எடுக்க நிறுவனம் உறுதி பூண்டுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஷார்! ஆன்லைன் லோன் எடுத்த பெண்! மொபைலுக்கு வந்த அவரின் 'அந்த' புகைப்படம்!உஷார்! ஆன்லைன் லோன் எடுத்த பெண்! மொபைலுக்கு வந்த அவரின் 'அந்த' புகைப்படம்!

50:50 ஆக இருக்கும்

இரு நிறுவனங்களும் வருவாய் பிரிக்கும் செயல்முறையைச் செய்வதில் ஈடுபடும் என்றும் சில அறிக்கைகள் கூறுகின்றன. இப்போது, ​​பங்கின் பிளவு 50:50 ஆக இருக்கும் அல்லது ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு வருவாய் ஈட்ட ஜியோ, பப்ஜி கேமிற்கு உத்தரவாதம் அளிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 xCloud கேம் ஸ்ட்ரீமிங்

இந்த ஒப்பந்தம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், இது வெற்றிகரமாக நடப்பதற்கான வாய்ப்புக்களும் உண்டு, நடக்காத வாய்ப்புகளும் உண்டு என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் வெற்றிபெற்றால், ஜியோ கேமிங் துறையில் களமிறங்கவும், அதை விரிவுபடுத்தவும் மைக்ரோசாப்ட் ஜியோவுடன் கூட்டு சேர்ந்து அதன் திட்ட xCloud கேம் ஸ்ட்ரீமிங் சேவையை இந்தியாவில் தொடங்க உதவும் என்று தகவல்கள் வெளியாகிவருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
PUBG Corporation In Talk With Reliance Jio To Bring Back PUBG Mobile To India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X