PUBG மொபைல் கேம் பயன்படுத்த 2.2 மில்லியன் பயனர்களுக்கு தடை! காரணம் இது தான்!

|

நாட்டில் மோசடி செய்வது என்பது அதிகரித்துவிட்டது, எல்லா துறையிலும் ஏதேனும் சில மோசடிகள் நடைபெற்றுத் தான் வருகிறது. மொபைல் கேமில் கூட இந்த காலத்தில் மோசடி நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது என்று அதிக புகார்கள் பதிவாகியுள்ளது. குறிப்பாக பப்ஜி மொபைல் கேமில் மோசடிகள் அதிகரித்துள்ளது. இதற்கு டென்சென்ட் நிறுவனம் அதிரடியாக ஒரு தடை நடவடிக்கையை எடுத்துள்ளது.

PUBG மொபைல் கேம்

PUBG மொபைல் கேம்

எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி அதில் ஏமாற்றப்படுவதை அனைவரும் வெறுக்கிறார்கள். அப்படிதான் பப்ஜி கேமிலும், சில கேமர்கள் கேமிங் சீட்(cheat) கோடுகளை பயன்படுத்துவதால் மற்ற விளையாட்டு பயனர்களை இது மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது. இதற்காக, டென்செண்டின் PUBG மொபைல் மீட்பு குழு ஒரு அதிரடி நடவடிக்கையுடன் பயனர்களின் கவலைகளுக்குத் தீர்வு கண்டுள்ளது.

PUBG மொபைல் சீட்டிங்

PUBG மொபைல் சீட்டிங்

புகழ்பெற்ற பேட்டில் ராயல் கேம் விளையாட்டின் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்றானது PUBG மொபைல் சீட்டிங் தான். இந்த மோசடி சமீப காலத்தில் அதிகரித்துவிட்டது. கேமில் வெற்றி பெற மக்கள் பொருத்தமற்ற நடவடிக்கைகளை கேமில் பயன்படுத்துகின்றனர். இதனால் கேமின் விளையாட்டு அனுபவம் பாதிக்கப்படுகிறது. சீட்டிங் இல்லாத அனுபவத்தை வழங்க டென்சென்ட் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

13 வயது மாணவன் உருவாக்கிய ஆப்ஸ்-க்கு கூகிள் 28 ஆண்டு ஒப்பந்தம்! என்ன ஆப் தெரியுமா?13 வயது மாணவன் உருவாக்கிய ஆப்ஸ்-க்கு கூகிள் 28 ஆண்டு ஒப்பந்தம்! என்ன ஆப் தெரியுமா?

2.2 மில்லியன் பப்ஜி அக்கௌன்ட் தடை

2.2 மில்லியன் பப்ஜி அக்கௌன்ட் தடை

டெவலப்பரின் சமீபத்திய நடவடிக்கை, ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 27ம் தேதி ஆகியன இடைப்பட்ட 1 வார காலத்தில், உலகளவில் உள்ள 2.2 மில்லியன் பப்ஜி பயனர்களை சீட்டிங் செய்த குற்றத்திற்காக கேமில் இருந்து நிறுவனம் தடை செய்துள்ளது. இந்த செய்தியை நிறுவனம் PUBG மொபைலின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

1.4 மில்லியன் பயனர் சாதனங்களுக்கும் தடை

1.4 மில்லியன் பயனர் சாதனங்களுக்கும் தடை

PUBG மொபைல் கேம் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ட்வீடில் கூறப்பட்டது "ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 27ம் தேதி வரை, 2,273,152 பயனர் கணக்குகள் மற்றும் 1,424,854 பயனர் சாதனங்கள் PUBG கேம் விளையாட்டை அணுகுவதை நிரந்தரமாகத் தடை செய்துள்ளது. தடை செய்யப்பட்ட பயனர் கணக்குகள் மற்றும் சாதனங்கள் குறிப்பிட்ட சீட்டிங் காரணத்திற்காகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp அழகிகளால் ஏற்படும் புதிய சிக்கல்! உஷராக இருங்கள் இல்லைன்னா இதுதான் கதி!WhatsApp அழகிகளால் ஏற்படும் புதிய சிக்கல்! உஷராக இருங்கள் இல்லைன்னா இதுதான் கதி!

காரணம் இது தான்

காரணம் இது தான்

தடை செய்யப்பட்டுள்ள கணுக்காலில் 12% பேர் ஸ்பீட் சீட்டிங் பயன்படுத்தியதற்காக நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 22% பேர் மற்ற சீட்டிங் பயன்பாட்டிற்காகவும், 27% பேர் ஆட்டோ-ஏம் சீட்டிங்கிற்காகவும், 32% பேர் எக்ஸ்-ரே விஷன் சீட்டிங் அனுபவத்தை கேமில் மேற்கொண்டதற்காகவும் நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை நிச்சயமாக அனைத்து வீரர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
PUBG bans 2.2 million players who have caught cheating : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X