Home
Apps

சிங்கபூரில் மோடி அறிமுகம் செய்த இந்தியாவின் 3 மொபைல் செயலிகள்.!

இதற்கு முன்னதாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுவை சந்தித்து பேசினார் மோடி அவர்கள், அதில் இந்தியாவிற்கும் மலேசியாவிற்குமான நட்புறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

By Prakash S

இந்திய பிரதமர் மோடி அவர்கள் நேற்று நடந்த சிங்கபூர் மெரினா பே சாண்ட்ஸ் கருத்தரங்க மையத்தில் தொழில்நுட்ப கண்காட்சியை நேற்று பார்வையிட்டார், அப்போது இந்தியாவின் மூன்று பரிவர்ததனை செயலிகளான BHIM, RuPay, SBI போன்றவற்றை அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கபூரில் மோடி அறிமுகம் செய்த இந்தியாவின் 3 மொபைல் செயலிகள்.!

பிரதமர் மோடி அவர்கள் சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் 5நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 25-ம் தேதி சென்றார், இந்நிலையில் பயனத்தின் ஒருபகுதியாக சிங்கப்பூர் சென்ற மோடி அவர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு சிங்கப்பூர், மலேசியா தொழில்அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ் கருத்தரங்க மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கண்காட்சியை பார்வையிட்டார். அதன்பின்பு தொழில் முனைவோருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மேலும் பிரதமரை வரவேற்க்கும் விதமாக இந்தியாவின் கலாச்சார நடனங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் போன்றவை அரங்கேற்றப்பட்டன.

சிங்கபூரில் மோடி அறிமுகம் செய்த இந்தியாவின் 3 மொபைல் செயலிகள்.!

மேலும் இந்நிகழ்ச்சியில் மோடி அவர்கள் தெரிவித்தது என்னவென்றால் புரட்சியை நோக்கி இந்தியா சென்றுக் கொண்டிருப்பதால் இளைஞர்களின் எண்ணங்கள் நிறைவேறும், எனவே சிங்கப்பூர் தொழில்அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு கூறினார்.

How to check PF Balance in online (TAMIL)

இதற்கு முன்னதாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுவை சந்தித்து பேசினார் மோடி அவர்கள், அதில் இந்தியாவிற்கும் மலேசியாவிற்குமான நட்புறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவை அடுத்து சிங்கப்பூர் சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிங்கபூரில் மோடி அறிமுகம் செய்த இந்தியாவின் 3 மொபைல் செயலிகள்.!

எஸ்பிஐ-யின் சிங்கப்பூர் கிளையானது, இந்த புதிய முறைமைகளை NPCI உடன் இணைந்து செயலாற்றுவதில் முதன் முதலில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செயலிகள் மக்களுக்கு பல்வேறு வகையில் உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
PM Modi Launches BHIM, RuPay And SBI App In Singapore: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X