உங்களது ஆண்ட்ராய்டு ஆப்ஸ்-ல் ஏதேனும் பிரச்சனையா? எப்படி சரிசெய்வது? இதோ வழிமுறைகள்.!

|

உலகம் முழுவதும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை தான் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஐபோன்களை விட ஆண்ட்ராய்டு போன்கள் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பதால் அதிக மக்கள் இந்த ஆண்ட்ராய்டு சாதனங்களை தேர்வு செய்கின்றனர்.

 சாம்சங் ஸ்மார்ட்போன்களில் இந்த புதிய சிக்கல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சியோமி,சாம்சங் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு அவர்களின் போனில் உள்ள சில ஆப் வசதிகள் சரியாக வேலைசெய்யாமல் செயலிழப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் ரெடிட் தளத்தில் வெளியான தகவலின்படி, பல்வேறு சாம்சங்ஸ்மார்ட்போன்களில் இந்த புதிய சிக்கல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

செயலிழப்புகளுக்கு காரணம்

செயலிழப்புகளுக்கு காரணம்

குறிப்பாக இந்த ஆப் செயலிழப்புகளுக்கு காரணம் வலைப்பக்கம் உள்ளடக்கத்தைக் காண்பிக்கப் பயன்படும் Android System WebView இல் உள்ள சிக்கல் தான் என்று தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் 'இதயத் துடிப்பு' மனிதர்களை பாதிக்கிறதா? ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் ரிப்போர்ட்..பூமியின் 'இதயத் துடிப்பு' மனிதர்களை பாதிக்கிறதா? ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் ரிப்போர்ட்..

 அமேசான், ஜிமெயில்

அமேசான், ஜிமெயில்

அதிலும் சாம்சங் கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி ஏ71, கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி ஏ50 போன்ற ஸ்மார்ட்போன்களில் இந்த சிக்கல்கள் அதிகமாக உள்ளதாக தெரிகிறது. மேலும் சில சாம்சங் வாடிக்கையாளர்கள் தங்களது
ஸ்மார்ட்போன்களில் அமேசான், ஜிமெயில், கூகுள் உள்ளிட்ட பல்வேறு ஆப் பயன்பாடுகள் செயலிழப்பதாக தகவல்தெரிவித்துள்ளனர்.

காலம் மாறி போச்சு: குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி- அதிகரிக்கும் ஓடிடி கட்டண சந்தாதாரர்கள்- எது சிறந்தது?காலம் மாறி போச்சு: குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி- அதிகரிக்கும் ஓடிடி கட்டண சந்தாதாரர்கள்- எது சிறந்தது?

, மோட்டோரோலா, கூகிள்

அதேபோல் சில சியோமி, மோட்டோரோலா, கூகிள் பிக்சல், ஹுவாய் போன்ற ஸமார்ட்போன்களும் இந்த ஆப் சிக்கலை எதிர்கொள்கின்றன என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிக்கல் புதிய மற்றும் பழைய ஸ்மார்ட்போன்கள் என
அனைத்தையுமே பாதிப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் மட்டும் போதும் ஐபிஎல் 2021 இலவசமாக பார்க்கலாம்: வரம்பற்ற டேட்டாவுடன் VI அறிமுகம் செய்த திட்டங்கள்!ரீசார்ஜ் மட்டும் போதும் ஐபிஎல் 2021 இலவசமாக பார்க்கலாம்: வரம்பற்ற டேட்டாவுடன் VI அறிமுகம் செய்த திட்டங்கள்!

Restart செய்வதன்

தொடர்ந்து கூகுள் நிறுவனம் இந்த சிக்கலை சரி செய்வதற்கான வேலையை செய்து வருகிறது என்று கூறப்படுகிறது. அதேபோல் கூகுள் நிறுவனம் ஒரு தீர்வை உருவாக்கும் வரைஸ்மார்ட்போன்களில் ஆப் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறும் பயனர்கள் வெப் வியூ புதுப்பிப்பை அகற்றி ஸ்மார்ட்போனை Restart செய்வதன் மூலம் இந்த பிரச்சனை இல்லாமல் இருக்கலாம். மேலும் இதன்வழிமுறைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

உஷார் மக்களே: மார்ச் 31 கடைசி- ஆதார், பான் கார்டு இணைக்காவிட்டால் அபராதம்: எப்படி இணைப்பதுஉஷார் மக்களே: மார்ச் 31 கடைசி- ஆதார், பான் கார்டு இணைக்காவிட்டால் அபராதம்: எப்படி இணைப்பது

வழிமுறை

வழிமுறை

வழிமுறை-1
முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் உள்ள Settings பகுதிக்கு சென்று Apps-ஐ தேர்வு செய்யவும்.

வழிமுறை-2
அடுத்து ஆப் பகுதியில் உள்ள Android System WebView என்பதை தேர்வு செய்யவும்.

வழிமுறை-3
Android System WebView என்பதை தேர்வு செய்தவுடன்,மேல் வலது முலையில் உள்ள மூன்று புள்ளிகளை கொண்ட பொத்தானை கிளிக் செய்வும்.

வழிமுறை-4
அதன்பிறகு Uninstall Updates என்பதை கிளிக் செய்தால் போதும். அவ்வளவுதான்.

ஆனாலும் இந்த வழிமுறைகள் சில ஆப் பயன்பாடுகளை மட்டுமே சரி செய்கிறது என்று ரெடிட்டில் உள்ள சில பயனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Problems with your Android apps? How to fix? Here are the steps!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X