சிங்கிள்ஸ்களை சேர்த்தும் வைக்கும் நடிகை பிரியங்கா புதிய தொழில் துவங்கினார்.!
ஆண்களே இல்லை பெண்களே இனி இந்தியாவில் டேட்டிங் செய்ய பம்பிள் என் ஆப் விரைவில் அறிமுகமாக இருக்கின்றது. இதில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தனியாக இருக்கும் ஆண்களுக்கோ இல்லை பெண்களுக்கோ டேட்டிங் செய்ய ஏதுவாக நடிகை பிரியங்கா சோப்ரா அதில் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

இனி சிங்கிளா இருக்க நாம இனிமேல் ஜோடியாவும், ஹாயாவும் சுத்தரதுக்கும் இந்த நடிகை காரணமா இருப்பாங்க. இனி ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ண வேண்டியது இல்லை. நாமளே பிடித்து இருந்தா பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கலாம். இல்லாட்டி பிரியா விட்டர்லாம் பா.

பம்பிள் டேட்டிங் ஆப்:
ஆண்களே இல்லை பெண்களே இனி இந்தியாவில் டேட்டிங் செய்ய பம்பிள் என் ஆப் விரைவில் அறிமுகமாக இருக்கின்றது. இதில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு இல்லை:
இந்தியாவில் பெண்களுக்கு டேட்டி செய்ய ஆப்களில் பாதுகாப்பு இல்லை. இதனால் பெண்களில் நலன் கருதி இந்தியாவில் டேட்டிங் ஆப்பை தொடங்க இருப்பதாக பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர், ஆலோசகர்:
பம்பிள் ஆப்பில் முதலீட்டாளர் மற்றும்ஆலோசகர் ஆகவும் பங்குதாராகவும் பிரியங்கா சோப்ரா இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பெண்களின் காதல், நட்பு, வேலை உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கபடுகின்றது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அவர் முதலீடு செய்கின்றேன் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லைக்கு குட்பை:
பாலியல் தொல்லைகளுக்கு இனி இந்த வலைதளத்தில் சிக்காமல் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications